search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரசூட்"

    • பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.
    • அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் சமையல்காரராக பணியாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்புக்கான உதவித்தொகை கிடைத்ததற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மற்றும் கலிபோர்னியா ஆகிய 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.

    பிரக்யாவின் குடும்பத்தை அழைத்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கௌரவித்தார்.  பிறகு அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தங்களை அவருக்கு பரிசாக வழங்கினார்.

    பின்னர் பிரக்யாவிடம் அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    • நாங்கள் நீதிமன்றங்களை கோயில்களாக கருதுகிறோம். நீதி வழங்குவது கடவுளின் வேலை,
    • உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எனக்கு கிருஷ்ணர் உருவில் தெரிந்தார் என்று கூறியுள்ளார்.

    சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று (பிப் 20) தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக, இன்று டெல்லி சட்டமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்ட உரையின் போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "நாங்கள் நீதிமன்றங்களை கோயில்களாக கருதுகிறோம். நீதி வழங்குவது கடவுளின் வேலை, அதனால் தான் நீதிபதிகள் தீர்ப்புகளை அறிவிக்கும் போது அதனை கடவுளின் தீர்ப்பாக நாங்கள் பார்க்கிறோம். நேற்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எனக்கு கிருஷ்ணர் உருவில் தெரிந்தார் என்று கூறியுள்ளார்.

    பாஜகவின் பித்தலாட்டத்தை உச்சநீதிமன்றத்தில் கடவுளே வந்து அம்பலப்படுத்தினார். பாஜக தேர்தலில் நியாயமாக வெற்றி பெறாமல், குறுக்கு வழியில் வெற்றி தேடியதை வீடியோ ஆதாரம் மூலமாக இந்திய நாடே பார்த்தது என்று பேசியுள்ளார்.

    • தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
    • அவசர வழக்குகளை விசாரிக்க வழக்கம்போல முறையீடு செய்யலாம்.

    புதுடெல்லி :

    சுப்ரீம் கோர்ட்டில் ரிட், மேல்முறையீடு, இடையீட்டு மற்றும் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது ஆன்லைன் மூலம் முதலில் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். அவர் இதனை பரிசீலனை செய்து தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்.

    இதனை அவர் ஆய்வு செய்து, வழக்குகளை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பதிவாளருக்கு உத்தரவிடுவார். இந்த நடைமுறை காலதாமதமாகும்போது மனுதாரர் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி தங்களது மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை விடுக்கலாம்.

    இதற்கிடையே புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்கு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.

    இதேபோல் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு தானாக பட்டியலிடும் வகையிலும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இந்த நடைமுறையை செயல்படுத்துமாறு பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டு உள்ளேன். அவசர வழக்குகளை விசாரிக்க வழக்கம்போல முறையீடு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    திருமண பந்தத்தை தாண்டிய உறவில் ஆண்களை குற்றவாளியாக்கும் சட்ட பிரிவை இன்று நீக்கி தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்த நீதிபதி சந்திரசூட் அவரது தந்தையின் தீர்ப்பை மாற்றியுள்ளார். #AdulteryVerdict #Section497 #JusticeChandrachud
    புதுடெல்லி:

    திருமண பந்தத்தை தாண்டிய உறவில் ஆண்களை மட்டும் குற்றவாளியாக்கும் சட்டபிரிவு 497-ஐ நீக்கி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை வழங்கிய அமர்வில் இருந்த நீதிபதி சந்திரசூட், தனது தந்தையின் தீர்ப்புக்கு மாறாக தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    கடந்த 1985-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருந்த அவரது தந்தை ஓய்.வி.சந்திரசூட், தகாத உறவு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தார். அப்போது, கணவருக்கு தெரியாமல் அவரது மனைவியுடன், தகாத உறவில் ஈடுபடும் நபருக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை உறுதி செய்தார். மேலும், தகாத உறவில் ஈடுபடுவதை குற்றமாக கருதினால் தான், திருமண உறவு பலப்படும் என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தார்.

    அதேபோல, தனி மனித உரிமை குறித்த வழக்கிலும் நீதிபதி சந்திரசூட், தனது தந்தையின் தீர்ப்புக்கு மாறாக தீர்ப்பு வழங்கியிருந்தார். நெருக்கடி நிலை காலத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஓய்.வி.சந்திரசூட் இடம்பெற்ற அமர்வு, தனி மனித உரிமை அடிப்படை உரிமை அல்ல என தீர்ப்பு வழங்கியது.

    ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆதார் வழக்குடன் தொடர்புடைய வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய டி.ஒய்.சந்திரசூட், தனிப்பட்ட நபரின் வாழ்க்கை மற்றும் தனிநபர்களின் உரிமைகள் மாற்ற முடியாதது. எந்த அரசும் தனிநபர்களின் சுதந்திரத்தில் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
    ×