search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாவு"

    • திருச்சி தா.பேட்டை அருகே வாலிபர் மர்மான முறையில் உயிரிழந்தார்
    • போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயற்சி

    தா.பேட்டை, 

    திருச்சி தா.பேட்டை அடுத்த வாளசிராமணி ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இவருக்கு திருமணம் ஆகி கீதா என்ற மனைவியும், ஹாசினி (11), ஹரிணி (10) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கணேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    மேலும் இவருக்கு மனநிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கீதா தனது இளைய மகளுடன் புத்தனாம்பட்டியில் வசித்து வருகிறார். மேலும் அப்பகுதியில் சத்துணவு உதவியாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.

    மற்றொரு மகள் ஹாசினி தந்தை வீட்டில் தாத்தா, பாட்டியுடன் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணேசன் அதிக மது போதையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டு வாசலில் தடுக்கி கதவில் மோதியதில் முகம், தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இந்தார்.

    இதையடுத்து அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதுகுறித்து போலீஸ் அவசர உதவி 100 என்ற எண்ணிற்கு தகவல் சென்றுள்ளது. பின்னர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    அதனைதொடர்ந்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து கணேசன் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் அடுத்த அணுகம்பட்டை சேர்ந்தவர் சிவா (வயது 48). பால் வியாபாரி. இவர் பால் வியாபாரம் செய்துவிட்டு கடலூர் பச்சையாங்குப்பம் ெரயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீரங்கத்தில் விஷம் குடித்து தாய்,மகன் சாவு
    • தந்தை உயிருக்கு போராட்டம்

    திருச்சி  

    திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசலை சேர்ந்தவர் மோகன் (வயது 70). இவருக்கு சிவகாமி (60) என்ற மனைவியும் செந்தில், தினேஷ் (வயது36) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    மூத்த மகன் செந்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் தினேஷ் மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இருந்த போதிலும் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட இயலவில்லை. இதையடுத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த மோகன் தனது மனைவி, மகன் ஆகியோர் நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷமருந்தி மயங்கி கிடந்தனர்.

    நேற்று அதிகாலை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் இது பற்றி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய மூவரையும் மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மகன்தினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாய் சிவகாமி பரிதாபமாக இறந்தார்.ஆபத்தான நிலையில் மோகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஸ்ரீரங்கத்தில் தாய்,மகன் விஷம் குடித்து இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துள்ளது.

    • துறையூர் அருகே கோழிப்பண்ணையில் வேலை செய்த வட மாநில வாலிபர் மர்ம சாவு
    • வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் தியாகி சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் மதன் (45). இவர் விசாலாட்சி அம்மாள் சமுத்திரம் கிராமத்தில் சொந்தமாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் ஒரிசா மாநிலத்தை ஹேமராஜ் தருவா (43) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்து தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் பணியாளர்கள், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் அங்கு சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஹேமராஜ் தருவாவை பரிசோதித்துவிட்டு ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதை அறிந்த துறையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று, பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் ஹேமராஜ் தருவா வலிப்பு நோயின் காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துறையூர் அருகே கோழி பண்ணையில் பணிபுரிந்த வட மாநில இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கரூர் பசுபதிபாளையம்கிணற்றில் குதித்த வாலிபர் சாவு
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

     கரூர்,  

    கரூர் பசுபதிபாளையம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சூர்யா(வயது 24). தனியார் நிறுவன ஊழியர்.

    இவரது மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் மதுபோதையில் இருந்த சூர்யா அப்பகுதியில் இருந்த ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது மேலேயிருந்து கிணற்றுக்குள் குதித்துள்ளார். மது போதையில் இருந்ததால் அவரால் நீந்த முடியாமல் மூச்சு திணறி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆயுள் தண்டனை பெற்ற போக்சோ கைதி திடீரென இறந்தார்.
    • கைதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி யை சேர்ந்தவர் மருதுவீரன் என்ற மதுரை வீரன் (வயது 50). இவர் கடந்த 2012-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் மருதுவீரன் அடைக்கப்பட்டி ருந்தார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. அவ ருக்கு சிறை மருத்துவ மனையில் உடனே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருது வீரனை சிறைத்துறை போலீ சார் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மருதுவீரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிறை அதி காரி முனிஸ்திவாகர் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணராயபுரம் அருகே இளம்பெண் திடீர் சாவு
    • லாலா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    கரூர்,  

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,வீரியபாளையம் ஊராட்சி, வெள்ளைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 38).கூலித்தொழிலாளி, இவரது மகள் திவ்யா பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் திவ்யாவுக்கு நேற்று அதிகாலை 2.15 மணி அளவில் வீட்டில் வலிப்பு நோயால் துடித்துள்ளார். உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் திவ்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து லாலா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • பிரீத்தி சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
    • திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடிப்படியில் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோடு பாலசுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பிரீத்தி (27).

    இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பா ளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 1/2 வருடங்களாக நர்சாக பணியாற்றி வந்தார். இவர் சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பால்காரர் அழைத்தபோது பால் வாங்குவதற்காக பிரீத்தி மாடியில் இருந்து இறங்கி வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடிப்படியில் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரீத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிரீத்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் பிரீத்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகு றித்து பிரீத்தியின் சகோதரர் ராதா (51) நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யானைகள் தடுப்பு அகழி பகுதியில் பிணமாக மீட்பு
    • காட்டெருமையின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் வனச்சரகம் ஓடந்துறை காப்புக்காடு ஜக்கனரி டெப்போ பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. உடனடியாக வனத்துறையினர் துர்நாற்றம் வந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள யானை தடுப்பு அகழி பகுதியில் ஆண் காட்டெருமை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். தொடர்ந்து கோவை வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், உதவி கால்நடை மருத்துவர் பிரபு ஆகியோர் காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முடிவில் சிறுத்தை தாக்கியதில் காட்டெருமை இறந்தது தெரியவந்தது.

    • புகளூர் அருகேவாய்க்காலுக்குள் தவறி விழுந்த தொழிலாளி சாவு
    • இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

     வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலம் கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம்( வயது 41). இவர் புகளூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரண்யா (26) .இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

    இந்நிலையில் பிரகாசம் நேற்று முன் தினம் இரவு சுமார் 8 மணி அளவில் முத்தனூர் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் புகளூர் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் நிலை தடுமாறி புகளூர் வாய்க்கால் தண்ணீருக்குள் விழுந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் பிரகாசம் புகளூர் வாய்க்காலுக்குள் விழுந்ததை பார்த்துள்ளார். உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்த வாய்க்காலுக்குள் இறங்கி தேடினார்கள். அப்போது முனி நாதபுரம் முனியப்ப சாமி கோவில் அருகே கட்டிடத்தில் இடுக்கில் சிக்கிக் கொண்டிருந்தார். இரவு சுமார் ஒரு மணியளவில் பிரகாசத்தின் உடலை மீட்டு வேலாயுதம் பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
    • தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பொன் நாடார். இவரது மனைவி ஆர்தர் செல்வி (வயது 72). இவர் குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தக்கலை அருகே குன்னத்துகோணம் பகுதியில் இருக்கும் மகள் டெய்சி வீட்டில் வசித்து வருகிறார். ஆர்தர் செல்வி தினமும் அருகில் உள்ள குன்னத்துகுளத்தில் குளிப்பது வழக்கம்.

    வழக்கம்போல நேற்று அதிகாலை 5 மணிக்கு குளத்தில் குழிப்பதற்கு சென்றவர் நிலை தடுமாறி குளத்தில் விழுந்தார். மழை நேரம் என்பதால் குளத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரத்து அதிகமானதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் இவரை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ஏற்கனவே ஆர்தர் செல்வி இறந்துவிட்டதாக கூறினார்.

    இதுசம்பந்தமாக உறவினர் டெய்சி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செக்யூரிட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு,

    ஈரோடு அடுத்த கங்காபுரம் மேற்கு தயிர்பாளையம் கானாகாடு காலனியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 37). இவர் நசியனூரில் உள்ள மஞ்சள் குடோன் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். துரைசாமி சம்பவத்தன்று மதியம் திடீரென மயங்கி விழுந்தார். இதை ப்பார்த்த அக்கம்பக்க த்தினர் அவரை மீட்டு பெரு ந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மரு த்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்து வர்கள் பரிசோதித்து விட்டு துரைசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து துரைசாமியின் மனைவி சசிகலா சித்தோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ×