என் மலர்

  உலகம்

  பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதை உலகம் இன்னும் மறக்கவில்லை- மத்திய மந்திரி பேட்டி
  X

  மத்திய மந்திரி ஜெய்சங்கர்

  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

  பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதை உலகம் இன்னும் மறக்கவில்லை- மத்திய மந்திரி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் கைவிட வேண்டும்.
  • நல்ல அண்டை நாடாக இருக்க பாகிஸ்தான் முயற்சி செய்ய வேண்டும்.

  நியூயார்க்:

  உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகு முறை மற்றும் சவால்கள் நோக்கி செல்லும் வழி என்ற தலைப்பில் அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

  பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்தியாவை விட எந்த நாடும் பயங்கரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஹினா ரப்பானி அண்மையில் தெரிவித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

  அவர்கள் (பாகிஸ்தான்) சொல்கிறார்கள், உண்மை என்னவென்றால், இன்று உலகம் பயங்கரவாதத்தின் மையமாக அவர்களைப் பார்க்கிறது. இந்த பிராந்தியத்தில் மற்றும் பிராந்தியத்திற்கு அப்பால், பயங்கரவாதம் எங்கிருந்து வருகிறது என்பதை உலகம் இன்னும் மறந்து விடவில்லை. எனவே, அவர்கள் கற்பனையில் ஈடுபடுவதற்கு முன்பு தங்களை பற்றி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

  பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் தனது நடவடிக்கையை சரி செய்து, நல்ல அண்டை நாடாக இருக்க பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கடைப் பிடிக்க விரும்புகிறது என்பதை அந்நாட்டு அமைச்சர்கள்தான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். உலகின் மற்ற நாடுகள் இன்று பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்கின்றன. பாகிஸ்தானும் வளர்ச்சிக்கு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

  Next Story
  ×