search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கிச் சூடு"

    • 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
    • துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    தென்னாப்பிரிக்கா தலைநகரின் தென்கிழக்கில் ஜோகன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில் பார் உள்ளது. இந்த மதுக்கடையில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் 14 பேர் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    போலீஸ் அதிகாரி எலியாஸ் மாவேலா கூறியதாவது:-

    நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அழைப்பு வந்தது. அப்போது, பாரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

    சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபேயால் சுவாசிக்க முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.

    ஜப்பானின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

    துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபேயால் சுவாசிக்க முடியவில்லை என்றும், இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டது.

    பின்னர் அபேயின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது அருமை நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும், அவரது குடும்பத்தினருடனும், ஜப்பான் மக்களுடனும் எப்போதும் இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • அப்பாவி இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எதிர்ப்பு
    • 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் உத்தரபிரதேச அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாநிலத்தில் ஜாவித் அஹமத், ஆப்ரீன் பாத்திமா மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை கண்டித்தும், சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களின் வீட்டை இடித்து அப்பாவி இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் எம்.முஹம்மத் ஐயூப் தலைமை வகித்தார்.

    மாநில தலைவர் வி.அதீகுர் ரஹமான், மாவட்ட தலைவர் டி.முஹம்மத் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பஷி அக்ரம் வரவேற்றார்.

    மாநில செயற்குழு உறுப்பினர் சையத் அஹமத் ஹுசைனி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.

    இதில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எஸ்.டி. நிசார், கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முல்லை, வெல்பர் பார்ட்டி யின் பல்வேறு நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம் கெடார் அருகே வீரமுர் ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிக் சூடு நடத்தப்பட்டது தொடர்பாக மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள வீரமூர் ஏரிக்கு கடந்த 30-ந் தேதி அதிகாலை மண் அள்ளுவதற்காக மாட்டு வண்டிகளில் சென்ற தொழிலாளர்களை நோக்கி மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தப்பிச்சென்றனர். இதில் ஒரு மாட்டின் வாய் பகுதியில் குண்டு பாய்ந்ததில் நாக்கு துண்டானது. மேலும் மாட்டு வண்டிகளில் குண்டு பாய்ந்து துளை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏரியில் மண் அள்ளுவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என்று கெடார் மற்றும் கீழ்வாலை பகுதியை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி சம்பவம் நடந்ததற்கு 2, 3 நாட்களுக்கு முன்பாக அப்பகுதியில் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்ததா? என்பது குறித்து கிராம மக்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம் கெடார் அருகே வீரமுர் ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிக் சூடு நடத்தப்பட்டது. இதில் குண்டு பாய்ந்து மாடு படுகாயம் அடைந்தது.
    விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே வீரமுர் ஏரியில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. இதனால் பயந்துபோன தொழிலாளர்கள் பதுங்கிக் கொண்டனர்.

    சீறிப்பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டு மாட்டின் மீது பாய்ந்தது. இதில் மாடு படுகாயம் அடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு 10 பேர் பலியானதை கண்டித்து மாவட்டம் முழுவதும் கடைகள் இன்று அடைக்கப்பட்டன. பஸ்களும் இயக்காமல் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. #Thoothukudi #SterliteProtest
    தூத்துக்கடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நேற்று நடந்த 100-வது நாள் முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் வெடித்தது.

    போராட்டக்காரர்களும், போலீஸ்காரர்களும் பல இடங்களில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டனர். 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அலை, அலையாக வந்து குவிந்ததால் அவர்களது முற்றுகைப் போராட்டத்தை போலீஸ்காரர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை.

    சுமார் 5 ஆயிரம் போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றதால் அவர்கள் போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேறினார்கள். இதைத் தொடர்ந்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் அதிகரித்தது. அப்போது போலீஸ்காரர்கள் தடியடி நடத்தினார்கள்.

    இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், போராட்டக்காரர்களை விரட்டி, விரட்டி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பெண்கள் உள்பட அப்பாவி மக்கள் 10 பேர் பலியானார்கள்.


    போலீசார் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் சிலரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அதில் 2 பேர் நெல்லையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போராட்டத்தின் போது 110 வாகனங்கள் தீ வைத்தும், அடித்தும் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானதால் கோபம் தணியாத பொதுமக்கள் தூத்துக்குடியில் ஆங்காங்கே சில இடங்களில் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பக்கத்து மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    சுமார் 4 ஆயிரம் போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று மாலைக்கு பிறகு அமைதி திரும்பியது. என்றாலும் மக்கள் மத்தியில் பீதியும் பதட்டமும் குறையவில்லை.

    போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டது பற்றி நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசை அனைத்துக் கட்சி தலைவர்களும் கண்டித்துள்ளனர். இன்று அவர்கள் தூத்துக்குடிக்கு சென்று முகாமிட்டுள்ளனர்.


    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மனதில் இருந்து பதட்டம் நீங்கவில்லை.

    மக்கள் மத்தியில் அமைதி திரும்ப செய்வதற்காக தூத்துக்குடி மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்து இருந்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.


    கடைகள் முழுமையாக மூடப்பட்டதால் தூத்துக்குடி நகரம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லை. பெரும்பாலான இடங்களில் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    ஒட்டப்பிடாரம், புதியம் புத்தூர், முத்தையாபுரம், ஸ்ரீவைகுண்டம, புதுக்கோட்டை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்திலும் கடைகள் மூடப்பட்டிருந்தன. சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டதால் தூத்துக்குடியில் இன்று எந்த ஒரு வர்த்தகமும் நடக்கவில்லை. அனைத்து வியாபார பணிகளும் முற்றிலுமாக முடங்கியது.

    இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு நடத்த போவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவர் விநாயகமூர்த்தி, பொதுச்செயலாளர் பாஸ்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு த‌குந்த நியாயம் கிடைக்கும் வரை தூத்துக்குடியில் காலவரையற்ற முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது” என்று தெரிவித்திருந்தனர்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி நகர் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

    தூத்துக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. மருந்து கடைகளும், சில பெட்டிக்கடைகளும் மட்டுமே திறந்திருந்தன.


    தூத்துக்குடியில் இன்று வாகனப் போக்குவரத்தும் முடங்கியது. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. சில பகுதிகளில் எந்த வாகனமும் ஓடாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் ஒருவித பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    மதுரை, நெல்லை, திருச்செந்தூர், நாகர்கோவில் உள்பட தூத்துக்குடிக்கு எந்த ஒரு பஸ்சும் வரவில்லை. இதனால் தூத்துக்குடி நகரம் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட மாதிரியான சூழ்நிலையில் உள்ளது.

    தூத்துக்குடியில் இன்று சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு எந்த பஸ் சேவையும் நடக்கவில்லை. இத்தகைய காரணங்களால் தூத்துக்குடி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இன்று கல்லூரிகளில் நடக்க இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நெல்லை மாவட்ட மீனவர்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. #Thoothukudi #SterliteProtest #SterliteKillings #Tuticorin
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதை அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Sterliteprotest #Rahulgandhi
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அவ்வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனமும், வேதனையும் வெளியிட்டுள்ளார்.


    ’ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 9 பேரை போலீசார் சுட்டுக்கொன்ற போலீசாரின் செயல் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்துக்கு காட்டுமிராண்டித்தனமான உதாரணமாக அமைந்துள்ளது. இவர்கள் அநீதிக்கு எதிராக போராடியதற்காக இவர்கள் கொல்லப்பட்டனர். இறந்த தியாகிகள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குடுபத்தாருடன் எனது நினைவுகளும், பிரார்த்தனைகளும் இணைந்திருக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். #Sterliteprotest #policefiring #Rahulgandhi
    ×