என் மலர்
நீங்கள் தேடியது "Mobile Number"
- அமரன் திரைப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
- சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இதற்கிடையே, அமரன் படத்தில் தனது செல்போன் எண்ணை பயன்படுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மாணவர் வாகீசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பான மனுவில், " சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த மனுவில், மொபைல் எண் வரும் காட்சியை நீக்கக் கோரி ஏற்கனவே தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் தவறை திருத்தவில்லை.
அதனால், படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கவும், தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் இடம்பெற்றிருந்த காட்சி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் காட்சியை நீக்கிய நிலையில் புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், தொடர் அழைப்புகளால் தனியுரிமை பாதிக்கப்பட்டதற்கு பொது சட்டத்தின் கீழ் நிவாரணம் கோரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை குறியீட்டு எண் அங்கீகாரத்தை பயன்படுத்தி இ.கே.ஒய்.சி., பெற்றுக்கொள்ளலாம்.
திருப்பூர் :
பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைக்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் தங்கள் பகுதியில் தபால் சேவை வழங்கும் தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் தங்கள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து கொள்ளலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இணைத்த பிறகு https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற பிரதம மந்திரியின் கிஷான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை குறியீட்டு எண் அங்கீகாரத்தை பயன்படுத்தி இ.கே.ஒய்.சி., பெற்றுக்கொள்ளலாம்.
திருப்பூரில் 48 ஆயிரத்து 748 பயனாளிகள் இணைக்க வேண்டியுள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களையும் பயன்படுத்தி ஆதாரில் செல்போன் எண்ணை இணைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகள் பான் கார்டு பெறவும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் நிரந்த பதிவு செய்யவும், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, குடும்ப அட்டை, பி.எப்., தொடர்பான சேவைகள், ஆதாரில் செல்போன் எண் திருத்தம், இணைத்தல், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்யலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






