search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinking Water Supply"

    • குடிநீர் விநியோகத்தில் போதிய அழுத்தம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போக்குவதற்கு கம்பிரசர் மூலம் உந்தப்பட்டு குடிநீர் விநியோகம் சீர் செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அன்னை நகரில் 4 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவருமான சிவாவிடம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் அளித்தனர்.

    உடனடியாக அன்னை நகருக்கு பொது பணிதுறை அதிகாரிகளுடன் நேரில் சென்ற எதிர்க்கட்சி தலைவர் குடிநீர் பிரச்சனையை போக்குவதற்குரிய வழிமுறைகளை ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் விநியோகத்தில் போதிய அழுத்தம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை போக்குவதற்கு கம்பிரசர் மூலம் உந்தப்பட்டு குடிநீர் விநியோகம் சீர் செய்யப்பட்டது. மேலும், அப்பகுதியில் குடிநீர் தொடர்ந்து தட்டுப்பாடு ஏற்படாதவாறு ஆழ்துளை கிணறு அமைக்கவும் ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆலோசனை வழங்கினார்.

    • குழாய் பழுதடைந்து விட்டதால் பழுது சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்கள் விநியோகிக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்க கொள்ள வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாநகராட்சி சென்னிமலை சாலை மற்றும் ஈ.வி.என்.சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியின் போது பிரதான குடிநீர் விநியோக குழாய் பழுதடைந்து விட்டதால் பழுது சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் காரணமாக ஈரோடு மாநகராட்சி 3-ம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 51-ல் உள்ள இ.எம்.எம். மெயின் வீதி, இ.எம்.எம். வீதி, மணல்மேடு வீதி, சென்னிமலை சாலை,

    4-ம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 52-ல் உள்ள ஈஸ்வரன் வீதி, கள்ளியங்காடு பகுதி, பட்டக்காரர் வீதி, தங்கபெருமாள் வீதி, ஜீவானந்தம் சாலை, புதுமை காலனி ஆகிய பகுதிகளில் இன்று (12-ந் தேதி), நாளை (13-ந் தேதி) 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்க கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
    • குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் பற்றி எடுத்துக் கூறினார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை வகித்து இன்றியமையாத தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டு கொண்டார்.

    முன்னதாக செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

    இதில் ஊராட்சி துறை சார்பில், பணி மேற்பார்வையாளர் அமுதா கலந்து கொண்டு, குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் பற்றி எடுத்துக் கூறினார்.

    சுகாதார ஆய்வாளர் பழனியப்பன், நீரினால் பரவும் நோய்கள் பற்றியும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் பற்றி எடுத்துக் கூறினார்.

    சுகாதார ஆய்வாளர் பாலசண்முகம், கிராம சுகாதார செவிலியர் கலைமணி ஆகியோர் சுகாதாரத் துறை அன்றாடம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு சிறுதான்யம் பயன்படுத்த வேண்டும் என்று தலைப்பிட்டு பேசினார்.

    துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள்.

    • வ.உ.சி பூங்கா மேல்நிலைத்தொட்டி வளாகத்திற்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    பெரியகுளம் நகராட்சி தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து வ.உ.சி பூங்கா மேல்நிலைத்தொட்டி வளாகத்திற்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 16 மற்றும் 17-ந்தேதி காலை மற்றும் மாலை வேளைகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குடிநீர் விநியோகத்திற்கு இடையூறு செய்தது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை அடுத்த கரிக்காப்பட்டி ஊராட்சி தாண்டான்வளவில் 3 சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 35), அவரது மனைவி செல்வி(27) மற்றும் பொன்னுவேல் மனைவி சித்ரா(35) ஆகியோர் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வரவில்லை.

    இதனால் மற்ற பகுதிகளுக்கும், குடிநீர் விநியோகிக்ககூடாது என இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஜலகண்டாபுரம் போலீசார், மேற்கண்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக நங்கவள்ளி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வெங்கடேசன்(40) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #tamilnews
    ×