search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துண்டு பிரசுரம்"

    • மத்திய அரசு அதிக வரி வசூல் செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம்.
    • 50-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தவர் வழக்கறிஞர் நந்தினி.

    அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வழக்கறிஞர் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நாகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் செய்தனர்.

    மத்திய அரசு அதிக வரி வசூல் செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நாகை புதிய, பழைய பஸ் நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்துள்ளனர்.

    தொடர்ந்து நாகை கடைத்தெருவில் இருவரும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கொண்டு இருப்பதை அறிந்த பா.ஜ.க.வினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் நகர பொறுப்பாளர் சுதாகர் கொடுத்த புகாரின்பேரில் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை இரவில் போலீஸ் நிலையம் அழைத்து வந்த இன்ஸ்பெக்டர் சுப்ரியா அவர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

    அப்போது காவல் நிலையம் முன்பு 50 -க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பா.ஜ.க.வினரை சமாதானம் செய்து அப்புறப்படுத்திய போலீசார் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை காவல்துறை வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றி சென்று நாகை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

    • நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி கால்நடை மருத்துவமனைக்கு வந்தடைந்தது.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகி க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி கால்நடை அரசு மருத்துவ மனை மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு பேரணியை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் திருவாரூர் மாவட்ட மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

    நகராட்சிஆணையர் (பொ), கால்நடை மருத்துவர்கள் சந்திரன், இலக்கியா ராஜசேகர், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் வி.ஐ.ஏ. ஷிப் கேட்டரிங் காலேஜ் பிரைட் பீப்புள் சமுதாய கல்லூரி மாணவ- மாணவிகள், நகராட்சி ஊழியர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    பேரணியானது நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி புதிய பஸ் நிலையம் வழியாக சென்று கால்நடை மருத்துவ மனைக்கு வந்தடைந்தது.

    இதில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகி க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முகாமில் செல்ல பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.

    • பழைய கழிவுகள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    புகையில்லாபோகி பண்டிகை கொண்டாட வேண்டி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் இருந்து பேரணியை நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்ற செல்வராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    பேரணிக்கு நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை தாங்கினார்.

    நகர்நல அலுவலர் லெஷ்மி நாராயணன், நகர்மன்ற துணை தலைவர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராமையன், பிச்சமுத்து, டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் ஞானாம்பிகை கல்லூரி மாணவிகள், தியாகி நாராயணசாமி மேல்நி லைப்பள்ளி மாணவர்கள், டி.பி.டி.ஆர். மாணவர்கள் கலந்து கொண்டு பொது இடங்களில் பழைய கழிவுகள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டியும், வடிகால்களில் திடக்கழிவுகள் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பொதுமக்கள் தங்களது திடக்கழிவுகளை நகராட்சி தூய்மை பணியாளரிடம் வழங்கி புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றனர்.

    நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோ கிக்கப்பட்டது.

    பேரணியில் மயிலாடு துறை மிட்டவுன் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
    • ராமசாமி, கேபிள் மணி, சுமித்ராமற்றும் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சியில் வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.இது குறித்த துண்டு பிரசுரங்களை வியாபாரிகள்,மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணியை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஆர்.ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் ப.நடராஜன், கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.சித்துராஜ், ஊராட்சி செயலாளர் காந்திராஜ், வார்டு உறுப்பினர்கள் உமா மகேஷ்குமார், ஜோதிமணி முத்துசாமி,சாந்தி ராமசாமி, கேபிள் மணி, சுமித்ராமற்றும் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி.
    • துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப்பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    பேரணியை வேதார ண்யம் வருவாய் கோட்டா ட்சியர் ஜெயராஜ் பவுலின் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், வேதாரண்யம் வருவாய் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜா, வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் உத்ராபதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நாகராஜன், அன்பழகன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய சைக்கிள் பேரணி சேது ராஸ்தா, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி தெற்கு வீதிவழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது.

    வழிநெடுகிழும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொது மக்களுக்கு வழங்கினர்.

    • பழைய பஸ் அருகில் உள்ள கடைகள், பேருந்துகளில் உள்ள மக்கள் , பொதுமக்களுக்கு வீதி வீதியாக நேரடியாக வழங்கினார்.
    • இந்தியாவின் பன்முகத் தன்மையை காப்போம் என்ன முழக்கங்கள் இட்டு வீதி வீதியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் விளக்கப் பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக பொதுக்கூட்டத்தை விளக்கியும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தஞ்சையில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    பழைய பஸ் அருகில் உள்ள கடைகள், பேருந்துகளில் உள்ள மக்கள் , பொதுமக்களுக்கு வீதி வீதியாக நேரடியாக வழங்கினார். இந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம் என முழக்கங்கள் இட்டு அனைவருக்கும் வழங்கினார்.

    அன்னைத் தமிழை அரியணை ஏற்றி போற்றுவோம், ஆதிக்க இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், இந்தியாவின் பன்முகத் தன்மையை காப்போம் என்ன முழக்கங்கள் இட்டு வீதி வீதியாக சென்றனர். இந்த நிகழ்வில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர் மேத்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    • கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.
    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்குவாசல் புனித ஜான் டி பிரிட்டோ அரசு உதவி பெறும் பள்ளியில் வல்லம் அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர்.

    பள்ளி தலைமை ஆசிரியை சகோ.பவுலின் தெரசாள் தலைமை வகித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி ஊழியர் ஞானசேகரன், ஆசிரியை எஸ்தர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.

    சமூகப்பணித்துறை பேராசிரியர் வனிதா பேசுகையில், கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது என பாராட்டி பேசினார்.

    சமூகப்பணித்துறை தலைவர் முத்துக்குமார் வழிகாட்டுதல்படி நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    முன்னதாக பள்ளி ஆசிரியை ரோஸ்லின் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தை ஒருங்கிணைத்த கல்லூரி சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகளான ஜோ, புவனா, தேவி, அலெக்ஸ், அசோக், வனஜா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியை பவுலின் தெரசாள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை அரசு உதவி பெறும் பள்ளியான வடக்குவாசல் புனித ஜான் டி பிரிட்டோ பள்ளியில் ஏற்படுத்தியதன் மூலம் வல்லம் அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணித்துறை மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    • விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டுமென்று விழிப்புணர்வு.
    • துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வட்ட சட்டப்பணி குழு மற்றும் தீயணைப்பு துறை இணைந்து நடத்திய விபத்தில்லா தீபாவளி சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார்.

    உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார்.

    முகாமில் பாபநாசம் மாவட்ட உரிமையல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல்கனி கலந்துகொண்டு விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டுமென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

    பாபநாசம் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் இளங்கோவன் முன்னிலையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டுமென அறிவுத்தினார்.

    விழாவில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், தீயணைப்பு படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

    ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சட்ட பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.

    முடிவில் உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சாதனை துண்டு பிரசுரம் திருமங்கலத்தில் வினியோகம் செய்யப்பட்டது.
    • மாவட்ட செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டில் தி.மு.க.வினர் வினியோகம் செய்தனர்.

    திருமங்கலம்

    தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் சரித்திர சாதனையை பொது மக்களிடம் கொண்டு சென்றிடும் வகையில் பள்ளியில் பசியாறு எனும் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலத்தில் நடந்தது.

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டின் பேரில் பொதுமக்களிடம் தி.மு.க.வினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். திருமங்கலம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு பொமக்களிடம் துண்டு பிரசுரங்களை நேரில் விநியோகம் செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன்,பொருளா ளர் பொடா.நாகரா ஜன், மாவட்ட அணி அமை ப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு,திருமங்கலம் நகர கழகச் செயலாளர் ஸ்ரீதர்,திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலை வர் ஆதவன்அதியமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்குமார், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக மாணவ -மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
    • துண்டு பிரசுரங்களை வழங்கி சீர்காழி முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி காவல்துறை மற்றும் எல். எம். சி.மேல்நிலைப் பள்ளி சார்பில் உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி எம்எம்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ரூபிசாந்தக்குமாரி தலைமை வகித்தார்.

    பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் கிருபாகரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விஜய்அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கலந்து கொண்டு போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதை பழக்கங்களுக்கு எதிராக மாணவ -மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என விளக்கி கூறினார்.

    பின்னர் மாணவ-மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அதனை தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இதில் மாணவ- மாணவிகள் போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் சீர்காழி முக்கிய வீதிகள் வழியே பேரணியாக சென்றனர்.

    இந்த பேரணியில் தேசிய மாணவர் படை, சாரண-சாரணியர் இயக்கம், நாட்டு நலப்பணி திட்டம், இளஞ்செஞ்சிலுவை அமைப்பு மற்றும் திரளான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் இளம்செஞ்சிலுவை அலுவலர் ஜோகன்னா நன்றிக கூறினார்.

    • போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக் கூறினார்.
    • இறுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

    இதில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதிலிருந்து தங்களை எவ்வாறு காப்பாற்றி கொள்வது என்பது குறித்தும், போதை பொருளுக்கு அடிமையான ஒருவரை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்தும் இன்ஸ்பெக்டர் ராஜா பேசினார்.

    பின்னர், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இறுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவி இறப்பு தொடர்பாக போஸ்டர், துண்டு பிரசுரம் அச்சடிக்க வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
    • அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் சார்பில் போஸ்டர்கள் அச்சடிக்க வந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழிஉட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட திருவெண்காடு, பொறை யார், வைத்தீஸ்வ ரன்கோவில் ஆகிய பகுதிகளில்இயங்கி வரும் அச்சக உரிமையாள ர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் பேசும்போது:-

    பிரிண்டிங் பிரஸ் வைக்க சட்ட உரிமம் பெற வேண்டும்.கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அசாதாரண சூழ்நிலை இருந்து வரும் நிலையில் மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக போஸ்டர், துண்டுப் பிரசுரம் அச்சடிக்க வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். மேலும் போஸ்டர்கள் அச்சடிக்க வருபவர்களின் பெயர், முகவரி, ஆதார் அட்டை கைபேசி எண், ஆகியவற்றை முறையாக பதிவு செய்து பராமரிக்க வேண்டும். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் சார்பில் போஸ்டர்கள் அச்சடிக்க வந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். அப்போது சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் உடனிருந்தார்.

    ×