search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை உயர்நீதிமன்றம்"

    • பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்களை சென்னை ஐகோர்ட்டு வெளியிட்டுள்ள நிலையில் அந்த உத்தரவு இணையதளத்திலும் பார்க்கும் வகையில் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
    • அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டதும், தகுதி இழப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து விடும்.

    சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்றுள்ள பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் தானாக இழந்துள்ளார்.

    பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியும் காலியாக விட்டது.

    அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நடவடிக்கைகளை தமிழக சட்டசபை செயலகம் மேற்கொள்ள உள்ளது. பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்களை சென்னை ஐகோர்ட்டு வெளியிட்டுள்ள நிலையில் அந்த உத்தரவு இணையதளத்திலும் பார்க்கும் வகையில் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

    அது மட்டுமின்றி அந்த உத்தரவின் நகல் சட்டசபை செயலகத்துக்கும் இன்னும் ஓரிரு நாளில் அனுப்பப்பட்டு விடும். அந்த விவரங்கள் கிடைத்ததும் சட்டசபை செயலகம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பொன்முடியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும். அந்த அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டதும், தகுதி இழப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து விடும்.

    இது குறித்து சட்டசபை செயலக அதிகாரிகளிடம் கேட்டபோது, பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை கிடைத்துள்ளதால் தீர்ப்பு வழங்கிய ஒரு வாரத்துக்குள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த வகையில் சட்டசபை செயலகம் பணியை தொடங்கும்.

    ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பொன்முடியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்வதற்கான நடவடிக்கையை ஒரு வாரத்திற்குள் விரைந்து செயல்படுத்தி விடுவோம். இதில் காலதாமதம் செய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.

    எனவே அடுத்த வாரம் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு சட்டசபை செயலகம் கருத்துரு அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
    • 2 ஆண்டுக்கு மேல் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் நிற்கவும் முடியாது.

    கடந்த தி.மு.க. ஆட்சியில் 2006-2011 காலக் கட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    பொன்முடி அப்பீல் செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவர் இப்போது சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது. பதவி இழந்துவிட்டார். எம்.எல்.ஏ. பதவியும் பறிபோய் விடுகிறது. சட்டசபைக்கும் செல்ல முடியாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (1)ன் படி ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின் கீழ் ஒருவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். அந்த வகையில் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோய் உள்ளது.

    இந்த விஷயத்தில் 2 ஆண்டுக்கும் மேல் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் நிற்கவும் முடியாது. பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதால் அவர் அப்பீல் செய்து அதிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் சிறைக்குதான் செல்ல வேண்டும்.

    அந்த வகையில் 3 ஆண்டு தண்டனை அனுபவித்தால் அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. ஆகமொத்தம் 9 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் நிற்க இயலாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • 2016-ம் ஆண்டு விழுப்புரம் நீதிமன்றம் விடுதலை செய்தது.
    • 2017-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின்போது 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2015-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சுந்தரமூர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.1 கோடியே 36 லட்சத்திற்கு மேல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. ஆந்திர மாநில பத்திர பதிவுத்துறை தாசில்தார் மற்றும் வங்கி அதிகாரிகள் உட்பட 39 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பொன்முடி மீது போலீஸ் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்கப்பட்டன.

    இதை பொன்முடி தரப்பினர் மறுத்தனர். இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர்களை விடுதலை செய்கிறேன் என்று கூறியிருந்தார்.

    இதை எதிர்த்து ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். பின்னர் நேற்று முன்தினம் பொன்முடி குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு 21-ந்தேதி (இன்று) வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

    தண்டனை அறிவிக்கப்பட இருப்பதால் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • கருத்தரங்குகளில் மது விநியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சி மாநாடுகளிலும் மது விநியோகிக்க கோருவர்.
    • வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் மேற்கொள்ளபட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்னிலையில் வந்தது.

    அப்போது, "டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு" என்று

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்தது.

    இதற்கிடையே, கருத்தரங்குகளில் மது விநியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சி மாநாடுகளிலும் மது விநியோகிக்க கோருவர். சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது மதுபானம் விநியோகிப்பது அரசின் சட்டத்துக்கு எதிரானது என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த தமிழக அரசு, விளையாட்டு மைதானங்கள், போட்டிகள் நடக்கும் இடங்களில் மதுபானங்கள் நிதியோகிக்கபட மாட்டாது என்றது.

    மேலும், இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • பணத்தை திரும்ப செலுத்தாததால், துருவ நட்சத்திரம் படம் இன்று வெளியாகவில்லை.
    • இயக்குனர் கவுதம் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. பல வருடங்களாக சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில், இப்படம் இன்று ரிலீஸாக இருந்தது.

    ஆனால், கவுதம் மேனனுக்கு எதிரான வழக்கில் ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ.2 கோடியை இன்று காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்காவிட்டால் படம் வெளியாக அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பணத்தை திரும்ப செலுத்தாததால், துருவ நட்சத்திரம் படம் இன்று வெளியாகவில்லை.

    இதனால், இயக்குனர் கவுதம் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக இயக்குனர் கவுதன் மேனன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த விளக்கத்தில், " பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்பதால் இன்று படத்தை வெளியிடவில்லை.

    ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற பணம் திங்கள் அல்லது புதன்கிழமைகளில் திரும்ப செலுத்தப்படும்.

    பணத்தை செலுத்திய பிறகே துருவ நட்சத்திரம் படம் வெளியிடப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல் எடுத்து பணம் சம்பாதித்ததாக குற்றச்சாட்டு.
    • அதிகாரிகள், தொழில் அதிபர்கள் வீட்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல் அள்ளி சம்பாதித்ததாகவும், குவாரி ஏல போட்டியில் கிடைத்த பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டில், அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் மாதம் மணல் குவாரி அதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. மேலும், அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகள், தொழில் அதிபர்கள் வீட்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர், திருச்சி கலெக்டர் உள்ளிட்ட 10 மாவட்ட கலெக்டர்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்ட்டிருந்தது. நீர்வளத்துறை முதன்மை பொறியாளர், நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில்தான் கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    • ஆல் இன் பிட்சர்ஸ் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்.
    • நாளை காலைக்குள் வழங்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

    இதற்கிடையே, சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க கவுதம் மேனன், ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.40 கோடியை பெற்றுள்ளதாகவும், ஆனால், படத்தையும் முடிக்கவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை என அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில், ஆல் இன் பிட்சர்ஸ் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், துருவ நட்சத்திரம் திரைப்படம் நிபந்தனையுடன் நாளை வெளியிட அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி, "ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை நாளை காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் துருவ நட்சத்திரம் வெளியிட அனுமதி வழங்கப்படுகிறது.

    நாளை காலைக்குள் வழங்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது" என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே ஜாமின் மனுவை தள்ளுபடி செய்திருந்தது
    • ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது

    அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

    ஆனால் அவருக்கு அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அவரிடம் உடனடியாக விசாரணை நடத்த இயலாத நிலை இருந்தது.

    மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கோர்ட்டு மூலம் அனுமதி பெற்றனர். அதன்படி அவரிடம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையையும் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அங்கு அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

    சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு கடந்த 14-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை குறிப்பிட்டு வாதாடினார்.

    வேலை பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 34 லட்சம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் 10 ஆண்டுகள் வங்கிக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளார். வருமான வரி கணக்குகளையும் தாக்கல் செய்துள்ளார். இதில் இருந்தே அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆகிறது. எனவே, இந்த வழக்கில் அவர் உள்நோக்கத்துடன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்றும் தெரிவித்தார்.

    அமலாக்கத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், "செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

    மேலும் சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமின் வழங்க முடியும். செந்தில் பாலாஜிக்கு அதுபோன்ற நிலை ஏற்படவில்லை.

    செந்தில் பாலாஜியின் கால் மரத்துப்போவது போன்ற நிலை சமீபத்தில் ஏற்பட்டது அல்ல. அறுவை சிகிச்சை செய்தது முதலே அவருக்கு இந்த பிரச்சினை இருந்து வருகிறது. மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமின் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

    இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளிலும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என குறிப்பிடவில்லை. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். எனவே, இந்த நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார்" என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
    • இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வக்கீல்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

    கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட இருவரும் 2 ஆண்டுகள் பணியாற்றுவார்கள்.

    இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமின் மனு தள்ளுபடி
    • நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கைது செய்யப்பட்டபோது, நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அப்போது இரண்டு முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் முன், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அப்போது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

    புழல் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு நேற்று காலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில்தான் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • 2001 முதல் 2006 வரையில் ஆட்சியில் ஓ.பி.எஸ். வருவாய்த்துறை மந்திரியாக இருந்தார்
    • 1.76 கோடி ரூபாய் அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், ஜெயலிதாவின் 2001-2006 ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறை மந்திரியாக இருந்தார்.

    2006-ம் ஆண்டு ஆட்சி மாறியபோது, ஓ. பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 374 சதவீதம் அதிகமாக 1.76 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர் செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு முதலில் மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    2011-ல் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்தது, அப்போது, வழக்கை திரும்ப பெற்றுக் கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. 2012-ல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், போதிய ஆதாரங்கள் இல்லாத அடிப்படையில் வழக்கு திரும்பப்பெற முடிவு செய்து மனுதாக்கதல் செய்யப்பட்டது.

    இதனால் சிவகங்கை நீதிமன்றம் ஓ. பன்னீர் செல்வம் உள்பட்ட வழக்கில் இணைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

    இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றம் இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தும் என அறிவித்தது. அதன்படி இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இது தொடர்பாக பதில் அளிக்க ஓ. பன்னீர் செல்வம், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் "குற்ற வழக்கு விசாரணை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. சட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம். அதிகார வரம்பு இல்லாத தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு வழக்கை உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளன" என தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறிநிலைத்துறை அதிகாரிகள், கனிமொழி எம்.பி., பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு
    • பல்வேறு இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் 11 வழக்குகள் பதிவு

    பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஹெச். ராஜா. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அறநிலையத்துறையையும், அறநிலையத்துறையில் வேலைப்பார்க்கும் அதிகாரிகளின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், பெரியார் சிலையை உடைப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், கனிமொழி எம்.பி. குறித்து பேசியதாகவும் புகார் அளிக்கப்பட்டன. இதுதொடர்பாக அவர் மீது 11 வழக்குகள் உள்ளன.

    இந்த 11 வழக்குகளையும் ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அறநிலைத்துறை அதிகாரிகள் தொடர்பான புகாரில் வாய்வழி செய்தியை கேட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கனிமொழி வழக்கில் அரசியல் விமர்சனமாக பேசப்பட்டது. மேலும், இது தொடர்பான பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக புகார் அளிக்கவில்லை. எனவே வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஹெச். ராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முறையிட்டார்.

    அதற்கு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹெச்.ராஜாவின் விமர்சனம் தனிப்பட்ட மனிதர் குறித்த விமர்சனம் கிடையாது. அனைத்து மனிதர்களையும் சார்ந்த விமர்சனம். பெண்கள் குறித்து இழிவாக பேசியுள்ளார். நீதிமன்றம் தானாகவே முன்வந்து, விசாரணை நடத்த முடியும் என வாதங்களை முன்வைத்தார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஹெச்.ராஜா மீதான 11 வழக்குகளையும் ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து கீழமை நீதிமன்றம் 3 மாதத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ×