search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே  தம்பதியை அரிவாளால் வெட்டி கார் ஏற்றி கொல்ல முயன்ற 3 பேர் கைது
    X

    சூலூர் அருகே தம்பதியை அரிவாளால் வெட்டி கார் ஏற்றி கொல்ல முயன்ற 3 பேர் கைது

    • கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வசந்த், கருப்புசாமியை அரிவாளால் வெட்டி விட்டு சூலூர் அப்பநாயக்கன்பட்டிக்கு வந்து விட்டார்.
    • தம்பதியை கார் ஏற்றி கொல்ல முயன்றவர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரித்து அந்த கும்பலை தேடி வந்தனர்.

    சூலூர்:

    தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் வசந்த்(41). இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.வசந்த் தனது குடும்பத்தினருடன் சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன், காஸ் சிலிண்டர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கலங்கல் பகுதிக்கு சென்றார்.

    அப்போது அவரை கார் ஒன்று வேகமாக பின்தொடர்ந்து வந்தது. கலங்கல் குட்டை அருகே வந்தபோது கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.மோதிய வேகத்தில் வசந்த் மற்றும் அவரது மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். பின்னர் 2 பேரும் எழுந்திருக்க முயன்றனர்.

    அப்போது காரில் இருந்து 3 பேர் கும்பல் திபு,திபுவென அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கீழே இறங்கி, வசந்தை அரிவாளால் வெட்டினர். வலி தாங்க முடியாத அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று வெட்டினர்.இதை பார்த்த வசந்த்தின் மனைவி காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டார். இவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மக்கள் திரண்டு வருவதை பார்த்ததும் அந்த கும்பல் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தத சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த வசந்த்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தம்பதியை கார் ஏற்றி கொல்ல முயன்றவர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரித்து அந்த கும்பலை தேடி வந்தனர். மேலும் சி.சி.டி.வி காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது, அந்த கும்பல் செல்லும் கார் திருப்பூர் அமராவதி செக்போஸ்ட் வழியாக சென்ற தகவல் தெரியவரவே போலீசார் திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் குறிப்பிட்ட காரை மறித்து, அதில் இருந்த 3 பேரையும் பிடித்து சூலூர் போலீசாரிடம் ஒப்ப டைத்தனர்.

    போலீசார் அவர்களை கோவை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வசந்த்தை காரை ஏற்றியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றது தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கருப்புசாமி உத்தமபாளையம் பகுதியில் சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். மேலும் அவருக்கு தேனியில் ெசாந்தமாக 21 சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தை அவரது உறவினர் முருகன் என்பவர் குத்தகைக்கு கேட்டார்.

    அவரும், முருகனுக்கு குத்தகைக்கு விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று கருப்புசாமி அந்த நிலத்தை பார்க்க சென்ற போது வசந்த் என்பவர் அங்கு கோழிப்பண்ணை அமைத்து இருந்தார்.

    இதுகுறித்து கருப்புசாமி வசந்த்திடம் சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் விசாரித்து வசந்த்தை அந்த இடத்தை காலி செய்ய வைத்து கருப்புசாமியிடம் ஒப்படைத்தனர். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வசந்த், கருப்புசாமியை அரிவாளால் வெட்டி விட்டு சூலூர் அப்பநா யக்கன்பட்டிக்கு வந்து விட்டார்.

    தன்னை வெட்டியவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே கருப்புசாமி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வசந்த்தை காரை ஏற்றியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கருப்புசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×