search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் ஏலம்"

    • ஒவ்வொரு குளத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி மழை வெள்ள காலத்தில் மழை நீர் வடிய வாய்க்கால்களை அமைத்து கடலுக்கு மழைநீர் செல்லும்படி வைத்திருந்தனர்.
    • குளத்தில் வெங்காயத் தாமரை நெய்வேலி காட்டாமணி செடிகள் சூழ்ந்தது மட்டுமல்லாமல் மூட்டையாக கழிவு பொருட்களை குளத்தில் போடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 108 தீர்த்த குளம், ஏரி, குட்டைகள் உள்ளது இதில் 50க்கும் மேற்பட்ட குளம் குட்டைகள் இருக்கும் இடம் தெரியாமல் பலரது ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த குளங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு குளத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி மழை வெள்ள காலத்தில் மழை நீர் வடிய வாய்க்கால்களை அமைத்து கடலுக்கு மழைநீர் செல்லும்படி வைத்திருந்தனர் நீர் வடியும் வாய்க்கால்கள் பெரும்பாலும் பாதிக்கு மேல் தூர்க்கப்பட்டுஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வடிய பெரும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் நகராட்சி பகுதியில் உள்ள குளங்கள் மீன் ஏலம் விடுவதற்கு உள்ள உரிமை வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரார் சுவாமி ஆலயத்திற்கும்.குளம் ஏரிகள் ஆக்கிரமிக்க ப்பட்டால் அதை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினரிடமும் உள்ளது மேலும் நீர் நிலைகளில் மாசு ஏற்பட்டால் அதை நகராட்சி நிர்வாகமும் சரி செய்கிறது

    இந்த நிலையில் வேதாரணியம் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ள இடமான மாரியம்மன் கோவில் தெரு ஆரம்பத்தில் அரியாண்டி குளம் என்ற அக்னி தீர்த்த குளம் உள்ளது இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யம் கடைவீதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இந்த குளித்தின் நீரை பயன்படுத்தி தீ அணைக்க உதவியது. தற்சமயம் இந்த குளம் வெங்காயத் தாமரை நெய்வேலி காட்டாமணி செடிகள் சூழ்ந்து உள்ளது மேலும் இந்த குளத்தில் மூட்டை மூட்டையாக கழிவுப் பொருட்களை குளத்தில் போட்டுவிடுகிறார்கள் இதனால் துர்வாடை வீசுகிறது இந்த குளத்தின் உடைய துர்நாற்றத்தால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது

    நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தில் சுற்றி உள்ள பகுதியில் இருந்து கழிவுநீர் கலந்து சாக்கடையாக மாறிவிட்டது ஒரு காலத்தில் புனித தீர்த்த குளமாக இருந்து இப்பொழுது கொசு உற்பத்தி மையமாக திகழ்கிறது.அறநிலைதுறை, வருவாய்துறை நகராட்சி என மூன்று நிர்வாகத்தில் உள்ள இந்த குளங்கள் பெரும்பாலும் தூய்மைபடுத்த படமால் உள்ளது தற்போது நகராட்சி நிர்வாகம் மக்கள்நலன்கருதி தூய்மைபடுத்த நினைத்தா லும் அறநிலைதுறையின் அனுமதி தேவைபடுகிறது இதனால் குளங்கள் பாரமரிப்பு இன்றி பல குளங்கள் சாக்கடைகளாக மாறிவருகிறது

    தற்போது மழைநீர்வடிய அரியாண்டி குட்டையில் ரூ.10 லட்சம் செலவில் வடிகால்வாய்க்கால் அமைத்துள்ளனர் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யமால் வடிகால் மட்டும் கட்டி எந்த பயனும் இல்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அரியாண்டிகுளத்தை தூர்வாரி மண்டிக்கிடக்கும் வெங்காயத் தாமரை செடி கொடிகளை அகற்றி நீரை இறைத்து சுத்தப்படுத்தி கரைகட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×