search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால் நிலையம்"

    • நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டுள்ளது.
    • அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையரிடம் நேரடியாகச்சென்று இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

    உடுமலை : 

    கிராம கோவில் பூசாரிகளுக்கு, தபால் நிலையம் வாயிலாக ஆயுள் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் வாசு கூறியதாவது:-

    நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டுள்ளது. தபால் நிலைய ஊழியர்கள், வீடு தேடிச்சென்று ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தி, ஓய்வூதியர்களின் ஆயுள் சான்றுகளை டிஜிட்டல் முறையில் வழங்கி வருகின்றனர்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், கிராமப்புற கோவில்களில் பணியாற்றி, 60 வயது கடந்த ஓய்வு பெற்ற பூசாரிகள், வங்கிகள் வாயிலாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.அரசு ஓய்வூதியர்களை போன்று, ஆண்டுதோறும் இவர்களும் ஆயுள் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    அதன்படி, அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையரிடம் நேரடியாகச்சென்று இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.கிராமப்புறங்களில் வசிக்கும் வயதான பூசாரிகள், தொலைவில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு சென்று வருவது சிரமமானது.

    இதுபோன்றவர்கள், ஆயுள் சான்று பெறுவது என்பது மிகுந்த சிரமமானது. எனவே அரசு ஓய்வூதியர்களை போன்றே கோவில் பூசாரிகளுக்கும் தபால் நிலையம் வாயிலாக, ஆயுள் சான்று கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • தபால் நிலையத்தை சாத்தான்குளம் நகரில் உள்ள தெரு பகுதிக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
    • சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வாசகசாலை பஜாரில் தலைமை தபால் நிலைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகில் மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள் உள்ளன. மேலும் அருகிலுள்ள வாசக சாலை பஜாரில் அனைத்து பஸ்களும் வந்து நின்று செல்கின்றன.

    இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவ, மாணவிகளும் தபால் நிலையம் சென்று ஊருக்கு திரும்புவதற்கு போக்குவரத்து வசதியாக இருந்தது. இந்நிலையில் இந்த தபால் நிலையத்தை சாத்தான்குளம் நகரில் உள்ள தெரு பகுதிக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இதை அறிந்த வர்த்தக சங்கத்தினர், பொது மக்கள், வியாபாரிகள் சாத்தான்குளம் தபால் நிலைய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்த சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முத்து ராமலிங்கம் உள்ளிட்ட வருவாய்த்துறை அதி காரிகள் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சு வார்த்தை யின் மூலம் தபால் நிலையம் இடம் மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது உள்ள கட்டிடத்திலே சீரமைப்பு செய்து வழக்கம்போல் தபால் நிலைய அலுவலக பணிகளை செய்வதற்கு தபால் துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக சங்கத்தினரும், ஊர் பொதுமக்களும், தபால் நிலைய அதிகாரி அழகையா,அஞ்சலக ஆய்வாளர் செந்தில் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

    • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அறிக்கை
    • நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    நாகர்கோவில்:

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் நாளை 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. இளை ஞரணி, மாணவரணி சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது தொடர்பான இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் கன்னியா குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயருமான மகேஷ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.மாநகரச் செயலாளர் ஆனந்த், இளைஞர் அணி அமைப்பாளர் சிவராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் குறித்து கிழக்கு மாவட்ட செய லாளரும் மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    அதன்படி கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளை ஞரணி, மாணவரணி சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நாளை காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடக்கிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி கிளைச்செயலா ளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • 75 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த துணை அஞ்சலகம் மூடப்பட்டு வாடகை கட்டிடத்தில் இயக்கி வருகிறது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல்நிலையம் முன்பு 75 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த துணை அஞ்சலகம் பழுதானதால் பராமரிப்பு காரணங்களுக்காக மூடப்பட்டு சிறிது தொலை வில் உள்ள ஆரணி விளையில் வாடகை கட்டிடத்தில் முதல் மாடியில் இயக்கி வருகிறது.

    இதனால் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகள், வயதனாவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விரைவாக தபால் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் பொது மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதனையடுத்து குலசேகரம் வருகை தந்த விஜய் வசந்த் எம்.பி. துணை அஞ்சலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் தபால் நிலையம் சென்று அஞ்சல் அதிகாரியை சந்தித்து காரணங்களை கேட்டு அறிந்தார்.

    பின்பு அங்கிருந்து தொலைபேசி வாயிலாக தபால் துறை மேல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு அறிந்து விரைவாக பணிகள் முடிக்க கேட்டுக்கொண்டார். 

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், வட்டார தலைவர்கள் அருள்ராஜ், சதிஷ், குலசேகரம் நகர தலைவர் விமல்செர்லின், குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி, வேர் கிளம்பி பேரூராட்சி தலைவர் சுதிர், வார்டு கவுன்சிலர்கள் ஸ்டெல்லா, ருபின்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை குறியீட்டு எண் அங்கீகாரத்தை பயன்படுத்தி இ.கே.ஒய்.சி., பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைக்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் தங்கள் பகுதியில் தபால் சேவை வழங்கும் தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் தங்கள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து கொள்ளலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இணைத்த பிறகு https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற பிரதம மந்திரியின் கிஷான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை குறியீட்டு எண் அங்கீகாரத்தை பயன்படுத்தி இ.கே.ஒய்.சி., பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூரில் 48 ஆயிரத்து 748 பயனாளிகள் இணைக்க வேண்டியுள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களையும் பயன்படுத்தி ஆதாரில் செல்போன் எண்ணை இணைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகள் பான் கார்டு பெறவும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் நிரந்த பதிவு செய்யவும், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, குடும்ப அட்டை, பி.எப்., தொடர்பான சேவைகள், ஆதாரில் செல்போன் எண் திருத்தம், இணைத்தல், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்யலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கொரோனா தடுப்பூசி இயக்கம் ஜூலை 15-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதிவரை 75 நாட்கள் நடத்தப்படுகிறது.
    • மக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

    சென்னை :

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்பட உள்ள 'ஹர் கார் திரங்கா' (வீடுதோறும் மூவர்ணம்) இயக்கம் மற்றும் கொரோனா தடுப்பூசி தொடர்பான 75 நாள் பிரசாரம் குறித்து மத்திய அரசின் கலாசாரத்துறை செயலாளர் கோவிந்த் மோகன், மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலாளர் அபூர்வ சந்திரா ஆகியோர் அளித்த பேட்டி வருமாறு:-

    நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்கும் உலகத்திலேயே மிகப்பெரிய நிகழ்வாக 'ஹர் கார் திரங்கா' (வீடு தோறும் மூவர்ணம்) நடத்தப்பட உள்ளது. பல வகைகளில் மக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

    அதிக அளவில் கொடி வினியோகம் செய்யும் நிறுவனங்களை மத்திய ஜவுளித் துறை கண்டறிந்துள்ளது. ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து இந்தியாவில் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் தபால் நிலையங்களிலும் தேசியக் கொடியை மக்கள் நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம். இந்தியாவில் முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி இயக்கம் ஜூலை 15-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதிவரை 75 நாட்கள் நடத்தப்படுகிறது. கொரோனாவை எப்படி வெற்றிகொள்ள முடியும்? என்பதை பிரசாரமாக செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×