search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல்சூளை அதிபர்"

    • குமரி மாவட்ட தனிப்படையினர் விரைந்தனர்
    • ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் மட்டும் 6 வழக்குகள் உள்ளன.

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 62). செங்கல் சூளை அதிபரான இவர், கடந்த 9-ந்தேதி இரவு ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக போலீ சார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த ரவுடி அன்பு என்ற அன்பழகன், விஜயன், திருப்பதிசாரம் மணிகண்டன், மிஷன் காம்பவுண்ட் தங்கஜோஸ் ஆகியோர் தான் கொலை யாளிகள் என தெரியவர, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

    மேலும் கொலையாளி களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது மலைப்பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருக்கலாம் என கிடைத்த தகவலின் அடிப்படையில், டிரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இதில் தங்கஜோஸ் போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்கஜோஸ் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் மட்டும் 6 வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் உள்ளது.

    இவர், அன்புவுடன் சேர்ந்து ஏசுதாசனை கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தங்கஜோசின் சகோதரிகள் இருவர், சென்னையில் போலீசாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான தங்கஜோசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள அன்பு உள்ளிட்ட 3 பேரையும் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்ற னர். அவர்களது போட்டோக் களை வெளியிட்டு, பொதுமக்களிடம் பரப்புரை செய்தும் வருகின்றனர். இதற்கிடையில் கொலை யாளிகள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தனிப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறும்போது குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றனர்.

    ×