என் மலர்

  நீங்கள் தேடியது "external affairs minister"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
  • இந்தியாவின் எழுச்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் வெற்றியும் ஒரு காரணம்.

  வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வழிபாடு நடத்தினார். முன்னதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த காசி தமிழ் சங்கமம் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: 

  இந்தியா தெற்காசிய பிராந்திய ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாகப் பார்க்கும் ஒரு சகாப்தம் இருந்தது, இன்று, யாரும் அதைச் செய்வதில்லை, இந்த பிராந்தியத்தில் முதன்மை சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

  சார்க் அமைப்பு தற்போது செயல்படவில்லை. ஏனெனில் அதன் உறுப்பு நாடுகளில் ஒன்று (பாகிஸ்தான்) அண்டை நாடுகளை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் கையாளலாம் என்று நம்புகிறது. இந்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காத நாடுகள் உள்ளன, ஆனால் அவர்களின் பிரச்சினையில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்படி நாங்கள் கேட்கிறோம். நாம் ஒரு சுதந்திர சக்தியாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவை உலகம் மதிக்கும்.

  இந்தியாவின் எழுச்சியை உலகமே இன்று உற்று நோக்கும் போது, அதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பும் வெற்றிகளும் ஒரு பகுதியாகும். எனவே, நமக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை கவனித்துக் கொள்வது நமது கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணராக கருதப்படுகிறது.
  • பாகிஸ்தான் சர்வதேச பயங்கரவாதத்தில் நிபுணராக அறியப்படுகிறது.

  வதோதரா:

  குஜராத் மாநிலம் வதோதரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவும் உலகமும், மோடி சகாப்தத்தில் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

  பாகிஸ்தானை போல வேறு எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததில்லை. இந்த வகையான நடத்தை மற்றும் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தது என்பதை நீங்கள் உலகிற்கு எப்படி காட்டுவீர்கள். நரேந்திர மோடி அரசு, இராஜ தந்திர நடவடிக்கையால் மற்ற நாடுகளையும் (பாகிஸ்தான்) பயங்கரவாத பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வைத்துள்ளது.

  இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணராக கருதப்படுகிறது. அண்டை நாடு (பாகிஸ்தான்) சர்வதேச பயங்கரவாதத்தில் நிபுணராக அறியப்படுகிறது. பயங்கரவாதம் இப்போது கட்டுப்படுத்தப்படா விட்டால் எதிர்காலத்தில் அவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா வெற்றிகரமாக உணர்த்தி உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த போரில் உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.

  இதற்கு முன், இது வேறு எங்கோ நடப்பதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என நினைத்து, மற்ற நாடுகள் இதை புறக்கணித்தன. இன்று, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் (பாகிஸ்தான்) மீது அழுத்தம் உள்ளது. இது எங்களின் இராஜதந்திர நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரஷியாவுடனான ராணுவ தளவாட கொள்முதலில் எந்தச் சிக்கலும் இல்லை.
  • இந்தியா, அமெரிக்காவிடமிருந்தும் நிறைய கொள்முதல் செய்துள்ளது.

  வாஷிங்டன்:

  மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 4 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஆகியோரை தனித் தனியாக சந்தித்த அவர், இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 


  இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு, தளவாட ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது. பின்னர் ஜெய்சங்கரும், ஆண்டனி பிளிங்கனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

  உக்ரைனில் நடைபெறும் போருக்குப் பிறகு ரஷியாவிடம் இருந்த ராணுவத் தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா எந்தச் சிக்கலையும் எதிர்கொண்டதாக நான் நினைக்கவில்லை. ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை நாங்கள் எங்கிருந்து பெறுகிறோம் என்பது ஒரு பிரச்சினை அல்ல, தற்போது போர் காரணமாக ஏற்பட்ட அரசியல் பதட்டத்தால் அது ஒரு பிரச்சினையாகி இருக்கிறது. 


  தொழில்நுட்ப தரம், திறன், குறிப்பிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் விதிமுறைகள் ஆகியவற்றை நாங்கள் பார்க்கிறோம், மேலும் எங்கள் தேசிய நலனுக்காக நாங்கள் நம்பும் ஒரு தேர்வை செய்கிறோம். கடந்த 15 ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவிடமிருந்து நிறைய கொள்முதல் செய்துள்ளது.

  பிரான்சிடம் இருந்து நாங்கள் ரஃபேல் விமானத்தை வாங்கினோம், இஸ்ரேலிடம் இருந்தும் வாங்கி உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை, போட்டி நிறைந்த சூழ்நிலையில் சிறந்த ஒப்பந்தத்தை எப்படி பெறுவது என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


  அப்போது பேசிய பிளிங்கன், பருவநிலை மாற்றத் துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். குவாட் மற்றும் ஜி20 அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இரு நாடுகள் இடையேயான உறவுகள் உண்மையான முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்றம் அவர் குறிப்பிட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது
  • பயங்கரவாதத்தின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது.

  பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நட்பு நாடுகள் பலமுறை ஐ.நா.சபையில் தீர்மானங்கள் கொண்டு வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தியது.

  இந்த நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் உயர்மட்ட அமர்வில் இந்தியா சார்பில் பேசிய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் இதை கடுமையாக குறை கூறினார். தமது உரையில் தமது தெரிவித்துள்ளதாவது:

  பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை இந்தியா உறுதியாக பின்பற்றுகிறது. எங்கள் பார்வையில், எந்த ஒரு பயங்கரவாதச் செயலையும் நியாயப்படுத்த முடியாது. எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும், பயங்கரவாதத்தின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது.

  ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் நாடுகளும் உள்ளன. ஐ.நா.வின் தடைகளை அரசியலாக்குபவர்கள், சில சமயங்களில் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அளவிற்கு கூட அதை செய்கிறார்கள். அவர்களின் சொந்த நலனுக்கோ அல்லது அவர்களின் நற்பெயருக்கோ அதனால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குமரி மாவட்ட மூன்று மீனவர்கள், இந்தோனேசிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
  • கைது நடவடிக்கைகளை தவிர்க்க கடல் சார்ந்த நாடுகளுடன் அரசு ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

  டெல்லி:

  கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கரை சந்தித்து தமிழக மீனவர்கள் மீட்பு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

  வெளிநாட்டு சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் துயரங்கள் குறித்து தெரிவித்த அவர், கடலில் மீன் பிடிக்க செல்லும்போது வழி தவறி அந்நிய நாட்டு கடல் எல்லைக்குள் செல்லும் மீனவர்களை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்வதை அவர் எடுத்துரைத்தார்.

  குறிப்பாக இந்தோனேசிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை அரசு தலையிட்டு விடுதலை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சிறையில் இருந்த போது ஒரு மீனவர் உயிரிழந்ததையும் மற்றும் மீனவர்களின் படகுகள் மற்றும் பொருட்கள் அந்த அரசின் வசம் இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

  இத்தகைய கைது நடவடிக்கைகளை தவிர்க்க கடல் சார்ந்த நாடுகளுடன் தூதரக ரீதியான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அத்தகைய பேச்சு வார்த்தைகளின் போது கடலோர பாராளுமன்ற தொகுதிகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து கருத்து கேட்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

  மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் மீனவர்கள் வேலைக்கு சேர்ந்தவுடன் அவர்களது பாஸ்போர்ட்களை வேலை செய்யும் நிறுவனங்கள் பிணையாக எடுத்துக் கொள்வதை சுட்டிக்காட்டிய விஜய்வசந்த் எம்.பி., மீனவர்கள் நாடு திரும்ப விரும்பும் போது பாஸ்போர்ட் கிடைக்காமல் தவிப்பதாக கூறினார்.

  குமரி மாவட்டத்தை சேர்ந்த எட்டு மீனவர்கள் ஓமன் நாட்டில் இத்தகைய சந்தர்ப்பத்தில் சிக்கி அலை கழிக்கப்படுவதையும் அப்போது அவர் தெரிவித்தார்.  இந்திய தூதரகங்கள் இந்த விஷயங்களில் தலையிட்டு மீனவர்களை உடனடியாக இந்தியாவிற்கு பத்திரமாக திருப்பி அனுப்ப வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவின் பங்கு குறித்த விவாதம் நடைபெற்றது
  • இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

  பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், உணவு, மருந்துகள், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை காணப்படுவதால் அந்நாட்டு பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இலங்கைக்கு கடன் உதவித் திட்டத்தின் கீழ், எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் உணவு பொருள்களை வழங்கி இந்தியா உதவி வருகிறது.

  இந்நிலையில் இலங்கை நிலைமை குறித்து வெளியுறவுத் துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் இன்று வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை இணை மந்திரிகள் முரளீதரன், மீனாட்சி லேகி, ராஜ்குமார் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  மேலும் பாஜகவை சேர்ந்த ராஜ்தீப் ராய் மற்றும் ஜிவி எல் நரசிம்மராவ் சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி, திமுக எம்பி திருச்சி சிவா, பிஜு ஜனதா தளம் சார்பில் சுஜீத் குமார் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  இலங்கை பொருளாதார நெருக்கடி, அந்நாட்டில் வெளியேறி இந்தியாவிற்கு வருவோர் உள்ளிட்டவை குறித்து அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

  பல்வேறு விவகாரங்கள் மற்றும் இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவின் பங்கு குறித்த சாதகமான சூழ்நிலை குறித்து விவாதம் நடைபெற்றதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

  இந்த கடினமான நேரத்தில் நமது அண்டை நாடான இலங்கையுடன் நிற்பதன் அவசியத்திற்கு இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரதமர் மோடி அரசின் தொலைநோக்கு பார்வையால் நாடு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள முடிந்தது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு நான்கு முக்கிய சவால்களை எதிர்கொண்டது.

  பெங்களூரு:

  பிரதமர் நரேந்திர மோடி அரசு எட்டாண்டு காலம் பதவி நிறைவு செய்துள்ளதையொட்டி, பெங்களூருவில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

  உக்ரைனில் தற்போதைய சூழ்நிலையின் தாக்கங்கள், எரிபொருள், உணவு மற்றும் உரம் ஆகிய மூன்று 'எஃப் களை நெருக்கடியில் தள்ளி உள்ளன. இந்த மூன்றின் விலைகள் உயர்ந்துள்ளன. இதனால் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க பணவீக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

  உணவு விஷயத்தில், அவை உண்மையில் ஏழ்மை நாடுகளில் பசி சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். உர விஷயத்தில், அது பல நாடுகளில் அடுத்த அறுவடை வரை ஒரு அடுக்கு சிக்கலை உருவாக்கும்.

  கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு நான்கு முக்கிய சவால்களை எதிர்கொண்டது. அந்த நான்கு சிக்கல்கள் கொரோனா, சீனாவுடனான பதற்றம், ஆப்கானிஸ்தான் நிலைமை மற்றும் உக்ரைன் போர். இந்த நான்கு முக்கிய நிகழ்வுகள், தொலைதூரத்தில் உள்ள ஒன்று ஒரு தேசத்தின் நல்வாழ்வில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

  வடக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்ற அண்டை நாடு (சீனா) முயற்சிக்கிறது. சீனாவைப் பொறுத்த மட்டில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை, எங்களிடம் உள்ள புரிந்துணர்வுகளை மீறும் வகையிலும் மாற்றப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதில் நாங்கள் மீண்டும் தெளிவாக இருக்கிறோம்

  (பாகிஸ்தான்) எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வரப்பட மாட்டோம் என்ற தெளிவான முடிவை (எட்டு ஆண்டுகளில்) நாங்கள் எடுத்தோம்.

  கடந்த எட்டு ஆண்டு கால மோடி அரசின் மற்றொரு முக்கியமான சாதனை, வங்கதேசத்துடனான நில எல்லை ஒப்பந்தம். இது இந்தியா-வங்காளதேச உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தம், வங்காளதேசத்திற்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் உண்மையில் மிகப்பெரிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டது.

  பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் முழுமையான தொலைநோக்கு பார்வையால் தேசம் இந்த சவால்களை எதிர்கொள்ள முடிந்தது. சமூகத்தின் எந்தவொரு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேசிய பாதுகாப்பே அடித்தளமாகும் என்று நான் நம்புகிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் நிகுயென் சுவான் புக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #NguyenXuanPhuc #Vietnam
  ஹனாய்:

  ஆசியான் அமைப்பில் நேசநாடுகளில் ஒன்றாக வியட்நாம் உள்ளது. வியட்நாமின் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின் மின் தலைமையிலான இந்தியா - வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் வியட்நாம் சென்றுள்ளார். வியட்நாமை தொடர்ந்து 29-ம் தேதி (நாளை) கம்போடியாவுக்கு செல்ல உள்ளார்.

  இந்நிலையில், இன்று வியட்நாம் பிரதமர் நிகுயென் சுவான் புக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். வியட்நாம் பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோருக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. #SushmaSwaraj #NguyenXuanPhuc #Vietnam
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2 நாள் அரசு முறை பயணமாக பக்ரைன் சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு பிரதமர் கலீபா பின் சல்மான் அல் கலிபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #Bahrain #SushmaSwaraj
  மனாமா:

  இரு நாள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று பக்ரைன் சென்றடைந்தார். அப்போது, அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி சேக் காலித் பின் அகமது பின் முகமது அல் கலிஃபா மனாமா விமான நிலையத்தில் அரசு மரியாதையுடன் அவரை வரவேற்றார்.

  இதையடுத்து நேற்று மாலை, பக்ரைனில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரக கட்டிடத்தை சுஷ்மா சுவராஜ் திறந்து வைத்தார்.  இந்நிலையில், இன்று பக்ரைன் பிரதமர் கலீபா பின் சல்மான் அல் கலிபாவுடன் நேரில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. #Bahrain #SushmaSwaraj
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பெல்ஜியம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அங்குள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். #InternationalYogaDay2018 #SushmaSwaraj

  புருசல்ஸ்:

  ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

  இந்த பயணத்தின் முதல்கட்டமாக  திங்கட் கிழமை இத்தாலி சென்றடைந்த சுஷ்மா அந்நாட்டின் பிரதமர் கியூசெப்பி கான்ட்டேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பிரான்ஸ் சென்ற சுஷ்மா அந்நாட்டு பிரதமர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இருநாட்டு முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்தார்.

  சுஷ்மா சுவராஜ் நேற்று லக்சம்பர்க் நாட்டிற்கு சென்றடைந்தார். அந்நாட்டு பிரதமர் சேவியர் பெட்டலை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவினை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் பெல்ஜியம் நாட்டுக்கு சென்றார்.

  இன்று பெல்ஜியம் நாட்டின் புருசல்ஸ் பகுதியில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ‘பருவநிலை, அமைதி, பாதுகாப்பு: செயல்பாட்டுக்கான நேரம்’ என்னும் தலைப்பில்  சிறப்புரையாற்றிய சுஷ்மா அங்குள்ள யெஹுடி மெனுஹின் அரங்கத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் யோகா பயிற்சிகள் மேற்கொண்டார்.   பிரபல மதகுருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் சந்தித்து விட்டு 24-ம் தேதி டெல்லி திரும்புகிறார். #SushmaSwaraj #InternationalYogaDay2018