search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே நகை, பணத்திற்காக மூதாட்டியை  கொன்று புதைத்த வாலிபர் கைது
    X

    கைதான சிவசங்கர் 

    திருவெண்ணைநல்லூர் அருகே நகை, பணத்திற்காக மூதாட்டியை கொன்று புதைத்த வாலிபர் கைது

    • 100 நாள் வேலை செய்து ெகாண்டி ருந்த இந்திராணியை சந்தித்து, எனது வீட்டிற்கு வந்து கடன் தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
    • வீட்டினுள் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் மண்ணை தள்ளி மூடினேன் என்று வாக்குமூலம் அளித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள மாரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராணி (வயது 72). அதே ஊரைச் சேர்ந்த சிவசங்கர் (26) இந்திராணியிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். சேலத்தில் குடும்பத்துடன் தங்கி தச்சு வேலை செய்து வந்த சிவசங்கர் கடந்த 19-ந் தேதி மாரங்கியூர் வந்தார். அப்போது 100 நாள் வேலை செய்து ெகாண்டி ருந்த இந்திராணியை சந்தித்து, எனது வீட்டிற்கு வந்து கடன் தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். பணத்தை திரும்ப பெற சென்ற இந்திராணியை கொலை செய்து, அவரிடமிருந்த நகைகளை பறித்துகொண்டு வீட்டிலேயே புதைத்துவிட்டு சிவசங்கர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

    இது தொடர்பாக சிவசங்கரின் தாயார் குப்புவிடம் (45) போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் எனது மகன் இந்திராணியை வீட்டிற்கு அழைத்து அவரை கொன்று நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே புதைத்து விட்டான். 3 பவுன் நகையை விற்று விட்டு இங்கிருந்த கடனை அடைத்து விட்டு, மீதமுள்ள நகையை எடுத்துக் கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூருக்கு சென்று விட்டான். அதன் பிறகு வீட்டினுள் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் மண்ணை தள்ளி மூடினேன் என்று வாக்குமூலம் அளித்தார்.

    இதையடுத்து திருவெண்ணைநல்லூர் போலீசார் குப்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் தனிப்படை அமைத்து சிவசங்கரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த சிவசங்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×