search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்நாற்றம்"

    • திருச்சுழியில் சாலையில் தேங்கும் குப்பைகள், கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
    • சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகரில் பொதுமக்கள் வந்து போகும் முக்கிய இடங்களாக சார்பதி வாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ளது.

    திருச்சுழி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரிலுள்ள போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கு வதால் அதிலிருந்து துர்நாற் றம் வீசி நோய்த்தொற்று ஏற்படும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் வீசும் காற்று காரணமாக கொட்டப்படும் குப்பைகளா னது அங்கும் இங்குமாக சிதறி காணப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த நிலையில் திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் குப்பை கள் மற்றும் கழிவுநீர் வாறு காலில் தேங்கி வருவதுடன் அங்கிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரால் மேற்படி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அதனை கண்டு முகம் சுளிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு கடும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

    எனவே சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் இது போன்ற குப்பைத்தொட்டி இல்லாத திருச்சுழி நகரின் முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டிகளை அமைத்து குப்பைகள் தேங்காத வண்ணம் ஊராட்சி ஊழி யர்கள் மூலமாக நாள்தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருச்சுழி ஊராட்சி நிர்வாகத்திற்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • துர்நாற்றம் வீசுவதால் அகற்ற கோரிக்கை
    • என்.பி. கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்தது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடியான கும்பப்பூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக கொளுத்திய வெயிலினால் ஆறு, கால்வாய், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தன.

    இந்த நிலையில் முதல் போக கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் மாதம் 1-ந்தேதி திறக்கப்பட்டது. ஆனால் புத்தனாறு கால்வாய் தூர்வாரப்படாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கழிவுகள் தேங்கி ஆங்காங்கே தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் எனப்படும் என்.பி. கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்தது.

    இந்த கால்வாய் தொடங்கும் சீதப்பால் அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால் மற்றும் பள்ளக்கால் பகுதி வரை 24 கிலோ மீட்டர் 560 மீட்டர் தூரம் வரை கால்வாயின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடந்தது. ராட்சத ஜே.சி.பி. எந்திரம் மூலம் இந்த கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது.

    இதில் கொட்டாரம் முதல் பொற்றையடி வரை உள்ள பகுதியில் உள்ள என்.பி. கால்வாயில் தூர்வாரப்பட்ட குப்பைகள், கழிவுகள் மற்றும் சகதியை நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையோரமாக ஆங்காங்கே கொட்டி வைத்துள்ளனர்.

    இந்த குப்பைகள் கொட்டப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.

    மேலும் இந்த குப்பை கூழங்களால் விபத்துக்கள் ஏற்பட்டு ஆற்றில் வாகனங்கள் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்தால் சாலையோரத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை கூழங்கள் மீண்டும் கால்வாயிலேயே விழும் நிலை உள்ளது.

    எனவே தூர்வாரி ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அங்கிருந்து அகற்ற பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலைகளில் இறைச்சி கழிவுகளும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
    • தீ வைத்து எரிப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம்- மல்லிப்பட்டினம் கடற்கரை சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்து கிடக்கிறது. குப்பைகள் மட்டுமின்றி இறைச்சி கழிவுகளும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும், சில நேரங்களில் குப்பைகளை மர்மநபர்கள் சிலர் தீ வைத்து எரிப்பதால் அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரசாயன கழிவுகள் ஏரியில் கலக்கப்படுவதால் டன் கணக்கான மீன்கள் செத்து நீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் துர்நாற்றதால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சி ரயில்வே இருப்புப் பாதை அருகே புட்லூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி 6 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரியும் நீரை கொண்டு 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது

    இந்த புட்லூர் ஏரிக்கு அருகே காக்களூர் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து ரசாயன கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்பட்டு மழைக் காலங்களில் மழை நீருடன் கலந்துவிடுவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக ஆண்டுதோறும் கனமழை பெய்யும் வேலைகளில் ரசாயன கழிவுகள் தொழிற்சாலைகளில் இருந்து திறந்து விடப்பட்டு ஏரியில் கலக்கப்படுவதால் டன் கணக்கான மீன்கள் செத்து நீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக மழை நீருடன் ரசாயனக் கலவையையும் புட்லூர் ஏரியில் விடப்பட்டதால் சுமார் 5 டன்னுக்கும் மேலான மீன்கள் ஏரியில் செத்துமிடந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதனால் புட்லூர் ஏரியைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் துர்நாற்றதால் அவதிப்பட்டு வருகின்றனர். மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நோயாளிகள் அவதி
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஏராளமான நாய்கள் மருத்துவமனையை சுற்றி வருகின்றனர்.

    அது மட்டுமல்லாமல் பெண்கள் வார்டில் நாய்கள் மலம் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர்.

    அசுத்தம் உள்ள பெண்கள் வார்டில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • கடந்த மாதங்களில் பெய்த மழையினால் இந்த குளம் நிரம்பியது.
    • குறிப்பாக நன்கு வளர்ந்த நிலையில் இருந்த விரால், ஜிலேபி, கெண்டை போன்ற மீன்கள் இறந்து போயின.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சி முதலியார்பேட்டை கிராமத்தில் ஊருக்கு நடுவில் குளம் உள்ளது. கடந்த மாதங்களில் பெய்த மழையினால் இந்த குளம் நிரம்பியது. இந்த நீரில் பல்வேறு வகையான மீன்கள் தானாகவே வளர்ந்தன. இந்நிலையில் சித்திரை மாதம் கடுமையான வெயில் அடித்தது. சில தினங்களுக்கு முன்பாக சூறாவளி காற்றுடன் வெப்பசலனம் காரணமாக மழை பெய்தது. இதில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக குளத்தில் வளர்ந்திருந்த மீன்கள் இறந்து மிதந்தன.

    குறிப்பாக நன்கு வளர்ந்த நிலையில் இருந்த விரால், ஜிலேபி, கெண்டை போன்ற மீன்கள் இறந்து போயின. இவைகள் தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கியுள்ளன. இதனால் முதலியார்பேட்டை கிராமம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அங்குள்ள வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், கவுன்சிலர்களிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். இருந்தபோதும் இதுநாள் வரையில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள் அப்புறப்படு த்தப்படவில்லை. இதனால் இக்கிராமத்தில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி, குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி, புதிய நீரை குளத்தில் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலியார்பேட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
    • இந்த சாக்கடை நீரால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது.

    இதனால் சாலை ஓரங்களில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்து அண்ணா பூங்கா சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    சில மாதங்களுக்கு பிரதான சாலையான, அண்ணா பூங்கா சாலையின் ஓரத்தில் இருந்த நடைபாதை கடைகளை அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினர், சாலையின் இருபுறமும் நடைபாதை அமைத்தனர்.

    அப்போது, சாக்கடை, மழை நீர் செல்ல சரியான வழி அமைக்காததால்

    மழை பெய்யும் நேரங்களில் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. மேலும் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கடைகளும் தண்ணீரில் தத்தளிக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

    மழை செல்லும் வழியை நடைபாதை அமைக்கும் போது அடைத்து விட்டதால், இங்கு தேங்கும் தண்ணீரில் துர்நாற்றம் வீசிகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர்.

    உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மழைநீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    • நள்ளிரவு மர்ம நபர்கள் கிணற்றில் கொட்டி விட்டு சென்று விட்டனர்
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கடைசி குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மகேஷ் இவர் கிராமத்தில் 10 ஏக்கரில் நெல் கரும்பு ஆகியவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

    இவர் விவசாயம் செய்யும் விவசாய கிணற்றில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோழி கழிவுகளை கிணற்றில் கொட்டி விட்டு சென்று விட்டனர்.

    இதனால் அந்த விவசாய கிணறு துர்நாற்றம் வீசும் சூழல் ஏற்பட்டது.

    அங்கு வசிக்கும் 15 குடும்பங்களுக்கு இந்த விவசாய கிணற்றில் இருந்து தான் குடிநீர் எடுத்துச் செல்லுகிறது வழக்கம். இதனால் பே்பகுதி மக்கள் கோழி கழிவுகளை கொட்டி சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளிகள் புதுவை முத்தியால் பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் மரக்காணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சாராயம், மதுபானம் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு, ஏராளமானவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர். அதில் ஒரு சிலர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.

    நாளொன்றுக்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரிப்பதால், போலீஸ் நிலையத்தில் துர்நாற்றம் வீசியது. இதனால் வானூர், கோட்டக்குப்பம் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நேற்று மாலை மயக்கம் வந்தது. இதனையடுத்து பணியில் இருந்த போலீசார், விரைந்து சென்று பினாயில் வாங்கி வந்து போலீஸ் நிலையம் முழுவதும் தெளித்தனர். மேலும், போலீஸ் நிலையத்தின் வெளியிலும் தெளித்தனர். அதன் பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்ட போலீசார் தங்களின் பணிகளை தொடர்ந்தனர்.

    • கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
    • மாவட்ட நிர்வாகம் சனத்குமார் நதியை தூய்மைப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி நகர பகுதியை ஒட்டியுள்ள சனத்குமார் நதியின் ஆற்றுப்படுக்கை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தண்ணீர் செல்லும் பாதை முழுவதும் தடம் தெரியாமல் இருந்து வருகிறது.

    தற்போது இந்த நதியில் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    அதே போல் ஆற்று படுக்கையில் குப்பைகளை கொட்டுவதால் கழிவு நீர் தொட்டியாக மாறி நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, ஆறு மற்றும் குளங்களை தூர்வாரி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் வத்தல்மலை என்ற மலையில் இருந்து தான் சனத்குமார் நதி உருவாகி வருகிறது.

    இந்த நதியில் இலளிகம், மாதேமங்கலம், அன்னசாகரம், அதியமான் கோட்டை, உள்ளிட்ட ஏரிகள் மற்றும் கோடிக்கரை வழியாக வருகின்ற தண்ணீர்தான் சனத்குமார் நதியாக செல்கிறது.

    தற்பொழுது சனத்குமார் நதி சாக்கடை கால்வாயாக மாறி உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகம் சனத்குமார் நதியை தூய்மைப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி நகரப் பகுதியில் இருந்து செல்லும் சாக்கடை தண்ணீரையும், இலக்கியம்பட்டி பஞ்சாயத்தில் இருந்து வரும் சாக்கடை தண்ணீரையும் நேரடியாக சனத்குமார் நதியில் இணைத்துள்ளார்கள்.

    எனவே நகராட்சியும் பஞ்சாயத்து நிர்வாகமும் சாக்கடை கால்வாயில் வரும் கழிவு நீரை தனி கால்வாய் அமைத்து தூய்மைப்படுத்திய பின்னர் சனத்குமார் நதியில் விட வேண்டும்.

    சனத்குமார் நதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒவ்வொரு குளத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி மழை வெள்ள காலத்தில் மழை நீர் வடிய வாய்க்கால்களை அமைத்து கடலுக்கு மழைநீர் செல்லும்படி வைத்திருந்தனர்.
    • குளத்தில் வெங்காயத் தாமரை நெய்வேலி காட்டாமணி செடிகள் சூழ்ந்தது மட்டுமல்லாமல் மூட்டையாக கழிவு பொருட்களை குளத்தில் போடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 108 தீர்த்த குளம், ஏரி, குட்டைகள் உள்ளது இதில் 50க்கும் மேற்பட்ட குளம் குட்டைகள் இருக்கும் இடம் தெரியாமல் பலரது ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த குளங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு குளத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி மழை வெள்ள காலத்தில் மழை நீர் வடிய வாய்க்கால்களை அமைத்து கடலுக்கு மழைநீர் செல்லும்படி வைத்திருந்தனர் நீர் வடியும் வாய்க்கால்கள் பெரும்பாலும் பாதிக்கு மேல் தூர்க்கப்பட்டுஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வடிய பெரும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் நகராட்சி பகுதியில் உள்ள குளங்கள் மீன் ஏலம் விடுவதற்கு உள்ள உரிமை வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரார் சுவாமி ஆலயத்திற்கும்.குளம் ஏரிகள் ஆக்கிரமிக்க ப்பட்டால் அதை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினரிடமும் உள்ளது மேலும் நீர் நிலைகளில் மாசு ஏற்பட்டால் அதை நகராட்சி நிர்வாகமும் சரி செய்கிறது

    இந்த நிலையில் வேதாரணியம் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ள இடமான மாரியம்மன் கோவில் தெரு ஆரம்பத்தில் அரியாண்டி குளம் என்ற அக்னி தீர்த்த குளம் உள்ளது இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யம் கடைவீதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இந்த குளித்தின் நீரை பயன்படுத்தி தீ அணைக்க உதவியது. தற்சமயம் இந்த குளம் வெங்காயத் தாமரை நெய்வேலி காட்டாமணி செடிகள் சூழ்ந்து உள்ளது மேலும் இந்த குளத்தில் மூட்டை மூட்டையாக கழிவுப் பொருட்களை குளத்தில் போட்டுவிடுகிறார்கள் இதனால் துர்வாடை வீசுகிறது இந்த குளத்தின் உடைய துர்நாற்றத்தால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது

    நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தில் சுற்றி உள்ள பகுதியில் இருந்து கழிவுநீர் கலந்து சாக்கடையாக மாறிவிட்டது ஒரு காலத்தில் புனித தீர்த்த குளமாக இருந்து இப்பொழுது கொசு உற்பத்தி மையமாக திகழ்கிறது.அறநிலைதுறை, வருவாய்துறை நகராட்சி என மூன்று நிர்வாகத்தில் உள்ள இந்த குளங்கள் பெரும்பாலும் தூய்மைபடுத்த படமால் உள்ளது தற்போது நகராட்சி நிர்வாகம் மக்கள்நலன்கருதி தூய்மைபடுத்த நினைத்தா லும் அறநிலைதுறையின் அனுமதி தேவைபடுகிறது இதனால் குளங்கள் பாரமரிப்பு இன்றி பல குளங்கள் சாக்கடைகளாக மாறிவருகிறது

    தற்போது மழைநீர்வடிய அரியாண்டி குட்டையில் ரூ.10 லட்சம் செலவில் வடிகால்வாய்க்கால் அமைத்துள்ளனர் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யமால் வடிகால் மட்டும் கட்டி எந்த பயனும் இல்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அரியாண்டிகுளத்தை தூர்வாரி மண்டிக்கிடக்கும் வெங்காயத் தாமரை செடி கொடிகளை அகற்றி நீரை இறைத்து சுத்தப்படுத்தி கரைகட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அள்ளப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கிறது.
    • துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அள்ளப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×