search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்சங்கர்"

    • 2011க்கு பிறகு இதுவரை 16,63,440 பேர் குடியுரிமையை துறந்துள்ளனர்.
    • இந்தியாவில் இருந்து சென்றவர்கள் 135 நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர்

    புதுடெல்லி:

    இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் தொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது, 2011ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டு வாரியாக குடியுரிமையை துறந்தவர்கள் குறித்த தகவலை வெளியிட்டார்.

    இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களில் 2011க்கு பிறகு இதுவரை 16,63,440 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 2,25,620 பேர் குடியுரிமையை துறந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் இருந்து சென்ற இவர்கள் 135 நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர் என்று கூறிய அவர், அந்த நாடுகள் தொடர்பான பட்டியலை வெளியிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 5 இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

    • நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகள் இலங்கையில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும்.
    • அரசியலமைப்பு சட்டம் 13ஏ, தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்குகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரே ஆகியோரை சந்தித்து பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுபான்மை தமிழ் சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, இலங்கையில் அரசியலமைப்பு சட்டம் 13A முழுவதுமாக அமல்படுத்தப்படுவது முக்கியம் என இந்தியா கருதுகிறது, என்றார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை நிலவுவதற்கு இந்தியா எப்போதும் ஆதரிக்கும். கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதும், மாகாணசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதும் முக்கியம் என்ற எங்களது பார்வையை, இலங்கை அதிபர் விக்கிரமசிங்கவுடன் பகிர்ந்துகொண்டேன்.

    நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகள் இலங்கையில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் தேவைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் நான் பேசினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில், 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி, இலங்கை அரசியலமைப்பில் 13வது திருத்தச்சட்ட உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அரசியலமைப்பு சட்டம் 13ஏ, தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்குகிறது.

    அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி அவர்கள் ஒன்றாக வாழ முடியும்.

    இந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கையில் உள்ள பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர். 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரியா நாட்டில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாதத்தின் மையம் அமைந்துள்ளது என பாகிஸ்தானை சாடினார்.

    வியன்னா:

    ஆஸ்திரியா நாட்டில் மத்திய வெளிவிவகாரத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அந்நாட்டின் வெளிவிவகார மந்திரியான அலெக்சாண்டர் ஸ்காலென்பர்க்கை சந்தித்துப் பேசினார். அதன்பின் இரு நாட்டு மந்திரிகளும் கூட்டாகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:

    பயங்கரவாதத்தினால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை பற்றி ஆஸ்திரிய நாட்டு தலைவர்களுடன் பேசினேன். எல்லை கடந்த பயங்கரவாதம், வன்முறை, தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் உள்ளிட்டவற்றை பற்றியும் நாங்கள் விரிவாக பேசினோம்.

    போதை பொருட்கள், சட்டவிரோத ஆயுத விற்பனை மற்றும் பிற வடிவிலான சர்வதேச குற்றங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஆழ்ந்த தொடர்பில் இருக்கும்போது, மேற்குறிப்பிட்ட பயங்கரவாத விளைவுகளை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடக்கிவிட முடியாது.

    இந்த பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு மிக அருகே அமைந்துள்ளது. எங்களுடைய அனுபவங்கள் மற்றும் பார்வைகள் பிறருக்கு பயனுள்ளவையாக இருக்கும் என தெரிவித்தார்.

    • மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று சைப்ரஸ் குடியரசு சென்றார்.
    • இதையடுத்து ஆஸ்திரியா நாட்டுக்கும் பயணம் மேற்கொள்கிறார்.

    நிகோசியா:

    மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சைப்ரஸ் குடியரசு நாட்டுக்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நாளை வரை அவர் அந்நாட்டில் இருக்கிறார்.

    இந்தியா, சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே 60 ஆண்டுகளுக்கான தூதரக உறவுகளை இந்த ஆண்டு குறிக்கிறது.

    இந்நிலையில், சைப்ரஸ் நாட்டுக்குச் சென்றுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர் நிகோசியா நகரில் நடந்த தொழில் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    உலக பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மூலம் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீட்டிற்கான வலுவான இலக்குகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றியது.

    2025க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதுமே எங்களது இலக்கு.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் பெரிய மையங்களில் ஒன்றாக இந்தியா இருந்தது. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கினோம்.

    உலகமே ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் நம்பிக்கையே ஜி20 அமைப்பின் மையக்கருத்தாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 100 சதவீதம் உறுதிபூண்டுள்ளோம். இதற்காக ஜி20 அமைப்பின் தலைமை பதவியை பயன்படுத்த விரும்புகிறோம் என தெரிவித்தார்.

    • இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டம் யாங்சி பகுதி சீன நாட்டையொட்டி உள்ளது.
    • இந்தியாவின் தவாங் பகுதியை கைப்பற்ற சீனா பலமுறை முயற்சி செய்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டம் யாங்சி பகுதி சீன நாட்டையொட்டி உள்ளது.

    தவாங் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புத்த மடாலயம் உள்ளது. இங்கிருந்து திபெத் பகுதியை முழுமையாக கண்காணிக்கலாம். இதனால் இந்தியாவின் தவாங் பகுதியை கைப்பற்ற சீனா பலமுறை முயற்சி செய்தது.

    கடந்த 9-ந் தேதியும் சுமார் 600 சீன ராணுவ வீரர்கள் தவாங் பகுதிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி விரட்டியது.

    இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது புகார் கூறினார். இந்திய நில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது. இந்தியா மீது போர் தொடுக்க சீனா ராணுவம் தயாராகி வருகிறது.ஆனால் மத்திய அரசு தூங்கி கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    எல்லை பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். சிலர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. இந்திய எல்லையை இனி யாராலும் தன்னிச்சையாக மாற்ற முடியாது.

    குறிப்பாக சீனாவால் எல்லை கோட்டை தாண்ட முடியாது. சீனாவின் அத்துமீறல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். பிரதமர் மோடியின் உத்தரவுப்படியே எல்லைக்கு ராணுவ வீரர்கள் சென்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் பாராளுமன்றத்திலும் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தை அரசியல் ரீதியாக விமர்சிப்பதை நாங்கள் தடுக்கவில்லை.

    ஆனால் ராணுவ வீரர்களை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்றார்.

    இதற்கிடையே அருணாச்சல பிரதேச எல்லை பகுதியில் இந்திய ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டது. மேலும் அங்கு போர் விமானங்கள், டிரோன்களும் குவிக்கப்பட்டன. டிரோன்கள் மூலம் எல்லை பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இது தவிர இந்திய கடற்படையின் பி-81 ரக கண்காணிப்பு போர் விமானமும் எல்லையில் சீன படைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது.

    இந்திய எல்லைக்குள் இனி சீனா நுழைவதை தடுக்கவும், இந்திய ராணுவ வீரர்கள் எல்லையை விரைவாக சென்றடைய அருணாச்சல எல்லையில் புதிய சாலை அமைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    சுமார் 1748 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த சாலை அமைய உள்ளது. அடர்ந்த மலை பகுதியில் அமையும் இச்சாலை 2026-ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.

    • ராகுல் காந்தி போகச் சொன்னதால் ராணுவம் அங்கு செல்லவில்லை.
    • பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இந்த படைக்குவிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி :

    கிழக்கு லடாக்கை தொடர்ந்து அருணாசல பிரதேசத்தில் நடந்துள்ள சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இந்தியாவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் சீனாவுடனான எல்லைப்பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    அத்துடன் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இந்திய ராணுவம் அனுமதிக்காது என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    டெல்லியில் நடந்த இந்தியா-ஜப்பான் கருத்தரங்கில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சீன எல்லையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான ராணுவத்தை குவித்திருக்கிறோம். 2020-ம் ஆண்டு முதல் சீனா குவித்து வரும் படைகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

    பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இந்த படைக்குவிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாங்கள் சொன்னதால்தான் ராணுவம் அங்கு சென்றிருக்கிறது.

    ராகுல் காந்தி போகச் சொன்னதால் ராணுவம் அங்கு செல்லவில்லை. இந்திய பிரதமர் அவர்களைப் போகச் சொன்னதால் ராணுவம் அங்கு சென்று இருக்கிறது.

    அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் நிலவும் இயல்பு நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றும் எந்த முயற்சியையும் முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. அங்கு சீனாவின் ஆக்கிரமிப்பை அனுமதிக்கக்கூடாது என்பதில் ராணுவம் உறுதியாக இருக்கிறது.

    எல்லையில் அத்துமீற எந்த நாட்டையும் அனுமதிக்க மாட்டோம் என்பது இந்திய அரசின் கடமை மற்றும் இந்திய ராணுவத்தின் கடமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகும்.

    இந்த பரபரப்பான சூழலில் சீனாவில் இருந்து ஏன் இறக்குமதிகள் அனுமதிக்கப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் உற்பத்தித் துறையில் போதிய கவனம் செலுத்தாததால் அந்த நாட்டிலிருந்து இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்கிறது.

    30 ஆண்டுகளாக உங்கள் தொழிலுக்கு கொடுக்க வேண்டிய ஆதரவையும், பாதுகாப்பையும் நீங்கள் கொடுக்கவில்லை. இப்போதுதான் நீங்கள் அதைச் செய்யத் தொடங்கி இருக்கிறீர்கள். 30 ஆண்டுகளில் செய்ததை இப்போது 5 அல்லது 10 ஆண்டுகளில் மாற்ற முடியாது

    இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் கைவிட வேண்டும்.
    • நல்ல அண்டை நாடாக இருக்க பாகிஸ்தான் முயற்சி செய்ய வேண்டும்.

    நியூயார்க்:

    உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகு முறை மற்றும் சவால்கள் நோக்கி செல்லும் வழி என்ற தலைப்பில் அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்தியாவை விட எந்த நாடும் பயங்கரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஹினா ரப்பானி  அண்மையில் தெரிவித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

    அவர்கள் (பாகிஸ்தான்) சொல்கிறார்கள், உண்மை என்னவென்றால், இன்று உலகம் பயங்கரவாதத்தின் மையமாக அவர்களைப் பார்க்கிறது. இந்த பிராந்தியத்தில் மற்றும் பிராந்தியத்திற்கு அப்பால், பயங்கரவாதம் எங்கிருந்து வருகிறது என்பதை உலகம் இன்னும் மறந்து விடவில்லை. எனவே, அவர்கள் கற்பனையில் ஈடுபடுவதற்கு முன்பு தங்களை பற்றி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் தனது நடவடிக்கையை சரி செய்து, நல்ல அண்டை நாடாக இருக்க பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கடைப் பிடிக்க விரும்புகிறது என்பதை அந்நாட்டு அமைச்சர்கள்தான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். உலகின் மற்ற நாடுகள் இன்று பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்கின்றன. பாகிஸ்தானும் வளர்ச்சிக்கு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

    • அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறப்பு.
    • காந்தி சிலையை ஐ.நா.சபைக்கு இந்தியா பரிசாக அளித்திருந்தது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசும் கூட்டாக சிலையை திறந்து வைத்தனர்.

    இந்த சிலையை ஐ.நா.சபைக்கு இந்தியா பரிசாக அளித்திருந்தது. ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சிலை நிறுவப்படுவது இதுவே முதல்முறை. நடப்பு மாதத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இந்த நேரத்தில் காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது. 


    நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், உலகம் முழுவதும் வன்முறை, மோதல் மற்றும் மனிதாபிமானமற்ற நிலை காணப்படுவதாக கூறினார். உலகம் முழுவதும் அமைதியை உறுதி செய்ய மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் லட்சியங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    காந்தி அகிம்சை, உண்மை மற்றும் அமைதியின் சின்னம் என்றும், இது (மகாத்மா சிலை) எதிர்கால சந்ததியினருக்கு உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான நமது கடமையை நமக்கு நினைவூட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பின்னர் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரஸ், பன்முகத்தன்மை இந்தியாவின் மிகப்பெரிய சொத்துகளில் ஒன்று என்பதை உணர்ந்த காந்தி, மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே இணக்கமான உறவுகளுக்காக பாடுபட்டார் என்றார்.

    மகாத்மா காந்தி ஒரு வரலாற்று நாயகர் மட்டுமல்ல, நவீன யுகத்தின் ரட்சகர்களில் ஒருவர், அவரது தொலைநோக்கு சிந்தனைகள் மற்றும் சமூக மாற்றத்திற்கான அக்கறை இன்றும் எதிரொலிக்கிறது என்றும் குட்டரஸ் குறிப்பிட்டார்.

    • காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.
    • நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன என்றார்.

    லக்னோ:

    தமிழகத்திற்கும், உத்தர பிரதேசத்தின் காசிக்கும் இடையே நீண்டகால கலாசார தொடர்பு உள்ளது. இந்தப் பிணைப்பை மீட்டெடுத்து வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு ஒரு மாதம் நடத்துகிறது.

    வாரணாசியில் மத்திய கல்வி அமைச்சகம் ஒருங்கிணைத்து வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பல்துறை பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரெயில்களில் காசி, பிரயாக்ராஜ், அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சி இன்று நடந்தது. சமூகம் மற்றும் தேச கட்டமைப்பில் கோவில்களின் பங்கு என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.

    வணக்கம் காசி என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:

    உலகளவில் இந்தியாவின் எழுச்சி காணப்படுகிறது.

    நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன. அவை நமது வாழ்வின் வழியாகும்.

    நம்பிக்கை மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான இடமாக மட்டும் கோயில்கள் இருக்கவில்லை. சமுதாய நலக் கூடங்களாக இருந்தன. மக்கள் ஒன்று கூடுவதற்கான இடமாகவும், கலையை ஊக்குவிப்பதாகவும் இருந்தன.

    இந்திய பாரம்பரியத்தைக் கொண்டிருப்பவையாக கோயில்கள் இருந்தன. அவை நமது வாழ்க்கையின் பாதையாகவும் இருந்தன.

    என தெரிவித்தார்.

    • தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
    • இந்தியாவின் எழுச்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் வெற்றியும் ஒரு காரணம்.

    வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வழிபாடு நடத்தினார். முன்னதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த காசி தமிழ் சங்கமம் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: 

    இந்தியா தெற்காசிய பிராந்திய ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாகப் பார்க்கும் ஒரு சகாப்தம் இருந்தது, இன்று, யாரும் அதைச் செய்வதில்லை, இந்த பிராந்தியத்தில் முதன்மை சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

    சார்க் அமைப்பு தற்போது செயல்படவில்லை. ஏனெனில் அதன் உறுப்பு நாடுகளில் ஒன்று (பாகிஸ்தான்) அண்டை நாடுகளை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் கையாளலாம் என்று நம்புகிறது. இந்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காத நாடுகள் உள்ளன, ஆனால் அவர்களின் பிரச்சினையில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்படி நாங்கள் கேட்கிறோம். நாம் ஒரு சுதந்திர சக்தியாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவை உலகம் மதிக்கும்.

    இந்தியாவின் எழுச்சியை உலகமே இன்று உற்று நோக்கும் போது, அதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பும் வெற்றிகளும் ஒரு பகுதியாகும். எனவே, நமக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை கவனித்துக் கொள்வது நமது கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர், முதல் மந்திரி அமைச்சர்கள் உள்பட பலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு அவையின் முறைசாரா மாநாட்டில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தற்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் மும்பை மீதானது அல்ல. அது சர்வதேச சமூகத்திற்கு எதிரானது என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர், முதல் மந்திரி அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

    இந்த தருணத்தை நாடு முழுவதும் எப்போதும் நினைவில் வைத்திருக்கும். இதை நாங்கள் கடுமையாக உணர்கிறோம். நீதியின் நடவடிக்கைகளை விரைந்து முடிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை எடுத்துக்கூற விரும்புகிறேன்.

    இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த தாக்குதலை திட்டமிட்டவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த பல்வேறு நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருகிறது என தெரிவித்தார்.

    • விபத்தில் சிக்கிய கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர்.
    • கப்பல் சேதமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது.

    சென்னை:

    இந்திய வெறியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    விபத்தில் சிக்கிய இந்தக் கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர். 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் இருப்பதாகத் தெரிகிறது. கப்பல் சேதமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது. அக்கப்பலில் பயணித்தவர்கள் தங்கள் உயிர்களைக் காக்கப் போராடி வருகின்றார்கள். கப்பல் தொடர்பு எண் 870776789032.

    எனவே, இந்திய பாதுகாப்புத் துறையுடன் தொடர்பு கொண்டு, கடற்படை மீட்பு கப்பலை அனுப்பி, விபத்துக்குள்ளான பயணிகளை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×