என் மலர்
இந்தியா

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு- பிரதமர் மோடி வேதனை
- ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபேயால் சுவாசிக்க முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
- ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபேயால் சுவாசிக்க முடியவில்லை என்றும், இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டது.
பின்னர் அபேயின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எனது அருமை நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும், அவரது குடும்பத்தினருடனும், ஜப்பான் மக்களுடனும் எப்போதும் இருக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.






