search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூலூர்"

    • சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார்.
    • தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    கோவை :

    கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கோபு (வயது 61). ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி.

    கடந்த மாதம் 17-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். அப்போது கோபு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், வலையல் உள்பட 2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அன்போணி (வயது 65). ஓய்வு பெற்ற ஹெல்த் சூப்பர்வைசர். கடந்த 3-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், கம்மல் உள்பட 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அன்போணி காரமடை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

    • கார்த்திகேயன் வேலை முடிந்து சம்பளம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார்.
    • ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து கார்த்திகேயனை தாக்கினர்.

    கோவை:

    கோவை சின்னியம்பாளையம் அடுத்துள்ள வெங்கிட்டா–புரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது30).

    இவர் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பேக்கிரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

    சம்பத்தன்று கார்த்திகேயன் வேலை முடிந்து சம்பளம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார். வெங்கிட்டாபுரம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கார்த்திகேயனை வழிமறித்து பணத்தை கேட்டு மிரட்டினர்.

    ஆனால், அவர் பணம் தரமறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கார்த்திகேயனை தாக்கினர். இதில் காயம் அடைந்த கார்த்திகேயன் சத்தம் போட்டார்.

    இதைகேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது 3 பேரில் ஒருவர் கார்த்திகேயனிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரையும் பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் டீ மாஸ்டரை தாக்கியது, ஒண்டிப்புதூர் சூர்யா நகரைச்சேர்ந்த மகேஷ்குமார், புலியகுளம் அம்மன்குளத்தை சேர்ந்த தினேஷ்குமார்(23), மற்றும் தப்பியோடிவர் நிசாத் என்பது தெரியவந்தது.

    இதில் மகேஷ்குமார் கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் கைதான மகேஷ்குமார் மற்றும் தினேஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பி ஓடிய நிசாத்தை போலீசார் தேடி வருகிறார்கள். வங்கி மேலாளரே வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சூலூரில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
    • வெறிநாய்க்கடி பட்ட நோயாளிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

    சூலூர்:

    சூலூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஒரே மருத்துவமனையாக சூலூர் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது.

    இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக வெறிநாய்க்கடி தடுப்பு மருந்து சப்ளை இல்லை என கூறி மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகளை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு உண்டான வெறிநாய்க்கடி பட்ட நோயாளிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

    தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதாக புலம்புகின்றனர். இது பற்றி அங்கு மருத்துவ மனையில் உள்ள செவிலியரி டம் கேட்டபோது மருத்துவ மனைக்கு வரும் வெறிநாய் கடி மருந்து கொள்முதல் செய்யப் படும் தலைமை நிலையத் திலேயே பற்றாக் குறையாக உள்ளது. ஆகவே கடந்த சில நாட் களாக சூலூர் மருத்துவ மனைக்கு வெறி நாய்க்கடி மருந்து அனுப்பப் படுவதில்லை என தெரிவிக் கின்றனர். 

    • வீட்டுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
    • முதியவர்களை குறி வைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

    சூலூர்,

    சூலூர் பள்ளபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த சரோஜினி (வயது 82) கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

    அவரது வாய், கை, கால்களை பார்சல் கட்டும் டேப்பால் ஒட்டி கொலை செய்த கும்பல் வீட்டில் இருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த கொலையில் ஈடுபட்டது குமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்த வசந்த் (வயது 19), அபினேஷ் (23) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. பெங்களூருவில் பதுங்கியிருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் அவர்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இன்று காலை கைதானவர்களை போலீசார் சரோஜினியின் வீட்டுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது கொலை செய்ததை அவர்கள் நடித்துக் காட்டினர். கைதான 3 பேரும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக முதியவர்களை குறி வைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. குமரி மாவட்டத்தில் இதேபோல பல முதியவர்களை அவர்கள் கட்டிப்போட்டு கொள்ளையடித்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு ஜாலியாக வாழ்ந்துள்ளனர். கைதான அபினேசின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து தற்போது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அபினேஷ் ஏற்கனவே செயின் பறிப்பு மற்றும் வாகனத்திற்கு வழக்கில் சம்பந்தப்பட்டு மூன்று மாதம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர். இந்த விவரங்கள் தெரிந்தும் கூட மருத்துவ மாணவி ஒருவர் இவரை தீவிரமாக காதலித்து உள்ளார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வசந்த் என்பவருடைய பெற்றோர் கூலி வேலைக்கு செல்கின்றனர். 17 வயது சிறுவனின் தாய் அங்கன்வாடி பணியாளராக உள்ளார். தந்தை ஓட்டுனராக பணிபுரிகிறார் என தெரிவித்தனர்.

    • சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக சென்றனர்.
    • பொதுமக்கள் சாலையில் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர்.

    சூலூர்,

    சூலூர் போலீஸ் நிலைய போலீசார் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சூலூர் போலீஸ் நிலையத்திலிருந்து கலங்கல் சாலை வரை நடத்தினர்.

    இந்த பேரணியை சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமார் தலைமை தாங்கினார். சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக சென்றனர். இதன்மூலம் பொதுமக்களிடையே போதை பொருள் குறித்தான விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்படும் என தெரிவித்தனர்.

    போலீசார் திடீரென ஊர்வலமாக வருவதை பார்த்த பொதுமக்கள் சாலையில் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர். 

    • கரும்புகையின் காரணமாக கண் எரிச்சல் மற்றும் மூச்சு அடைப்பு ஏற்பட்டது.
    • கழிவுத்துணிகளை கயிறு தயாரிப்பதற்காக குவித்துள்ளனர்.

    சூலூர்:

    சூலூர் முத்து கவுண்டன்புதூர் அருகே தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தினர் கழிவுத்துணிகளை கயிறு தயாரிப்பதற்காக குவித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் துணி குவியல்கள் பற்றி எரிந்தன. துணி பாலிஸ்டர் வகையைச் சேர்ந்தது என்பதால் அப்பகுதி இருந்து கருமையான புகை வெளியேறியது. வெளியேறிய புகை அருகில் உள்ள குரும்பபாளையம், செங்கோட கவுண்டன் புதூர், அரசூர் ஆகிய பகுதிகளில் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியினர் மூச்சு திணறல் எடுத்ததால் உடனடியாக சூலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். கரும்புகையின் காரணமாக வயதானவர்கள் மற்றும் சிறிய குழந்தைகளுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.  

    • மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற அவர்கள் 3 பேரும் சரோஜினி வீட்டில் கொள்ளையடித்தனர்.
    • பெங்களூரில் பதுங்கிய 3 பேரில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் சரோஜினி (வயது82). சம்பவத்தன்று இவர் வீட்டிற்குள் பிளாஸ்திரியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். .

    அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. அவரை யாரோ கொலை செய்து விட்டு நகையை திருடி சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மூதாட்டியை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொலையாளிகள் உருவம் பதிந்துள்ளதா என முதற்கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பல்வேறு கட்ட சோதனைக்கு பின் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் முக்கிய தடயம் சிக்கியது. மூதாட்டியின் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கொலையாளி தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    அப்போது சரோஜினி தனியாக இருப்பது அவருக்கு தெரியவந்தது. இதனால் சரோஜினியை கொன்று விட்டு அவரிடம் இருக்கும் நகைகளை கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது நண்பர்கள் 2 பேரின் உதவியை நாடியிருக்கிறார்.

    சம்பவத்தன்று 3 பேரும் மூதாட்டியின் வீட்டுக்கு சென்று உள்ளனர். ஏற்கனவே அந்த பகுதியில் கொலையாளி நடமாடியவர் என்பதால் யாருக்கும் அவர் மீது சந்தேகம் வரவில்லை.

    மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற அவர்கள் 3 பேரும் சரோஜினி வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அவர் சத்தம் போடவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் சரோஜினியின் வாய், கை, கால்களை பார்சல் ஒட்டும் டேப்பால் ஒட்டி உள்ளனர். பின்னர் அவரை கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.

    சூலூரில் இருந்து தப்பிச் சென்ற 3 பேரும் நேராக கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். சில நாட்கள் அங்கு இருந்து விட்டு பெங்களூர் சென்றுள்ளனர். இதையறிந்த தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்தனர். பெங்களூரில் 2 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார்.

    பிடிபட்ட 2 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    • புகையிலை பொருட்கள் விற்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    சூலூர்

    சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திர பிரசாத் மற்றும் கார்த்திக் குமார் உள்ளிட்டோர் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ரமேஷ்(38) என்பவரின் கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • செஞ்சேரி மற்றும் எஸ் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இருவர் போலீசை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்தனர்.

    சூலூர் 

    சூலூர் அருகே சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக சுல்தான் பேட்டை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சுல்தான்பேட்டை செஞ்சேரி மற்றும் எஸ் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த இருவர் போலீசை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்தனர். உடனடியாக சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தனிப்பிரிவு காவலர் வரதராஜன், தலைமை காவலர் ராமகிருஷ்ணன், காவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட தனிப் படையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் எஸ் குமாரபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் (44) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி(63) என தெரிய வந்தது. அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1.100கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த சுல்தான்பேட்டை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 23 வயது இளம்பெண் ஒருவர் அந்த வழியாக நடந்து சென்றார்.
    • வாலிபரை பொதுமக்கள் பிடித்து சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே காடம்பாடி அருகே நேருநகர் பகுதியில் வாலிபர் ஒருவர் தனியா நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வாகனத்தில் வரும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதுகுறித்து விசாரிக்க அப்பகுதி இளைஞர்களுடன் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த வாலிபர் வரும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த வாலிபரை பிடிக்க பொது மக்கள் முயற்சி செய்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த அந்த வாலிபர் அந்த இளம்பெண்ணை வழிமறித்தார்.

    அந்த வாலிபர் திடீரென அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயற்சி செய்ததார். அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம்போட்டார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அந்த இளம்பெண் பொதுமக்களிடம் கூறினார்.மக்கள் அந்த வாலிபரை பிடிக்க விரைந்தனர். அப்போது சோமனூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக ெமாபட்டில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்தான் தனியே வரும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்த சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் விழுப்புரத்தை சேர்ந்த தாமோதரன் (27) என்பதும், இவர் சோமனுர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகி இருந்ததும், புதுமாப்பிள்ளையான இவர் குடிபோதையில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து 23 வயது இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வசந்த், கருப்புசாமியை அரிவாளால் வெட்டி விட்டு சூலூர் அப்பநாயக்கன்பட்டிக்கு வந்து விட்டார்.
    • தம்பதியை கார் ஏற்றி கொல்ல முயன்றவர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரித்து அந்த கும்பலை தேடி வந்தனர்.

    சூலூர்:

    தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் வசந்த்(41). இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.வசந்த் தனது குடும்பத்தினருடன் சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன், காஸ் சிலிண்டர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கலங்கல் பகுதிக்கு சென்றார்.

    அப்போது அவரை கார் ஒன்று வேகமாக பின்தொடர்ந்து வந்தது. கலங்கல் குட்டை அருகே வந்தபோது கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.மோதிய வேகத்தில் வசந்த் மற்றும் அவரது மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். பின்னர் 2 பேரும் எழுந்திருக்க முயன்றனர்.

    அப்போது காரில் இருந்து 3 பேர் கும்பல் திபு,திபுவென அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கீழே இறங்கி, வசந்தை அரிவாளால் வெட்டினர். வலி தாங்க முடியாத அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று வெட்டினர்.இதை பார்த்த வசந்த்தின் மனைவி காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டார். இவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மக்கள் திரண்டு வருவதை பார்த்ததும் அந்த கும்பல் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தத சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த வசந்த்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தம்பதியை கார் ஏற்றி கொல்ல முயன்றவர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரித்து அந்த கும்பலை தேடி வந்தனர். மேலும் சி.சி.டி.வி காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது, அந்த கும்பல் செல்லும் கார் திருப்பூர் அமராவதி செக்போஸ்ட் வழியாக சென்ற தகவல் தெரியவரவே போலீசார் திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் குறிப்பிட்ட காரை மறித்து, அதில் இருந்த 3 பேரையும் பிடித்து சூலூர் போலீசாரிடம் ஒப்ப டைத்தனர்.

    போலீசார் அவர்களை கோவை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வசந்த்தை காரை ஏற்றியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றது தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கருப்புசாமி உத்தமபாளையம் பகுதியில் சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். மேலும் அவருக்கு தேனியில் ெசாந்தமாக 21 சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தை அவரது உறவினர் முருகன் என்பவர் குத்தகைக்கு கேட்டார்.

    அவரும், முருகனுக்கு குத்தகைக்கு விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று கருப்புசாமி அந்த நிலத்தை பார்க்க சென்ற போது வசந்த் என்பவர் அங்கு கோழிப்பண்ணை அமைத்து இருந்தார்.

    இதுகுறித்து கருப்புசாமி வசந்த்திடம் சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் விசாரித்து வசந்த்தை அந்த இடத்தை காலி செய்ய வைத்து கருப்புசாமியிடம் ஒப்படைத்தனர். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வசந்த், கருப்புசாமியை அரிவாளால் வெட்டி விட்டு சூலூர் அப்பநா யக்கன்பட்டிக்கு வந்து விட்டார்.

    தன்னை வெட்டியவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே கருப்புசாமி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வசந்த்தை காரை ஏற்றியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கருப்புசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் கைது செய்தனர்.

    • வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் நண்பர்களுக்கு மதுபாட்டில்கள், இறைச்சி வாங்குவதற்காக சென்றுள்ளனர்.
    • மதுபாட்டில்களை விற்பனைக்கு எடுத்து செல்வதாக நினைத்த போலீசார் உடனடியாக அவரை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    கோவை :

    கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.

    இவர்கள் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது பாட்டில்கள் வாங்கிச் சென்று மது அருந்துவது வழக்கம்.

    இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் நண்பர்களுக்கு மதுபாட்டில்கள், இறைச்சி வாங்குவதற்காக சென்றுள்ளனர். இருவர் இறைச்சிக் கடைக்கு சென்று விட்ட நிலையில், மற்றொரு நபர் பாப்பம்பட்டியில் உள்ள டாஸ்மாக் சென்றார். அங்கு அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி பெட்டியில் வைத்து எடுத்து கொண்டு வந்தார்.

    அப்போது பாப்பம்பட்டி நால்ரோட்டில் ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகமடைந்து வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் பேசிய மொழி புரியாததால், மதுபாட்டில்களை விற்பனைக்கு எடுத்து செல்வதாக நினைத்த போலீசார் உடனடியாக அவரை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    இதற்கிடையே மது வாங்க சென்ற நண்பர் வெகு நேரமாக வராததால் அவருடன் வந்த மற்ற நண்பர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வாங்கிய இறைச்சியுடன் நேராக போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றனர்.

    அப்போது அவர்கள் தேடி வந்த நண்பர் போலீசின் கட்டுப்பாட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருவரும் தங்களுக்கு தெரிந்த தமிழில் போலீசாரிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அனுப்பினர்.

    மொழி புரியாததால் வடமாநில தொழிலாளி விற்பனைக்காக பெட்டியில் மதுபாட்டில்களை வாங்கி சென்றதாக எண்ணி தவறுதலாக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ருசிகர சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×