search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உலகம் முழுவதும் அமைதியை உறுதி செய்ய காந்தியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்-  மத்திய மந்திரி
    X
    காந்தி சிலை, மத்திய மந்திரி ஜெய்சங்கர்

    உலகம் முழுவதும் அமைதியை உறுதி செய்ய காந்தியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்- மத்திய மந்திரி

    • அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறப்பு.
    • காந்தி சிலையை ஐ.நா.சபைக்கு இந்தியா பரிசாக அளித்திருந்தது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசும் கூட்டாக சிலையை திறந்து வைத்தனர்.

    இந்த சிலையை ஐ.நா.சபைக்கு இந்தியா பரிசாக அளித்திருந்தது. ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சிலை நிறுவப்படுவது இதுவே முதல்முறை. நடப்பு மாதத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இந்த நேரத்தில் காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது.


    நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், உலகம் முழுவதும் வன்முறை, மோதல் மற்றும் மனிதாபிமானமற்ற நிலை காணப்படுவதாக கூறினார். உலகம் முழுவதும் அமைதியை உறுதி செய்ய மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் லட்சியங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    காந்தி அகிம்சை, உண்மை மற்றும் அமைதியின் சின்னம் என்றும், இது (மகாத்மா சிலை) எதிர்கால சந்ததியினருக்கு உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான நமது கடமையை நமக்கு நினைவூட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பின்னர் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரஸ், பன்முகத்தன்மை இந்தியாவின் மிகப்பெரிய சொத்துகளில் ஒன்று என்பதை உணர்ந்த காந்தி, மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே இணக்கமான உறவுகளுக்காக பாடுபட்டார் என்றார்.

    மகாத்மா காந்தி ஒரு வரலாற்று நாயகர் மட்டுமல்ல, நவீன யுகத்தின் ரட்சகர்களில் ஒருவர், அவரது தொலைநோக்கு சிந்தனைகள் மற்றும் சமூக மாற்றத்திற்கான அக்கறை இன்றும் எதிரொலிக்கிறது என்றும் குட்டரஸ் குறிப்பிட்டார்.

    Next Story
    ×