search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெகன் மோகன் ரெட்டி"

    • நாயுடுவுக்காக தனது கட்சிப் பணியாளர்கள் உட்பட அனைத்தையும் தியாகம் செய்து வருகிறார்.
    • "ஆந்திராவில், எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் தனித்து போட்டியிட முடியாது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:-

    நடிகர் பவன் கல்யாண் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மனைவியை மாற்றி வருகிறார். அவர் ஒரு கல்யாண ஸ்டார். அவரை போன்ற அரசியல்வாதியை எந்தப் பெண் குழந்தைகளின் பெற்றோராவது நம்ப முடியுமா? பவன் கல்யாண் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது முதல் மந்திரியாக அமர்ந்தால் சிறுமிகளின் எதிர்காலம் என்னவாகும்?

    "மிஸ்டர். பவன் கல்யாணுக்கு வாக்களிப்பது புத்திசாலித்தனமான முடிவு அல்ல பக்கத்து வீட்டுக்காரரான சந்திரபாபு நாயுடு ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியாக வருவதற்காக அரசியல் கட்சியை நிறுவிய ஒரே அரசியல்வாதி பவன் கல்யாண் மட்டுமே.


    நாயுடுவுக்காக தனது கட்சிப் பணியாளர்கள் உட்பட அனைத்தையும் தியாகம் செய்து வருகிறார். ஒரு பேக்கேஜ்'க்காக மட்டுமே அவர் தியாகம் செய்து வருகிறார்.

    "ஆந்திராவில், எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் தனித்து போட்டியிட முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நடிகர் பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முதல் மந்திரி விமர்சித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தகவல்.
    • ஜென் மோகன் ரெட்டி அவருக்கு கட்சி துண்டை அணிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-இல் தன்னை இணைத்து கொண்டார்.

    ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி மற்றும் ராஜம்பேட்ட மக்களவை உறுப்பினர் பி. மிதுன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் அம்பதி ராயுடு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

     


    இது தொடர்பான அறிவிப்பை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கட்சியில் இணைந்த அம்பதி ராயுடுவை வரவேற்கும் விதமாக ஜென் மோகன் ரெட்டி அவருக்கு கட்சி துண்டை அணிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி மட்டுமின்றி ஐ.பி.எல். தொடரில் அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், பல்வேறு மாநிலங்களில் கிரிக்கெட் சங்கங்களிலும் விளையாடி இருக்கிறார்.

    • ஆந்திர அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்குகிறார்.
    • பிரமோற்சவ விழாக்களின் போது சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவ விழா நடைபெற உள்ளன.

    வருகிற செப்டம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

    பிரமோற்சவ விழா போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி கூறியதாவது:-

    செப்டம்பர் மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின் முதல் நாள் ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கை வழங்குகிறார்.

    வருடாந்திர பிரமோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும். சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது.

    மேலும் வாகன சேவைகள் மூலம் பக்தர்களுக்கு சிறந்த தரிசனம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. அறைகள் முன்பதிவு அன்னபிரசாதம் லட்டுகள் மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும்.

    பிரமோற்சவ விழாக்களின் போது சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி இன்று நடைபெற இருந்த கருட சேவை விகானச மகாமுனி ஜெயந்தியை ஒட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 71,132 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26 963 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 14 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • தமிழகத்தில் இருந்து அறங்காவலர் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    • கருணாகர் ரெட்டி ஏற்கெனவே ராஜசேகரரெட்டி ஆட்சியின் போது திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவியை வகித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவி, அவரது சித்தப்பாவான ஒய்.வி.சுப்பா ரெட்டிக்கு வழங்கப்பட்டது.

    அவர் தொடர்ந்து 2-வது முறையாக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் நாளை மறுநாள் நிறைவடைகிறது.

    இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. கருணாகர் ரெட்டி, புதிய அறங்காவலர் குழு தலைவராக நேற்று அறிவிக்கப்பட்டார்.

    கருணாகர் ரெட்டி ஏற்கெனவே ராஜசேகரரெட்டி ஆட்சியின் போது திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவியை வகித்துள்ளார்.

    மேலும் உள்ளூர்காரர் என்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என கருதப்படுகிறது. வரும் 16-ந் தேதிக்குள், அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமனம் செய்வது குறித்து முதல்வர் ஜெகன் ஆலோசித்து வருகிறார்.

    இதில் தமிழகம், கர்நாடகம், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் பேரின் நியமிக்கப்பட உள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து அறங்காவலர் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 81,472 பேர் தரிசனம் செய்தனர். 34,820 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • சந்திரபாபு நாயுடன் கடந்த மாதம் அமித் ஷாவை சந்தித்து பேசினார்
    • இரண்டு நாள் பயணமாக ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லி செல்கிறார்

    ஆந்திர பிரதேச மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதோடு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும சந்திக்க இருப்பதாக தெரிகிறது. கடந்த மாதம் சந்திரபாபு நாயுடு அமித் ஷா மற்றும் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
    • ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.

    பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதேபோல், ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உறுதிப்படுத்தி உள்ளார்.

    இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று கூறிய அவர், ஜனநாயகத்தின் உண்மையான உணர்வோடு ஒய்ஆர்சிபி கலந்து கொள்ளும் என்றார்.

    மேலும் இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், பிரமாண்டமான, கம்பீரமான மற்றும் விசாலமான பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அரசியல் கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது அவர், இதுபோன்ற ஒரு நல்ல நிகழ்வைப் புறக்கணிப்பது ஜனநாயகத்தின் உண்மையான பற்று அல்ல என்றும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    • இரு மாநில மக்களின் நன்மையைக் கருதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • ஆந்திர மாநில மக்கள் தலைகுனியும்படி ஆளுங்கட்சி தலைவர்கள் குடிகாரர்கள் போல பேசுகிறார்கள் இதனை நிறுத்த வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குறித்து புகழ்ந்து பேசினார்.

    ரஜினிகாந்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா மற்றும் ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் விமர்சனம் செய்தனர். அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகி ராமையா கூறியதாவது:-

    பிரபல நடிகர் ரஜினிகாந்த் குறித்து அமைச்சர்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் கருத்துக்கள் தெரிவித்து விமர்சனம் செய்கின்றனர். தொடர்ந்து ரஜினியை விமர்சனம் செய்தால் ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே பகை, கருத்து வேறுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இரு மாநில மக்களின் நன்மையைக் கருதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ஆந்திர மாநில மக்கள் தலைகுனியும்படி ஆளுங்கட்சி தலைவர்கள் குடிகாரர்கள் போல பேசுகிறார்கள் இதனை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் அரசியல் ரவுடித்தனம் நிச்சயமாக ஒடுக்கப்படும்.
    • நான் 1978ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறேன்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மங்கள கிரியில் தெலுங்கு தேசம் வக்கீல்கள் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சி தலைவரும், ஆந்திர சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் செயல்களுக்கு வக்கீல்கள் இரையாக வேண்டாம். இந்த அரசின் அட்டூழியங்கள் வட்டியுடன் திருப்பித்தரப்படும். இந்த சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வக்கீல்கள் சமூகம் கட்சியுடன் கைகோர்க்க வேண்டும்.

    இந்த அரசைப் போன்ற சர்வாதிகார தலைமை ஆங்கிலேயர்களிடம் கூட இல்லை. தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் அரசியல் ரவுடித்தனம் நிச்சயமாக ஒடுக்கப்படும். இந்த அரசின் பொல்லாத கொள்கைகளுக்கு எதிராக அரசியல் போருடன் சட்டப் போராட்டத்தையும் நடத்த வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன்.

    அதிகம் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். கடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் 47 வக்கீல்களுக்கு சீட் வழங்கியது. நான் 1978ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறேன்.

    ஆனால் மாநிலத்தில் இதுபோன்ற சூழ்நிலையை ஒருபோதும் கண்டதில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • இவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்த ரோஜா

    இந்நிலையில், நடிகையும் ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வரும் ரோஜா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு திட்டங்களுக்கான நிதிகளை விடுவிப்பது குறித்து பிரதமருடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை.
    • போலவரம் நீர்ப்பாசனத் திட்டத்தின் மதிப்பு ரூ.55,548 கோடி என திருத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. அப்போது போலவரம் நீர்ப்பாசன திட்டத்தின் திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கு விரைவாக ஒப்புதல் அளிக்கும்படி பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

    இதுதவிர விஜயநகரம் மாவட்டம் போகபுரம் விமான நிலையம், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மற்றம் பல்வேறு மத்திய அரசு திட்டங்களுக்கான நிதிகளை விடுவிப்பது குறித்தும் பிரதமருடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.

    ஆந்திராவில் 2.91 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கவும், 960 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், தொழிற்சாலைகள் மற்றும் 540 கிராமங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், கோதாவரி ஆற்றில் போலவரம் நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்த ரூ.35,000 கோடி செலவாகும் என ஆந்திர அரசு முதலில் மதிப்பிட்டிருந்தது. ஆனால், அதிக செலவு ஏற்படும் என்பதால் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றப் பணிகளை நிறைவேற்ற மாநில அரசால் முடியவில்லை.

    எனவே, நீர்ப்பாசனத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.55,548 கோடி என திருத்தப்பட்டது. இந்த திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஆந்திராவின் நிடாடவூலு பகுதியில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தேனீக்கள் கொட்டியதில் லேசான காயமடைந்தார்.
    அமராவதி:

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூர பாதயாத்திரையை தொடங்கினார். இந்நிலையில், பாதயாத்திரையின் ஒரு பகுதியாக நிடாடவூலு தொகுதிக்கு உள்பட்டுள்ள கனுரு கிராமத்தில் நடந்த கூட்டத்தில் பொதுமக்களிடையே பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது, அங்குள்ள மரத்தில் இருந்த தேனீக்கள் கூட்டத்தை யாரோ கலைத்து விட, தேனிக்கள் கலைந்து அங்குள்ளவர்களை கொட்ட ஆரம்பித்தது. இதில், ஜெகன் மோகனும் தப்பவில்லை. அவரை தொண்டர்கள் துணிகளை கொண்டு மறைக்க பின்னர் அங்கிருந்து அவரை அப்புறப்படுத்திச் சென்றனர்.

    தேனீக்கள் கொட்டியதில் ஜெகன் மோகன் ரெட்டி லேசான காயமும், பலர் பலத்த காயமும் அடைந்தனர். இதனை அடுத்து, அவர் மருத்துமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துவிட்டு தனது வீட்டுக்கு திரும்பினார்.
    ×