search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people were caught in the murder of an old woman"

    • மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற அவர்கள் 3 பேரும் சரோஜினி வீட்டில் கொள்ளையடித்தனர்.
    • பெங்களூரில் பதுங்கிய 3 பேரில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் சரோஜினி (வயது82). சம்பவத்தன்று இவர் வீட்டிற்குள் பிளாஸ்திரியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். .

    அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. அவரை யாரோ கொலை செய்து விட்டு நகையை திருடி சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மூதாட்டியை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொலையாளிகள் உருவம் பதிந்துள்ளதா என முதற்கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பல்வேறு கட்ட சோதனைக்கு பின் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் முக்கிய தடயம் சிக்கியது. மூதாட்டியின் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கொலையாளி தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    அப்போது சரோஜினி தனியாக இருப்பது அவருக்கு தெரியவந்தது. இதனால் சரோஜினியை கொன்று விட்டு அவரிடம் இருக்கும் நகைகளை கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது நண்பர்கள் 2 பேரின் உதவியை நாடியிருக்கிறார்.

    சம்பவத்தன்று 3 பேரும் மூதாட்டியின் வீட்டுக்கு சென்று உள்ளனர். ஏற்கனவே அந்த பகுதியில் கொலையாளி நடமாடியவர் என்பதால் யாருக்கும் அவர் மீது சந்தேகம் வரவில்லை.

    மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற அவர்கள் 3 பேரும் சரோஜினி வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அவர் சத்தம் போடவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் சரோஜினியின் வாய், கை, கால்களை பார்சல் ஒட்டும் டேப்பால் ஒட்டி உள்ளனர். பின்னர் அவரை கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.

    சூலூரில் இருந்து தப்பிச் சென்ற 3 பேரும் நேராக கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். சில நாட்கள் அங்கு இருந்து விட்டு பெங்களூர் சென்றுள்ளனர். இதையறிந்த தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்தனர். பெங்களூரில் 2 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார்.

    பிடிபட்ட 2 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    ×