search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "life certificate"

    • 7,200-க்கும் மேற்பட்டோர் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர்.
    • ஆயுள் சான்றை உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழி விண்ணப்பிக்க வேண்டும்.

    ஈரோடு:

    கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலா ளர்கள் தொடர்பான 18 அமைப்புசாரா தொழிலா ளர்கள் நலவாரியங்களில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விண்ணப்பங்க ளும் tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறை இணைய தளம் வாயிலாக பெறப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்நலவாரியங்களில் 60 வயது நிறைவடைந்த 7,200-க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியதாரர்களாக மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர்.

    ஆண்டு தோறும் ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றை உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழி விண்ண ப்பிக்க வேண்டும்.

    2023–-24-ம் ஆண்டுக்காக வரும் 30-ந் தேதிக்குள் https://tnuwwb.tn.gov.in/applicationlives/applicationlive என்ற இணைய தள முகவரியில் சமர்பிக்க வேண்டும்.

    ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஓய்வூதிய உத்தரவு நகல், புகைப்படம்–1, வங்கி புத்தக நகல், நடப்பு மாதம் வரை வரவு–செலவு பரிவர்த்தனை விபரம் அடங்கிய விபரங்களை பதிவு பெற்ற தொழிற்சங்கம் அல்லது இ–சேவை மையம் அல்லது சி.எஸ்.சி. கணினி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலக தொலைபேசி எண்:0424-2275591, 2275592 மூலம் அல்லது அலுவலக மின்னஞ்சல்: losserode@gmail.com மூலம் தொடர்பு கொள்ளலாம்.

    இத்தகவலை, தொழிலா ளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டுள்ளது.
    • அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையரிடம் நேரடியாகச்சென்று இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

    உடுமலை : 

    கிராம கோவில் பூசாரிகளுக்கு, தபால் நிலையம் வாயிலாக ஆயுள் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் வாசு கூறியதாவது:-

    நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டுள்ளது. தபால் நிலைய ஊழியர்கள், வீடு தேடிச்சென்று ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தி, ஓய்வூதியர்களின் ஆயுள் சான்றுகளை டிஜிட்டல் முறையில் வழங்கி வருகின்றனர்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், கிராமப்புற கோவில்களில் பணியாற்றி, 60 வயது கடந்த ஓய்வு பெற்ற பூசாரிகள், வங்கிகள் வாயிலாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.அரசு ஓய்வூதியர்களை போன்று, ஆண்டுதோறும் இவர்களும் ஆயுள் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    அதன்படி, அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையரிடம் நேரடியாகச்சென்று இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.கிராமப்புறங்களில் வசிக்கும் வயதான பூசாரிகள், தொலைவில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு சென்று வருவது சிரமமானது.

    இதுபோன்றவர்கள், ஆயுள் சான்று பெறுவது என்பது மிகுந்த சிரமமானது. எனவே அரசு ஓய்வூதியர்களை போன்றே கோவில் பூசாரிகளுக்கும் தபால் நிலையம் வாயிலாக, ஆயுள் சான்று கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓய்வூதியா்கள் வாழ்வுச் சான்றிதழை செப்டம்பருக்குள் சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    • மாநகராட்சி அலுவலகத்தை நேரில் அணுகி சான்றிதழ் படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சியில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் 2022-ஆம் ஆண்டுக்கான வாழ்வுச் சான்றிதழை செப்டம்பருக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஓய்வூதியம் பெறுபவா்கள் மைய அலுவலகத்திலும், வாா்டு அலுவலகங்களில் பெறுபவா்கள் அந்தந்த வாா்டு அலுவலகங்களிலும் (அலுவலக வேலை நாட்களில்) வழங்க வேண்டும்.

    ஓய்வூதிய கொடுப்பாணை புத்தகம், வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் அட்டை, வருமான வரி கணக்கு அட்டை, குடும்ப அட்டை இவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் நேரில் அணுகி சான்றிதழ் படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையா் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

    ×