search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல்காரர்"

    • பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.
    • அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் சமையல்காரராக பணியாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்புக்கான உதவித்தொகை கிடைத்ததற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மற்றும் கலிபோர்னியா ஆகிய 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.

    பிரக்யாவின் குடும்பத்தை அழைத்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கௌரவித்தார்.  பிறகு அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தங்களை அவருக்கு பரிசாக வழங்கினார்.

    பின்னர் பிரக்யாவிடம் அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    • பாஸ்கர் மாடி யில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அல்லாசாமி கோவில் தெரு வைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 50). சமையல்காரர். இவர் நேற்று இரவு வீட்டின் மாடியில் நடந்து கொண்டி ருந்தார். திடீரென நிலை தடுமாறிய பாஸ்கர் மாடி யில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பாஸ்கரை மீட்ட அவரது குடும்பத்தார், 108 ஆம்பு லன்ஸ் மூலம் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பாஸ்கரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீர் சறுக்கு விளையாட்டின்போது திடீரென அலையில் அடித்து செல்லப்பட்டார்
    • வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் பிடித்தமான சமையல்காரராக இருந்தவர்

    8 வருடம் அமெரிக்க அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. அவரின் பதவிக்காலம் முடிவடைந்ததும், ஒபாமா அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிரபலமான மார்தா'ஸ் வைன்யார்ட் (Martha's Vineyard) எனும் தீவில் ஒரு மாளிகையை வாங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

    ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்தபோது, அவரின் தலைமை சமையல்காரராக இருந்தவர் டஃபாரி கேம்ப்பெல் (Tafari Campbell). ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததும், அவரின் இல்லத்து பிரத்யேக சமையற்கார குழுவுடன் டஃபாரியும் இணைந்து கொண்டார்.

    டஃபாரி நீரில் துடுப்பு பலகையில் நின்று சறுக்கி விளையாடும் நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபாடுடையவர்.

    நேற்று முன்தினம் ஒபாமா இல்லத்தருகில் உள்ள எட்கார்டவுன் கிரேட் பாண்ட் எனும் நீர்நிலையில், நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். திடீரென அவர் காணாமல் போனதாக அங்கு நீர் சறுக்கில் ஈடுபட்டு வந்த மற்றொரு நபர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

    அவசர குழுவினரின் நேரடி தேடுதலில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகள் மூலம் கண்டறியும் சோனார் கருவி மூலம் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இறுதியில், கரையிலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

    விபத்தின்போது ஒபாமாவும் அவரது மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான மிச்செல் ஒபாமாவும் வீட்டில் இல்லை. ஒபாமா ஜனாதிபதியாக இருந்த 8 வருட காலம் காம்ப்பெல், வெள்ளை மாளிகையில் புகழ்பெற்ற சமையல்காரராக திகழ்ந்தார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் பயிரிடப்பட்ட பொருட்களை கொண்டு ஒரு வித்தியாசமான பீர் உட்பட பல உணவு வகைகளை பிரபலப்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்துயர சம்பவம் குறித்து ஒபாமாவும் அவர் மனைவியும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் அவரை முதல்முறை சந்திக்கும் போதே மிகவும் திறமை வாய்ந்த சமையல் கலைஞராக திகழ்ந்தார். மக்களை ஒன்றிணைக்கும் ருசியான உணவுகளின் குணங்கள் மீது அவர் ஆழ்ந்த ஈடுபாடுடையவராக இருந்தார். எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே டஃபாரி இருந்தார். அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு எங்கள் இதயங்கள் உடைந்தன.

    இன்று ஒரு உண்மையான, அற்புதமான மனிதரான டஃபாரியை நன்கு அறிந்த மற்றும் நேசிக்கும் அனைவருடனும், குறிப்பாக அவரது மனைவி ஷெரிஸ் மற்றும் அவர்களது இரட்டை மகன்களான சேவியர் மற்றும் சவின், ஆகியோருடன் அவரை இழந்த துக்கத்தில் பங்கு கொள்கிறோம்.

    இவ்வாறு ஒபாமாக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒபாமா குடும்பம், 2021-ம் ஆண்டில் பாஸ்டன் செல்டிக்ஸ் கூடைப்பந்து அணியின் உரிமையாளர் விக்லிஃப் க்ரூஸ்பெக்கிடம் இருந்து மார்தா'ஸ் வைன்யார்டு தீவில், கிட்டத்தட்ட 7,000 சதுர அடி கொண்ட இந்த மாளிகையை வாங்கியது. இந்த வீடு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து ஒரு குறுகிய தடுப்பு கடற்பகுதியால் பிரிக்கப்பட்ட கடற்கரை குளத்தை ஒட்டி உள்ளது.

    • சேலம் மத்திய ஜெயிலில் இன்று அதிகாலை கஞ்சா கடத்திய சமையல்காரர் பிடிபட்டார்
    • கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மகன் தனபால் (வயது 39). இவர், சேலம் மத்திய ஜெயிலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜெயில் வளாகத்தில் சமைத்துக் கொண்டிருந்தபோது தனபால், சமையல் வேலைக்கு ஒரு கட்டையும் நூலும் தேவைப்படுவதாக கூறி ஜெயிலை விட்டு வெளியே வந்தார்.

    இதையடுத்து அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு தனபால் மீண்டும் சிறைக்குள் வரும்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து சேலம் மத்திய சிறை அலுவலர் மதிவாணன், கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமையல்காரர் தனபாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்று காலை குளிக்க சென்ற பாபுநாத் சுரேன் கால் வழிக்கி கீழே விழுந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கடலூர்:

    கொல்கத்தா மாநிலம் புருளியாவை சேர்ந்தவர் பாபுநாத் சுரேன் (வயது 26). இவர் ரெட்டிச்சாவடியை அடுத்த பெரிய காட்டுபாளையம் தனியார் கம்பெனியில் சமையல் காரராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை குளிக்க சென்ற பாபுநாத் சுரேன் கால் வழிக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் பாபுநாத் சுரேனை மீட்டு பெரிய காட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்‌. பின்னர் மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது பாபுநாத் சுரேனை சோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×