search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதியுதவி"

    • லண்டனில் ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது.
    • இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் இதுவரை கோவில் கட்ட அதிக நிதியை யாரும் வழங்கியதில்லை.

    லண்டன்:

    ஒடிசாவை சேர்ந்தவர் பிஸ்வநாத் பட்நாயக். தொழிலதிபர். பைனஸ்ட் கம்பெனியின் நிறுவனரான இவர் லண்டனில் கோவில் கட்ட ரூ.250 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்நிதியில் லண்டனில் ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது.

    அட்சய திருதியையொட்டி இந்த நிதியுதவியை அவர் வழங்கினார்.

    இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் இதுவரை கோவில் கட்ட அதிக நிதியை யாரும் வழங்கியதில்லை. இவர்தான் முதன்முதலில் ரூ.250 கோடி வழங்கி யுள்ளார். இந்த கோவில் கட்ட ரூ.70 கோடியில் 15 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. லண்டனின் புறநகரில் இந்த கோவில் கட்டப்படுகிறது.

    ஓவேலி, தா்மகிரி ஆகிய பகுதிகளுக்கும் சென்ற பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆ.ராசா எம்.பி. மக்களை சந்தித்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

    தொடர்ந்து அள்ளூா்வயல் பகுதிக்குச் சென்ற அவா், யானைக் தாக்கி உயிரிழந்த பழங்குடியின முதியவா் கருமனின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் சொந்த நிதியை வழங்கினாா்.

    செம்பாலா, நந்தட்டி, சளிவயல் மற்றும் ஓவேலி, தா்மகிரி ஆகிய பகுதிகளுக்கும் சென்ற பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.

    அவருடன் மாவட்டச் செயலாளா் முபாரக், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாநில பொறியாளா் அணி துணை செயலாளா் பரமேஸ்குமாா், நகரச் செயலாளா் இளஞ்செழியன், தொ.மு.ச மண்டல பொதுச் செயலாளா் நெடுஞ்செழியன் ஆகியோரும் உடன் சென்றனர்.

    • தேவிபட்டினம் கடலில் மூழ்கி பலியான 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தெற்கு தொகுதியைச் சேர்ந்த நாகராஜ் மனைவி இருளாயி (வயது 55), இருளாண்டி மனைவி மணிமேகலை (50), முருகன் (33) ஆகியோர் கோவில் வழிபாட்டுக்காக ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு மூழ்கியது. இதில் 3 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோவில் வழிபாட்டுக்கு சென்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கடலில் மூழ்கி இறந்த சம்பவம் வேதனை தருகிறது. அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கடலில் மூழ்கி உயிரிழந்த இருளாயி, மணிமேகலை, முத்துமணி ஆகியோரது குடும்பங்களுக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எம்.எல்.ஏ. சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
    • முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 26-ந் தேதி லண்டனில் நடைபெறும் உலகக் கோப்பை சக்கர நாற்காலி போட்டியில் வினோத்பாபு தலைமையில் இந்திய அணி கலந்து கொள்கிறது. வறுமையில் உள்ள வினோத் பாபு லண்டன் செல்ல உதவி கேட்டு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர்- காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.விடம் உதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    அதன்பேரில் எம்.எல்.ஏ. கொடுத்த நிதியை வினோத்பாபு வீட்டுக்கு சென்று கடலாடி தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வழங்கினார். அப்போது கீழச்செல்வனூர் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 406 மனுக்கள் வரப்பெற்றன.
    • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவரது மனைவி சிக்கி என்பவருக்கு ரூ.1,00,000-க்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்ததாவது:-

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீ ர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 406 மனுக்கள் வரப்பெற்றன.

    அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், செங்கனூர் தரப்பு, ஜங்கமையனூர் கிராமத்தைச் சேர்ந்த (லேட்) முனிராஜ் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தமைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவரது மனைவி சிக்கி என்பவருக்கு ரூ.1,00,000-க்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வி.கே.சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜசேகரன், உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் ஆறுபேர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஒரு குடியிருப்பினை ஒதுக்கீடு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் கோகுல்ஸ்ரீ கடந்த 31-12-2022 அன்று மரணமடைந்ததைத் தொடர்ந்து, சிறுவனின் தாயார் பிரியாவுக்கு இழப்பீடாக 7.5 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவியாக ரூபாய் 2.5 லட்சம் ரூபாயும் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் வழங்கி ஆணையிட்டுள்ளார்.

    மேலும், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் ஆறுபேர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயார் பிரியா தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், அன்னை அஞ்சுகம் நகர் திட்டப்பகுதியில் தற்போது கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஒரு குடியிருப்பினை ஒதுக்கீடு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

    இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ரவியின் குடும்பத்தினருக்கும் ரூ.3 லட்சம் நிதியுதவி

    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம் பச்சைமலையான்கோட்டை கிராமம், பாலாஜி நகரில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் மேல்தளத்தில் வசித்து வந்த ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ரவியின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த சாமுவேல் ஜெயராஜ் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    • கொலை-கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
    • திருமணத்தை நடத்த 5 நாடு கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிதியுதவி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டையில் 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த வேலுமதி அவரது தாயார் கனகம் ஆகியோர் கொலை செய்யப்பட்டு வீட்டிலிருந்த 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கனகத்தின் பேத்தி திருமணத்திற்கு வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதால் அந்த குடும்பம் திருமணத்தை நடத்த வழி தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் 5 நாடு கிராம மக்கள் சார்பில் அந்த குடும்பத்திற்கு உதவுவதற்கு தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் 5 நாடு அம்பலத்தார்கள் கலந்து கொண்டனர்.

    இரட்டை கொலை-கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. திருமணத்தை நடத்த 5 நாடு கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிதியுதவி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. 

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 431 மனுக்கள் வரப்பெற்றன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

    கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 431 மனுக்கள் வரப்பெற்றன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் காதொலிக்கருவி வழங்க வேண்டி பெறப்பட்ட மாற்றுத்திறனாளி மனுதாரருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் உடனடியாக ரூ.7000- மதிப்பிலான காதொலிக்கருவினையும்,

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள மாற்றத்திறனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கிற்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.17,000- வீதம் 16 நபர்களுக்கு என மொத்தம் ரூ.2,79,000- க்கான காசோலையிணையும்,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட கும்மனூர் கிராமத்திலிருக்கும் பாஞ்சாலி, நீலாஞ்சனூர் கிராமத்திலிருக்கும் சுசீலா ஆகிய 2 நபர்களுக்கு பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டாகளையும்,

    பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாசுகி என்பவர் சத்துணவு மைய சமையலராக பணிபுரிந்து உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21.05.2021 அன்று பணியின்போது மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது வாரிசுதாரரும் மகளுமாகிய வசந்தி என்பவருக்கு கருணை அடிப்படையில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எர்ரனஅள்ளி சத்துணவு மைய சமையல் உதவியாளராக பணி நியமன ஆணையினையும் கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் 13 முன்னாள் கைதிகளின் மறுவாழ்வுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சிவகங்கை

    தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் காலமுறை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகக் சிறு கூட்ட ரங்கில் நடந்து. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அவர் பேசியதாவது:-

    பொது மன்னிப்பில் விடுதலையான சிறை வாசிகளின் மறுவா ழ்விற்கென, தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்க ளின் வாழ்வா தாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி தமிழக அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைவாசிகள் சிறுதொழில்கள் தொடங்கி, அவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதனடிப்படையில், நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் பொது மன்னிப்பில் விடுதலையான 13 முன்னாள் சிறை வாசி களுக்கு, அவர்களின் மறுவாழ்விற்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த உதவித்தொகையை பெறும் பயனா ளிகள், இதன்மூலம் சிறு தொழில்கள் தொடங்கி, நல்லமுறையில் தங்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) சுந்தரராஜ், சிறை மீண்டோர் உதவி சங்கத்தின் செயலாளர் பகீரத நாச்சியப்பன், சிவகங்கை மண்டல நன்னடத்தை அலுவலர் சேதுராமன், நன்னடத்தை அலுவலர்கள் பிரியதர்ஷினி, பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கும் விழா நடந்தது.
    • அமைச்சர் க.பொன்முடி ரூபாய் 4 லட்சத்தினை நம் பள்ளி திட்டத்திற்கு வழங்கு வதாக கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் நா. புகழேந்தி, இரா. இலட்சுமணன் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் 100 சதவீதம் கல்வி இலக்கினை அடைந்திடும் வகையில் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்வியோடு வேலைவாய்ப்பு, கலைத்திறன் மற்றும் விளையாட்டு உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுத்திடும் பொருட்டு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் தரத்தினை உயர்த்திட வேண்டும் என்ற நோக்கத்தில் நம் பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற அரசு பள்ளிகளை தத்தெடுத்து பள்ளி மேம்பாட்டிற்காகவும் மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தேவைக்கும் உதவ முடியும்.

    மேலும் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி கனவினை நிறைவேற்றிடும் வகையில் உயர்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டினை அறிவித்தார்கள். இதன் மூலம் பல்லாயிர க்கண க்கான மாண வர்கள் மருத்து வம். பொறி யியில், தொழில்நு ட்பக்கல்வி, செவிலி யர்கல்வி, கலை கல்லூரி போன்ற வற்றில் இடஒதுக்கீடு பெற்று கல்வி பயின்று வருவதோடு மட்டு மல்லாமல் கல்வி க்கட்டணம், விடுதி க்கட்டணம் ஏதுமின்றி கல்வி கற்று வருகி றார்கள். தொடர்ந்து அமைச்சர் க.பொ ன்முடி ரூபாய் 4 லட்சத்தினை நம் பள்ளி திட்டத்திற்கு வழங்கு வதாக கூறினார். இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் த.மோகன் ரூ. 1 லட்சமும், விக்கி ரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி அவர்கள் ரூ.3 லட்சமும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சு மணன் ரூ. 2 லட்சமும் மாவட்ட ஊராட்சி குழு த்தலைவர் ம.ஜெய ச்சந்திரன் ரூ.2 லட்சமும், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் அவர்கள் ரூ.2 லட்சமும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் ரூ.1.5 லட்சமும், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரூ.1 லட்சமும், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன் ரூ.1 லட்சமும், திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் அன்னியூர் சிவா ரூ.1 லட்சமும், சர்க்கரை ரூ.1 லட்சமும், சுரேஷ் ரூ.1 லட்சமும், தயா இளந்திரையன் ரூ.50 ஆயிரமும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா ரூ.70 ஆயிரமும் வழங்கினர். ஆக மொத்தம் ரூபாய் 21 லட்சத்தி 80 ஆயிரத்தினை நம் கல்வி திட்டத்திற்கு வழங்கப்பட்டது

    • மத்திய அரசால் 438 நபர்களுக்கு ரூ.1,33,72,771 நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.
    • கண் கண்ணாடி மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் 34 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தினத்தை 2022-ஐ முன்னிட்டு நடைபெற்ற தேநீர் விருந்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தினத்தை 2022-ஐ முன்னிட்டு கொடி நாள் நிதி வசூல் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நாளில் தேசத்தின் குடிமக்களாகிய நாம் அனைவரும் முப்படை வீரர்களுக்கு அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக அவர்களின் வாழ்விற்கு உதவும் வகையில் நிதியினை வாரி வழங்கும் நாள்.

    அடுத்த கொடிநாள் வரை முழு ஆண்டும் கொடிநாள் நலநிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறாக வசூலிக்கப்படும் தொகை முப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பலவேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக கொடிநாள் நிதி வசூல் புரிவதில் தமிழ்நாடு முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. இது படைவீரர்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் காட்டும் மதிப்பும் மரியாதையையும் அளவிடுகிறது.

    மேலும், கடந்த ஓராண்டில் முன்னாள் படைவீரர் , சார்ந்தோர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசால் 438 நபர்களுக்கு ரூ.1,33,72,771 நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.

    இவ்விழாவில் ரூ.5,27,100 மதிப்பிலான, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, கண் கண்ணாடி மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் 34 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

    2021 கொடி நாள் ஆண்டில் அரசு இலக்கு ரூ.68,44,000. அதில் ரூ.1,59,53,500 வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 233.10 சதவீதம் ஆகும். கொடிநாள் 2022ஆம் ஆண்டிற்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இலக்கு ரூ.72,29,000 என அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வசூல் தொகையினை விட இந்த ஆண்டு கூடுதலாக வசூல் செய்திட மாவட்ட அலுவலர்களை கேட்டுக்கொள்வதுடன், பொது மக்கள் அதிக அளவில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×