search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேஸ்வரம் ரெயில் சிவகங்கையில் நின்று செல்லும். - திருப்பதி, பாலக்காடு ரெயில் இயக்கத்தில் மாற்றம்
    X

    கோப்பு படம்.

    ராமேஸ்வரம் ரெயில் சிவகங்கையில் நின்று செல்லும். - திருப்பதி, பாலக்காடு ரெயில் இயக்கத்தில் மாற்றம்

    • கோவை- ராமேஸ்வரம் வாராந்திர ெரயில், சிவகங்கையிலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • சித்தூர், திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு ரெயில் செல்லாது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


    திருப்பூர்:

    கோவை- ராமேஸ்வரம் வாராந்திர ரெயில், சிவகங்கையிலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    கோவை- ராமேஸ்வரம் (16618) வாராந்திர ரெயில், கோவை ரெயில் நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய் இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:45க்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

    மறுமார்கத்தில் ராமேஸ்வரம்- கோவை (16617) ரெயில், புதன்தோறும் ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இரவு 8:13மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:30க்கு கோவை வந்தடையும். இந்த 2 ரெயில்களும் நாளை 18-ந் தேதி முதல் சிவகங்கை ரெயில் நிலையத்தில் சோதனை முயற்சியாக கூடுதலாக 2 நிமிடங்கள் நின்று செல்லும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பதி பிளாட்பார்மில் பராமரிப்பு, மேம்பாட்டு பணி நடப்பதால் ஸ்வர்ண ஜெயந்தி, மில்லினியம் சூப்பர்பாஸ்ட் ரெயில் 4 நாட்களுக்கு சித்தூர் திருப்பதி செல்லாது.

    ஆந்திர மாநிலம், திருப்பதி ரெயில் நிலைய பிளாட்பார்மில் (2 மற்றும் 3), மேம்பாட்டு பணியை தென் மத்திய ரெயில்வே ஒரு மாதம் மேற்கொள்கிறது.இதனால், 7 ரெயில்கள் முழுமையாகவும், 12 ரெயில் பாதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் இருந்து நிஜாமுதீன் செல்லும் ஸ்வர்ண ஜெயந்தி சூப்பர்பாஸ்ட் ரெயில் (எண்:12643) வருகிற 18, 25, ஆகஸ்டு 1, 8-ந் தேதி ஆகிய 4 நாட்கள், மேல்பாக்கம் வழியாக திருப்பி விடப்படும்.

    இதனால் சித்தூர், திருப்பதி நிலையங்களுக்கு ரெயில் செல்லாது. காட்பாடி - ரேணிகுண்டா வழித்தடத்தில் பயணிக்கும்.இதேபோல் எர்ணாகுளம் - நிஜாமுதீன் மில்லினியம் சூப்பர்பாஸ்ட் (எண்:12645) வருகிற 22, 29, ஆகஸ்டு 5ம் தேதி ஆகிய நாட்கள், மேல்பாக்கம் வழியாக திருப்பி விடப்படும். இதனால் சித்தூர், திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு ரெயில் செல்லாது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் பாலக்காடு- திருச்சி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    பாலக்காடு - திருச்சி (16844) ரெயில் தினமும் காலை 6:30 மணிக்கு பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருச்சிரெயில் நிலையத்திற்கு மதியம் 1:32க்கும் சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்சி - பாலக்காடு (16843) ரெயிலானது தினமும் மதியம் 2மணிக்கு திருச்சியில் புறப்பட்டு, இரவு 8:55க்கு பாலக்காடு வந்தடையும்.

    திருச்சி ரெயில் நிலையம் - திருச்சி கோட்டை ரெயில் நிலையம் இடையே தண்டவாள பணிகள் நடப்பதால் வருகிற 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பாலக்காடு- திருச்சி (16844) ரெயில் திருச்சி கோட்டை வரை இயக்கப்படும். திருச்சி ரெயில்வே நிலையம் செல்லாது.

    மறுமார்க்கத்தில் திருச்சி - பாலக்காடு (16843) ரெயிலானது திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×