கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

அவியனூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவில் முறைகேடு நடந்துள்ளது.விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அண்ணா கிராமம் பகுதியை சேர்ந்த மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அண்ணா கிராமம் பகுதியை சேர்ந்த மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பண்ருட்டி வட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். இதனையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில் , அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குட்பட்ட அவியனூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவில் முறைகேடு நடந்துள்ளது.

மேலும் வறுமை கோர்ட்டுக்கு கீழ் உள்ளவர்களை இக்குழுவில் சேர்க்காமல் ஒரு சிலர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக அவர்களிடம் கேட்டபோது எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கூறினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்து நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com