ஓய்வூதியா்கள் வாழ்வுச் சான்றிதழை செப்டம்பருக்குள் சமா்ப்பிக்க உத்தரவு

ஓய்வூதியா்கள் வாழ்வுச் சான்றிதழை செப்டம்பருக்குள் சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாநகராட்சி அலுவலகத்தை நேரில் அணுகி சான்றிதழ் படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியா்கள் வாழ்வுச் சான்றிதழை  செப்டம்பருக்குள் சமா்ப்பிக்க உத்தரவு
Published on

சேலம்:

சேலம் மாநகராட்சியில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் 2022-ஆம் ஆண்டுக்கான வாழ்வுச் சான்றிதழை செப்டம்பருக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஓய்வூதியம் பெறுபவா்கள் மைய அலுவலகத்திலும், வாா்டு அலுவலகங்களில் பெறுபவா்கள் அந்தந்த வாா்டு அலுவலகங்களிலும் (அலுவலக வேலை நாட்களில்) வழங்க வேண்டும்.

ஓய்வூதிய கொடுப்பாணை புத்தகம், வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் அட்டை, வருமான வரி கணக்கு அட்டை, குடும்ப அட்டை இவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் நேரில் அணுகி சான்றிதழ் படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையா் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

X

Maalai Malar
www.maalaimalar.com