search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமறைவு"

    • பெண்ணை தாக்கி வீட்டை சேதப்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
    • மேலும் தலைமறைவான சண்முகநாதனை தேடி வருகின்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஒச்சத் தேவன்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையா. இவரது மனைவி முனீஸ்வரி (வயது49). இவர்களது மகன் கோட்டைச்சாமி (26) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் (28) என்பவருக்கும் முன்பகை இருந்தது.

    இந்த நிலையில் சண்முக நாதன் தனது நண்பர்கள் சிவபாரதி (20), முத்து ராமலிங்கம் (28) ஆகியோ ருடன் பொன்னையா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் முனீஸ்வரி தனியாக இருந்தார். அவரை 3 பேரும் சேர்ந்து அவதூறாக பேசி அடித்து கீழே தள்ளி விட்டனர். பின்னர் வீட்டின் ஓடுகளை கம்பால் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அங்கிருந்த டிராக்டரில் ஏறி தப்பி சென்றனர். டிராக்டரை அருகே உள்ள கருவேல மர காட்டுப்பகுதியில், நிறுத்தி விட்டு சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கோவிலாங் குளம் போலீஸ் நிலையத் தில் முனீஸ்வரி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாரதி மற்றும் முத்துராமலிங்கம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சண்முகநாதனை தேடி வருகின்றனர்.

    • குமரி மாவட்ட தனிப்படையினர் விரைந்தனர்
    • ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் மட்டும் 6 வழக்குகள் உள்ளன.

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 62). செங்கல் சூளை அதிபரான இவர், கடந்த 9-ந்தேதி இரவு ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக போலீ சார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த ரவுடி அன்பு என்ற அன்பழகன், விஜயன், திருப்பதிசாரம் மணிகண்டன், மிஷன் காம்பவுண்ட் தங்கஜோஸ் ஆகியோர் தான் கொலை யாளிகள் என தெரியவர, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

    மேலும் கொலையாளி களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது மலைப்பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருக்கலாம் என கிடைத்த தகவலின் அடிப்படையில், டிரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இதில் தங்கஜோஸ் போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்கஜோஸ் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் மட்டும் 6 வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் உள்ளது.

    இவர், அன்புவுடன் சேர்ந்து ஏசுதாசனை கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தங்கஜோசின் சகோதரிகள் இருவர், சென்னையில் போலீசாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான தங்கஜோசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள அன்பு உள்ளிட்ட 3 பேரையும் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்ற னர். அவர்களது போட்டோக் களை வெளியிட்டு, பொதுமக்களிடம் பரப்புரை செய்தும் வருகின்றனர். இதற்கிடையில் கொலை யாளிகள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தனிப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறும்போது குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றனர்.

    • 14 வயது பள்ளி சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த எலட்டிரிசியன் அன்புசெல்வன் (வயது 27) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது
    • போலீசாருக்கு பயந்து அன்பு செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த எலட்டிரிசியன் அன்புசெல்வன் (வயது 27) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. தலைமறைவுஇதுகுறித்து சிறுமியின் தந்தை நெருங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அன்புசெல்வனை தேடி வந்தனர்.      இந்நிலையில், கடந்த 13-ந்தேதி அன்புசெல்வன் வீட்டில் பதுங்கி இருப்பதாக நெடுங்காடு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்தனர். அப்போது போலீசாருக்கு பயந்து அன்பு செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆபத்தானநிலையில் இருந்த அன்பு செல்வனை போலீசார் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 4 நாட்கள் சிகிச்சையில் இருந்த அன்பு செல்வன் உடல்நிலை சரியானதை அடுத்து போலீசார் போக்சோ வழக்கில் அன்புசெல்வனை கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 5 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
    • வடக்கு போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைதான திருப்பூர் பெரியாயிபாளையத்தை சேர்ந்த நவீன் ஆனந்த் (வயது 29) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் முகவரியே மாற்றி குடியேறி தலைமறைவாக இருந்தார்.

    இந்த நிலையில் வடக்கு போலீசார் அருள் புரத்தில் நேற்று நவீன் ஆனந்த்தை கைது செய்து ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வடக்கு போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • 10 மகளிர் குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர்.
    • இந்நிலையில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்-1 மகேஷ், ஜெரால்ட்க்கு பிடி ஆணை பிறப்பித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அன்னை தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டது. இங்கு 10 மகளிர் குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர். இது சம்மந்தமாக திருச்சி கருமண்டபம் சேர்ந்த ஜெரால்ட் (வயது 31) என்பவரின் மீது பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் 8 வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இதில் நீதிமன்றத்தில் ஜெரால்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததார்.

    இந்நிலையில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்-1 மகேஷ், ஜெரால்ட்க்கு பிடி ஆணை பிறப்பித்தார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் குருசாமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ராஜசேகரன் மற்றும் தலைமை காவலர் பாபு ஆகிய தனிப்படையினர் திருச்சியில் தலைமறைவாக பதுங்கியிருந்த ஜெரால்ட்டை பிடித்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நாட்டு துப்பாக்கி - கார் பறிமுதல்
    • சமையலுக்காக வைத்திருந்த மிளா இறைச்சியை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    நாகர்கோவில்:

    அழகியபாண்டியபுரம் வனச்சரகம் தடிக்காரன்கோ ணம் அருகே பால்குளத்தில் உள்ள ஒரு தனியார் தோட் டத்தில் மிளா வேட்டை யாடப்படுவதாக மாவட்ட வன அதிகாரி இளைய ராஜாவுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டார். அதன் பேரில் உதவி வன அதிகாரி சிவகுமார் தலைமையில் வனவர்கள் பிரபு, பிரவீன் மற்றும் வன ஊழியர்கள் சரவணன், வேல்முருகன், சுரேஷ், பென்சாம், பிரபு சிங், பிரவீன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தடிக் காரன்கோணம் வனப்பகுதி வீரப்புலியில் உள்ள ஒரு தோட்டத்தில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மிளா இறைச் சியை சமையலுக்கு தயார் செய்து கொண்டு இருந்தது தெரியவந்தது.

    இதைப்பார்த்த அதிகா ரிகள் உடனே வீட்டின் உரிமை யாளரான மனக்கா விளையை சேர்ந்த ராஜேஷ் குமார் (வயது 43) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி னர். அப்போது ராஜேஷ் குமார் மற்றும் தடிக்காரன் கோணத்தை சேர்ந்த ஜெகன் (29), ஜோஸ் மற்றும் சிவராஜன் ஆகியோர் சேர்ந்து மிளாவை வேட்டை யாடியது தெரியவந்தது.

    வனத்துறையினர் ராஜேஷ்குமார் மற்றும் ஜெகன் இருவரையும் கைது செய்தனர். ஜோஸ், சிவராஜன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். மிளாவை வேட்டையாட பயன்படுத்திய ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் மற்றும் சமையலுக்காக வைத்திருந்த மிளா இறைச்சி ஆகிய வற்றை வனத்துறை அதிகாரி கள் கைப்பற்றினர்.

    இதுபற்றி உதவி வன அதிகாரி சிவகுமார் கூறியதாவது:-

    மிளா வேட்டையாடியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப் பட்டவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இன்னொரு நாட்டு துப்பாக்கி தலைமறைவாக உள்ளவர்களிடம் உள்ளது. இந்த மிளா வேட்டையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோகன் (வயது 54). இவரை கடந்த 2009-ம் ஆண்டு, அம்மாபேட்டை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர்.
    • இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த மோகன், மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் சித்தாகவுண்டனூர் தெரு, டி.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 54).

    இவரை கடந்த 2009-ம் ஆண்டு, அம்மாபேட்டை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு கோவை சிங்காநல்லூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த மோகன், மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.

    இதையடுத்து சிங்காநல்லூர் ஜெயில் சூப்பிரண்டு ஊர்மிளா, நேற்று இதுகுறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து, மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • 2013-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
    • இவர் 2002-ம் ஆண்டு மருதங்கோடு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே புத்தன் சந்தை பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 37). இவர் 2002-ம் ஆண்டு மருதங்கோடு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்நிலையில் 2013-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.இதையடுத்து சுனில் குமார் தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் தொடர்ந்து 10 ஆண்டுகளாக தேடி வந்தனர். சுனில் குமார் எங்கு இருக்கிறார் என தெரியாமல் இருந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை பளுகலை அடுத்த கண்ணுமாமூடு பகுதியில் சுனில் குமார் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. அமர்வு நீதிமன்றத்தில் துரைசாமி இந்த வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
    • வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் ஆற்றோரம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் எலும்பன் என்கிற துரைசாமி (வயது 2). இவர் மீது சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் துரைசாமி இந்த வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், அவர் பிணையில் வெளிவர இயலாதபடி பிணை ஆனை கோர்ட்டு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது மீதான குற்ற முறையீட்டுக்க பதில் அளிக்க வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அவர் தலைமறைவான 27.3.2003-ம் ஆண்டு முதல் போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடி வருகின்றனர். ஆனாலட போலீசாரின் கண்களில் படாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் எலும்பன் என்கிற துரைசாமி பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சேலம் டவுன் போலீஸ் நிலையம் வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விழுப்புரம் அருகே பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • இவர் 13 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழுப்புரம்:

    புதுவை அருே உள்ள கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். (வயது 38). இவர் விழுப்புரம் மற்றும் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார். எனவே அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் தினேஷ்குமாரை கைதுசெய்தனர். இவர் 13 ஆண்டு தலைறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 100 நாள் வேலை செய்து ெகாண்டி ருந்த இந்திராணியை சந்தித்து, எனது வீட்டிற்கு வந்து கடன் தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
    • வீட்டினுள் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் மண்ணை தள்ளி மூடினேன் என்று வாக்குமூலம் அளித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள மாரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராணி (வயது 72). அதே ஊரைச் சேர்ந்த சிவசங்கர் (26) இந்திராணியிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். சேலத்தில் குடும்பத்துடன் தங்கி தச்சு வேலை செய்து வந்த சிவசங்கர் கடந்த 19-ந் தேதி மாரங்கியூர் வந்தார். அப்போது 100 நாள் வேலை செய்து ெகாண்டி ருந்த இந்திராணியை சந்தித்து, எனது வீட்டிற்கு வந்து கடன் தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். பணத்தை திரும்ப பெற சென்ற இந்திராணியை கொலை செய்து, அவரிடமிருந்த நகைகளை பறித்துகொண்டு வீட்டிலேயே புதைத்துவிட்டு சிவசங்கர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

    இது தொடர்பாக சிவசங்கரின் தாயார் குப்புவிடம் (45) போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் எனது மகன் இந்திராணியை வீட்டிற்கு அழைத்து அவரை கொன்று நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே புதைத்து விட்டான். 3 பவுன் நகையை விற்று விட்டு இங்கிருந்த கடனை அடைத்து விட்டு, மீதமுள்ள நகையை எடுத்துக் கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூருக்கு சென்று விட்டான். அதன் பிறகு வீட்டினுள் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் மண்ணை தள்ளி மூடினேன் என்று வாக்குமூலம் அளித்தார்.

    இதையடுத்து திருவெண்ணைநல்லூர் போலீசார் குப்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் தனிப்படை அமைத்து சிவசங்கரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த சிவசங்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன் விரோதம் காரணமாக தாக்குதல்
    • ண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி யுள்ள காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது37). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜென்சிமலர் (35). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரபுராஜ் (38). கான்ட்ராக்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிரிஜா (35). இவர் இரணியல் பேரூராட்சியில் 4-வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலராக இருந்து வருகிறார்.

    ஜென்சிமலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரணியல் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வேண்டி மனு செய்திருந்தார். இதனால் இவருக்கும் கிரிஜாவுக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஜென்சிமலர் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். கிரிஜா வீட்டு அருகில் வந்தபோது அங்கு நின்ற பிரபுராஜ், ஜென்சிமலரை தடுத்து நிறுத்தி எங்களுக்கு தெரியாமல் குடிநீர் இணைப்பு கேட்பாயா என அவதூறாக பேசி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் இருவரும் ஜென்சிமலரிடம் இருந்த செல்போன் மற்றும் ஸ்கூட்டரையும் சேதப்படுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இவற்றின் சேதமதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் இருக்கும்.

    காயம் அடைந்த ஜென்சி மலர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பிரபுராஜ், கிரிஜா ஆகிய இருவர் மீதும் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி யுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள அவர்களைதேடி வரு கின்றனர்.

    ×