கைதிகளின் மறுவாழ்வுக்கு நிதியுதவி

சிவகங்கை மாவட்டத்தில் 13 முன்னாள் கைதிகளின் மறுவாழ்வுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவிகளை கலெக்டர் வழங்கினார்.பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னாள் கைதிகளின் மறுவாழ்வுக்கான நிதியுதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
முன்னாள் கைதிகளின் மறுவாழ்வுக்கான நிதியுதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
Published on

சிவகங்கை

தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் காலமுறை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகக் சிறு கூட்ட ரங்கில் நடந்து. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அவர் பேசியதாவது:-

பொது மன்னிப்பில் விடுதலையான சிறை வாசிகளின் மறுவா ழ்விற்கென, தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்க ளின் வாழ்வா தாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழக அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைவாசிகள் சிறுதொழில்கள் தொடங்கி, அவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் பொது மன்னிப்பில் விடுதலையான 13 முன்னாள் சிறை வாசி களுக்கு, அவர்களின் மறுவாழ்விற்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகையை பெறும் பயனா ளிகள், இதன்மூலம் சிறு தொழில்கள் தொடங்கி, நல்லமுறையில் தங்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) சுந்தரராஜ், சிறை மீண்டோர் உதவி சங்கத்தின் செயலாளர் பகீரத நாச்சியப்பன், சிவகங்கை மண்டல நன்னடத்தை அலுவலர் சேதுராமன், நன்னடத்தை அலுவலர்கள் பிரியதர்ஷினி, பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com