search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை: தானாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை: ஓ.பி.எஸ். பதில் அளிக்க உத்தரவு
    X

    சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை: தானாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை: ஓ.பி.எஸ். பதில் அளிக்க உத்தரவு

    • 2001 முதல் 2006 வரையில் ஆட்சியில் ஓ.பி.எஸ். வருவாய்த்துறை மந்திரியாக இருந்தார்
    • 1.76 கோடி ரூபாய் அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், ஜெயலிதாவின் 2001-2006 ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறை மந்திரியாக இருந்தார்.

    2006-ம் ஆண்டு ஆட்சி மாறியபோது, ஓ. பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 374 சதவீதம் அதிகமாக 1.76 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர் செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு முதலில் மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    2011-ல் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்தது, அப்போது, வழக்கை திரும்ப பெற்றுக் கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. 2012-ல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், போதிய ஆதாரங்கள் இல்லாத அடிப்படையில் வழக்கு திரும்பப்பெற முடிவு செய்து மனுதாக்கதல் செய்யப்பட்டது.

    இதனால் சிவகங்கை நீதிமன்றம் ஓ. பன்னீர் செல்வம் உள்பட்ட வழக்கில் இணைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

    இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றம் இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தும் என அறிவித்தது. அதன்படி இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இது தொடர்பாக பதில் அளிக்க ஓ. பன்னீர் செல்வம், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் "குற்ற வழக்கு விசாரணை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. சட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம். அதிகார வரம்பு இல்லாத தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு வழக்கை உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளன" என தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×