என் மலர்
நீங்கள் தேடியது "Thirukovilur Constituency"
- பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்களை சென்னை ஐகோர்ட்டு வெளியிட்டுள்ள நிலையில் அந்த உத்தரவு இணையதளத்திலும் பார்க்கும் வகையில் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
- அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டதும், தகுதி இழப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து விடும்.
சென்னை:
சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்றுள்ள பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் தானாக இழந்துள்ளார்.
பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியும் காலியாக விட்டது.
அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நடவடிக்கைகளை தமிழக சட்டசபை செயலகம் மேற்கொள்ள உள்ளது. பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்களை சென்னை ஐகோர்ட்டு வெளியிட்டுள்ள நிலையில் அந்த உத்தரவு இணையதளத்திலும் பார்க்கும் வகையில் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
அது மட்டுமின்றி அந்த உத்தரவின் நகல் சட்டசபை செயலகத்துக்கும் இன்னும் ஓரிரு நாளில் அனுப்பப்பட்டு விடும். அந்த விவரங்கள் கிடைத்ததும் சட்டசபை செயலகம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பொன்முடியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும். அந்த அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டதும், தகுதி இழப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து விடும்.
இது குறித்து சட்டசபை செயலக அதிகாரிகளிடம் கேட்டபோது, பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை கிடைத்துள்ளதால் தீர்ப்பு வழங்கிய ஒரு வாரத்துக்குள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த வகையில் சட்டசபை செயலகம் பணியை தொடங்கும்.
ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பொன்முடியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்வதற்கான நடவடிக்கையை ஒரு வாரத்திற்குள் விரைந்து செயல்படுத்தி விடுவோம். இதில் காலதாமதம் செய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.
எனவே அடுத்த வாரம் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு சட்டசபை செயலகம் கருத்துரு அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
- இதனால் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானது.
சென்னை:
சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்ற பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
இதனால் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியும் காலியாகி விட்டது. அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நடவடிக்கைகளை தமிழக சட்டசபை செயலகம் மேற்கொண்டது.
இதற்கிடையே, திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலகம் தெரிவித்துள்ளது.






