search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள் 16 பேருக்கு ரூ.2.79 லட்சம் நிதியுதவி
    X

    பணியின் போது மரணம் அடைந்த வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள் 16 பேருக்கு ரூ.2.79 லட்சம் நிதியுதவி

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 431 மனுக்கள் வரப்பெற்றன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

    கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 431 மனுக்கள் வரப்பெற்றன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் காதொலிக்கருவி வழங்க வேண்டி பெறப்பட்ட மாற்றுத்திறனாளி மனுதாரருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் உடனடியாக ரூ.7000- மதிப்பிலான காதொலிக்கருவினையும்,

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள மாற்றத்திறனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கிற்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.17,000- வீதம் 16 நபர்களுக்கு என மொத்தம் ரூ.2,79,000- க்கான காசோலையிணையும்,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட கும்மனூர் கிராமத்திலிருக்கும் பாஞ்சாலி, நீலாஞ்சனூர் கிராமத்திலிருக்கும் சுசீலா ஆகிய 2 நபர்களுக்கு பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டாகளையும்,

    பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாசுகி என்பவர் சத்துணவு மைய சமையலராக பணிபுரிந்து உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21.05.2021 அன்று பணியின்போது மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது வாரிசுதாரரும் மகளுமாகிய வசந்தி என்பவருக்கு கருணை அடிப்படையில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எர்ரனஅள்ளி சத்துணவு மைய சமையல் உதவியாளராக பணி நியமன ஆணையினையும் கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    Next Story
    ×