என் மலர்

    சைப்ரஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 72.4 சதவீதம் வாக்கு பதிவானது.
    • இதில் 51.9 சதவீத வாக்குகளுடன் நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் வெற்றி பெற்றார்.

    நிக்கோசியா:

    சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 4.05 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். 72.4 சதவீதம் வாக்கு பதிவானது.

    இந்தத் தேர்தலில் முன்னாள் வெளியுறவு மந்திரி நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் (49), 51.9 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆண்டிரியாஸ் மேவ்ராய்யன்னிசுக்கு 48.1 சதவீத வாக்குகள் கிடைத்தன.

    சைப்ரசில் விலைவாசி உயர்வு, முறையற்ற புலம்பெயர்வு ஆகியன தேர்தலில் எதிரொலித்துள்ளது. சைப்ரசில் கிரேக்கம் பேசக்கூடிய தெற்கு பகுதி மற்றும் துருக்கியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வடக்கு பகுதியில் அரை நூற்றாண்டாக காணப்படும் பிரிவினையும் தேர்தலில் எதிரொலித்துள்ளது.

    இதையடுத்து, தேர்தலில் தோல்வியடைந்த மேவ்ராய்யன்னிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சைப்ரஸ் விரும்பிய மாற்றங்களை செய்ய முடியாததற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகோசுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று சைப்ரஸ் குடியரசு சென்றார்.
    • இதையடுத்து ஆஸ்திரியா நாட்டுக்கும் பயணம் மேற்கொள்கிறார்.

    நிகோசியா:

    மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சைப்ரஸ் குடியரசு நாட்டுக்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நாளை வரை அவர் அந்நாட்டில் இருக்கிறார்.

    இந்தியா, சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே 60 ஆண்டுகளுக்கான தூதரக உறவுகளை இந்த ஆண்டு குறிக்கிறது.

    இந்நிலையில், சைப்ரஸ் நாட்டுக்குச் சென்றுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர் நிகோசியா நகரில் நடந்த தொழில் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    உலக பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மூலம் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீட்டிற்கான வலுவான இலக்குகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றியது.

    2025க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதுமே எங்களது இலக்கு.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் பெரிய மையங்களில் ஒன்றாக இந்தியா இருந்தது. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கினோம்.

    உலகமே ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் நம்பிக்கையே ஜி20 அமைப்பின் மையக்கருத்தாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 100 சதவீதம் உறுதிபூண்டுள்ளோம். இதற்காக ஜி20 அமைப்பின் தலைமை பதவியை பயன்படுத்த விரும்புகிறோம் என தெரிவித்தார்.

    ×