2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை கோரி தர்ணா

2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை கோரி மனைவி தர்ணா போராட்டம் நடத்தினார். அருண்குமார் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை கோரி தர்ணா
Published on

ராமநாதபுரம்

முதுகுளத்துார் கந்தசாமிபுரம் காலனியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி லதா (25). இவர் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து சிறிது நேரம் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:-

அருண்குமாரை காதலித்து கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்தேன். ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவர் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை கேட்டு தொல்லை செய்தார். அதன் பிறகு நான் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றேன். அப்போது அருண்குமார் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இது குறித்து கேட்டால் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு கொலை மிரட்டல் விடுகின்றனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com