search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்ணா"

    • பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட முயன்ற பெண்ணால் பரபரப்பு நிலவியது
    • கணவரை பிரிந்த நிலையில, தான் பழகி வந்த லாரி டிரைவர் வேறாரு பெண்ணை திருமணம் செய்யவிருப்பதாக புகார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு ஒரு பெண் வந்தார். அங்கு அவர் தர்ணாவில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். மேலும் அந்த பெண் கூறுகையில், எனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தபோது, எனக்கு லாரி டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்தார். மேலும் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றால், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி நானும் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். ஆனால், என்னை அந்த லாரி டிரைவர் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். அதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது.

    இது பற்றி அந்த லாரி டிரைவரிடம் கேட்டபோது அவரும், அவரது குடும்பத்தினரும் என்னை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். அப்போது அவரிடம், ஏற்கனவே இது தொடர்பாக அந்த பெண் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனு மீது விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

    • 120 மாணவர்களில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக புகார்
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

    ஆம்பூர்:

    திருப்பூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் மஜிருலூம் கல்லூரி இயங்கி வருகிறது.

    இங்கு 120 மாணவர்கள் பி.காம் தேர்வு எழுதினர். அதில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருச்சியில் துப்புரவு பணியாளர்கள் கூலி உயர்வு கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • அமைச்சர் கே.என். நேரு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டலத்தில் தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் 150 பேரை பணியில் அமர்த்தி உள்ளனர். துப்புரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தினக்கூலியாக ரூ. 570 தருவதாக கூறி ரூ.430 மட்டுமே வழங்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.மேலும் துப்புரவு தொழிலாளர்களுக்கு வார விடுமுறை அளிக்காமல் இருந்து வந்தனர். இதனை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை திருச்சி அண்ணா சிலை அருகே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.அப்பொழுது அந்த வழியே லால்குடிக்கு காரில் சென்ற அமைச்சர் கே.என்.நேரு, போராட்டத்தில் ஈடுபட்டோரை கண்டு, காரில் இருந்து இறங்கி வந்தார். பிறகு அங்கு திரண்டு இருந்த துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது உங்களது நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் வாக்குறுதி அளித்தன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை கோரி மனைவி தர்ணா போராட்டம் நடத்தினார்.
    • அருண்குமார் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

    ராமநாதபுரம்

    முதுகுளத்துார் கந்தசாமிபுரம் காலனியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி லதா (25). இவர் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து சிறிது நேரம் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:-

    அருண்குமாரை காதலித்து கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்தேன். ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவர் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை கேட்டு தொல்லை செய்தார். அதன் பிறகு நான் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றேன். அப்போது அருண்குமார் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இது குறித்து கேட்டால் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு கொலை மிரட்டல் விடுகின்றனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • பெரம்பலூர் காவல் நிலையம் முன்பு ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
    • கொலை வழக்கு விசாரணைக்காக, போலீசார் தனது மகனை பிடித்து சென்றதை கண்டித்து போராட்டம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவராக இருப்பவர் சாந்தா தேவி. தி.மு.க.வை சேர்ந்த இவர் தனது கணவரான அரசு பஸ் டிரைவரும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கவுன்சில் தலைவருமான குமார் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் போலீசாரை கண்டித்து பெரம்பலூர் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது சாந்தா தேவி கூறுகையில், நான் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றேன். என்னுடன் எனது மகன் மாறன் (24), என்னுடைய தங்கை மகன் லோகேஷ் (19) ஆகியோர் வந்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்ட தனிப்படை போலீசார், பெரம்பலூரில் சினிமா இயக்குனர் செல்வராஜ் என்ற அப்துல் ரகுமான் கொலை வழக்கில் சம்பந்தமில்லாத மாறன், லோகேஷை பிடித்து மறைமுகமான இடத்தில் வைத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் சம்பந்தமில்லாமல் பிடித்து வைத்திருக்கும் எனது மகனையும், தங்கையின் மகனையும் விடுவிக்க வேண்டும், என்றார்.இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமையிலான போலீசார் போலீஸ் நிலையம் வந்து தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால், அவர்கள் தர்ணாவை கைவிட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • தனியார் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்து செல்வது, மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது, தூய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    தர்ணா

    தனியார் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், எங்களுக்கு ரூ.720 என தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் இப்போது ரூ.320 மட்டுமே வழங்கப்படுகிறது. விடுமுறை எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.825 வரை பிடித்தம் செய்கின்றனர். எனவே நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பணிகள் பாதிப்பு

    அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மருத்து வமனையில் தூய்மை பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
    • கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை, 

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மலுமிச்சம்பட்டி ஹவுசிங் யூனிட் குடியிருப்போர் பொது நல சங்க தலைவர் தனுஷ்கோடி தலைமையில் ஊர் பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    மலுமிச்சம்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 1440 குடும்பங்கள் உள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்கிறோம். இங்கு தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    5 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே 5-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் கட்டி தரப்பட வேண்டும். இங்கு உள்ள அரசு மினி கிளினிக் மூலம் குடியிருப்பு மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

    இது தொடர்பாக பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதில் மலுமிச்சம்பட்டி அடுக்குமாடி குடியிருப்போர் பொது நல சங்க செயலாளர் சுந்தரராஜன், இணை செயலாளர் ஷர்மிளா, மாநில தலித் சேனா தலைவர் உக்கடம் நாகேந்திரன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாசி நாயக்கன்பட்டி காந்தி நகர் காலனியை சேர்ந்த கந்தையன் மற்றும் 50- க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை தலையில் வைத்து சுமந்தபடி வந்தனர்.
    • திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாசி நாயக்கன்பட்டி காந்தி நகர் காலனியை சேர்ந்த கந்தையன் மற்றும் 50- க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை தலையில் வைத்து சுமந்தபடி வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு 1982-ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் 24 சென்ட் நிலம் வழங்கப் பட்டது. இதனை அந்த பகுதியில் பள்ளி நடத்தி வரும் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார்.

    இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இது தொடர்பான வழக்கிலும் எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது. 30 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி யும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை அந்த நிலம் எங்களுக்கு கிடைக்கவில்லை

    இதனால் வீட்டுமனை இல்லாமல் நாங்கள் தவித்து வருகிறோம். எனவே உடனடியாக இந்த நிலத்தை மீட்டு எங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • நாள்தோறும் 18 வார்டுகளில் வீதி வீதியாக சென்று வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
    • அரசு நிர்ணயித்த ரூ. 572 சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் சுமார் 56,000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 36, ஒப்பந்த அடிப்படையில் 181தூய்மை பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

    பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை தனித்தனியாக பிரித்து வாங்குவதற்கு தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் நாள்தோறும் 18 வார்டுகளில் வீதி வீதியாக சென்று வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பல்லடம் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    அரசு விதிப்படி தங்களுக்கு ரூ.572 சம்பளம் தரப்பட வேண்டும். ஆனால் தற்போதைய ஒப்பந்ததாரர் ரூ. 380 மட்டும் தருகிறார். 5 ந்தேதி தரவேண்டிய சம்பளத்தை, முழுமையாக வழங்காமல் பிரித்து, பிரித்து வழங்குகிறார். இதனால் குடும்பத்திற்கு சரியாக சம்பளப் பணம் தர முடியவில்லை. அரசு நிர்ணயித்த ரூ. 572 சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர். போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களிடம் பல்லடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • தெரு விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் உட்பட தேவைகளை நிறைவேற்ற கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
    • பஞ்சாயத்து வரவு செலவு முறையாக பராமரிக்கப்படவில்லை.

     காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இண்டமங்கலம் பஞ்சாயத்து தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ராதிகா காசிராஜன் என்பவரும் துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சங்கர் என்பவரும் இருந்து வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவர் மீதும் நிர்வாகம் மீதும் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக தெரு விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் உட்பட பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் மாதந்தோறும் நடக்க வேண்டிய பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் கூட்டம் 1½ ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்படவில்லை. பஞ்சாயத்து வரவு செலவு உட்பட எவ்வித கணக்குகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை

    உட்பட பல்வேறு புகார்களை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் கூட்டம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. துணைத்தலைவர் சங்கர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஜோதிலட்சுமி, மங்கை ராமு, தங்கமணி ரஞ்சித், வாசுகி துரை ஆகியோர் பஞ்சாயத்து நிர்வாகம் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்காமல் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பஞ்சாயத்து தலைவர் ராதிகா மற்றும் செயலாளர் சரவணன் ஆகியோர் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை கண்டித்தனர்.

    இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது குறித்து துணை தலைவர் சங்கர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், இண்டமங்கலம் பஞ்சாயத்து நிர்வாகத்தில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் குறித்து காரிமங்கலம் பிடிஓ, பஞ்சாயத்து உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி பஞ்சாயத்து நிர்வாகத்தில் நிலவி வரும் சீர்கேடுகளை அகற்றி அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் செய்த தர்ணா போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஊராட்சி செயலாளர் ஆவணங்களை கடிதம் அல்லது தகவல் உரிமைச் சட்டம் மூலமாகத்தான் கேட்டு பெற முடியும்.
    • பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி மன்ற தீர்மானங்களை விவசாயிகள் பார்வையிட ஏற்பாடு செய்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி மன்ற தீர்மான நகல்களை விவசாயிகள் சிலர் நேரில் சென்று வாய்மொழியாக கேட்டதாக கூறப்படுகிறது.இதற்கு ஊராட்சி செயலாளர் ஆவணங்களை கடிதம் அல்லது தகவல் உரிமைச் சட்டம் மூலமாகத்தான் கேட்டு பெற முடியும். வாய் மொழியாக கேட்டால் தர இயலாது என கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி மன்ற தீர்மானங்களை விவசாயிகள் பார்வையிட ஏற்பாடு செய்தனர். இதையடுத்து தீர்மான விவரங்களை பார்வையிட்ட விவசாயிகள் பின்னர் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அவியனூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவில் முறைகேடு நடந்துள்ளது.
    • விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பண்ருட்டி வட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். இதனையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில் , அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குட்பட்ட அவியனூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவில் முறைகேடு நடந்துள்ளது.

    மேலும் வறுமை கோர்ட்டுக்கு கீழ் உள்ளவர்களை இக்குழுவில் சேர்க்காமல் ஒரு சிலர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக அவர்களிடம் கேட்டபோது எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கூறினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்து நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    ×