search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம் கல்வி திட்டம்"

    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கும் விழா நடந்தது.
    • அமைச்சர் க.பொன்முடி ரூபாய் 4 லட்சத்தினை நம் பள்ளி திட்டத்திற்கு வழங்கு வதாக கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் நா. புகழேந்தி, இரா. இலட்சுமணன் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் 100 சதவீதம் கல்வி இலக்கினை அடைந்திடும் வகையில் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்வியோடு வேலைவாய்ப்பு, கலைத்திறன் மற்றும் விளையாட்டு உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுத்திடும் பொருட்டு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் தரத்தினை உயர்த்திட வேண்டும் என்ற நோக்கத்தில் நம் பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற அரசு பள்ளிகளை தத்தெடுத்து பள்ளி மேம்பாட்டிற்காகவும் மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தேவைக்கும் உதவ முடியும்.

    மேலும் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி கனவினை நிறைவேற்றிடும் வகையில் உயர்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டினை அறிவித்தார்கள். இதன் மூலம் பல்லாயிர க்கண க்கான மாண வர்கள் மருத்து வம். பொறி யியில், தொழில்நு ட்பக்கல்வி, செவிலி யர்கல்வி, கலை கல்லூரி போன்ற வற்றில் இடஒதுக்கீடு பெற்று கல்வி பயின்று வருவதோடு மட்டு மல்லாமல் கல்வி க்கட்டணம், விடுதி க்கட்டணம் ஏதுமின்றி கல்வி கற்று வருகி றார்கள். தொடர்ந்து அமைச்சர் க.பொ ன்முடி ரூபாய் 4 லட்சத்தினை நம் பள்ளி திட்டத்திற்கு வழங்கு வதாக கூறினார். இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் த.மோகன் ரூ. 1 லட்சமும், விக்கி ரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி அவர்கள் ரூ.3 லட்சமும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சு மணன் ரூ. 2 லட்சமும் மாவட்ட ஊராட்சி குழு த்தலைவர் ம.ஜெய ச்சந்திரன் ரூ.2 லட்சமும், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் அவர்கள் ரூ.2 லட்சமும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் ரூ.1.5 லட்சமும், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரூ.1 லட்சமும், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன் ரூ.1 லட்சமும், திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் அன்னியூர் சிவா ரூ.1 லட்சமும், சர்க்கரை ரூ.1 லட்சமும், சுரேஷ் ரூ.1 லட்சமும், தயா இளந்திரையன் ரூ.50 ஆயிரமும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா ரூ.70 ஆயிரமும் வழங்கினர். ஆக மொத்தம் ரூபாய் 21 லட்சத்தி 80 ஆயிரத்தினை நம் கல்வி திட்டத்திற்கு வழங்கப்பட்டது

    ×