search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டாரம்"

    • இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது
    • காயம் அடைந்த நபர் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 50). இவர் கன்னியா குமரிகடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு போட்டோ எடுத்து உடனடியாக பிரிண்டு தயார் செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்ற சுரேஷ் (54). இவர் கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. துணை செய லாளராகவும் கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இவரும் கன்னியா குமரியில் சுற்றுலா பயணிகளுக்கு போட்டோ எடுத்து உடனடியாக பிரிண்டு தயார் செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கொட்டாரத்தில் சம்ப வத்தன்று இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம்அடைந்த சுப்பிர மணியன் மரக்கட்டை யால் மணிகண்ட னைசரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் மணிகண்டனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    காயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணிகண்டனின் மனைவி மாலா கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சுப்பிரமணியனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • போலீசார் அதிரடி நடவடிக்கை
    • விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் பெரியவிளை ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று உள்ளது. இந்த மதுக்கடை அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியில் மதுப்பாட்டில்களை முதியவர் ஒருவர் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த முதியவரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொட்டாரம் கிட்டங்கி பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 62) என்பதும் அவர் கூலி தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தொழிலாளி செல்வத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போலீசில் புகார்
    • போலீஸ் தடய அறிவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பக்கம் உள்ள மகாராஜபுரம் கீழஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார். இதை பயன்படுத்தி அவரது வீட்டை யாரோ சிலர் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்து பணம் மற்றும் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ள னர்.

    இது குறித்து அவர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு வர வழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகை களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராட்சதமலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக காட்டு பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர்.
    • கொட்டாரத்தில் நாஞ்சில் நாடு புத்தனாறு என்ற ஆறு ஓடுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தில் நாஞ்சில் நாடு புத்தனாறு என்ற ஆறு ஓடுகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து இந்த ஆறு வழியாக கடைவரம்பு பகுதிகளுக்கு விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் இந்த ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. இதற்கிடையில் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் எதிரே செல்லும் இந்த ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சிலர் மீன்வலைகளை தண்ணீரில் போட்டு வைத்துள்ளனர்.

    இந்த வலையில் நேற்று ராட்சதமலைப்பாம்பு ஒன்று சிக்கி கொண்டது. இதை அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி ஓட்டம் பிடித்தனர். இது பற்றி கொட்டாரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் செல்வன் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் மருந்துவாழ் மலை வேட்டை தடுப்பு காவலர் பிரவீன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய ராட்சதமலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்தப் பாம்பு சுமார் 5 அடி நீளம் கொண்டதாக இருந்தது. அந்த ராட்சதமலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக காட்டு பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர்.

    • போலீஸ் டி.எஸ்.பி.ராஜா அறிவுரை வழங்கினார்
    • இருசக்கர வாகன ஓட்டிகள் 50 பேருக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.50ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் கொட்டாரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

    இதையொட்டி கொட்டாரம் சந்திப்பில் போக்குவரத்து போலீசார்அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த100-க்கும்மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்த னர்.

    இதில் கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா கலந்து கொண்டு ஹெல்மெட் அணிவது குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கன்னியாகுமரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாய்சன், முருகன், கன்னியாகுமரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போக்குவரத்து போலீஸ் ஏட்டு மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் கொட்டாரம் சந்திப்பு வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் சாலை விபத்தினை தடுக்ககூடிய சிறந்த அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை போக்குவரத்து போலீசார் வழங்கினார்கள்.

    இது தவிர கடந்த 2 நாட்களில் கன்னியாகுமரி பகுதிகளில் போக்குவரத்து போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் 50 பேருக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.50ஆயிரம்அபராதமும் விதிக்கப்பட்டது.

    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள அச்சன்குளத்தில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று பிரார்த்தனை முடிந்து இரவு ஆலயத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் இந்த ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் ஆலய நிர்வாகிகள் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அச்சன்குளம் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆலயத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    மேலும் அந்த ஆலயத் துக்குள் இருந்த ஆம்ப்ளிபயர், ஒலிபெருக்கி பெட்டி, மைக், போன்ற பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அந்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு
    • பேரூராட்சி செயல் அலுவலர் மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்

    கன்னியாகுமரி:

    வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பொது இடத்தில் விடாமல் வீட்டுக்குள்ளேயே உறிஞ்சிக் குழாய் அமைத்து விட வேண்டும் என்று பொதுமக்களை அரசு அறிவுறுத்தி உள்ளது.இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். இருப்பினும் அதை பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றி வருகிறது.

    இந்த நிலையில் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சில வார்டு பகுதிகளில் உள்ள ஒரு சில வீடுகளில் கழிவு நீர் வெளியேறும் குழாய் பேரூராட்சி சார்பில் அடைக்கப்பட்டது.

    இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான தலைவர் சிவசுப்பிரமணியம், கொட்டாரம் கீழத்தெரு ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஐயப்பன் மற்றும் கொட்டாரம் வடக்கு தெரு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஏ. பிச்சமுத்து ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ நம்பி கிருஷ்ணன், கொட்டாரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர்செல்வன் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது இந்த 3 தெரு நிர்வாகம் சார்பில் கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேறும் குழாயை நிரந்தரமாக அடைப்பதற்கு பதிலாக பாதாள சாக்கடை திட்டம் அல்லது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மாற்று ஏற்பாடு செய்யும்படி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி அதற்கான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள் அங்குஇருந்து கலைந்து சென்றனர்.

    • வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் வீடியோ கால் மூலம் பேசியதில் ஏற்பட்ட தகராறில் பரிதாப முடிவு
    • கன்னியாகுமரி போலீசுக்கு தகவல்

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஞானபாக்கியபாய் (வயது 33) இவர் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் உள்ள தனது கணவர் செந்திலுடன் நேற்று வாட்ஸ்-அப் வீடியோகால் மூலம் பேசினார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த ஞானபாக்கியபாய் தனது 2 குழந்தைகளையும் தூங்க வைத்து விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் சிங்கப்பூரில் இருந்துஅவரது கணவர் செந்தில் அருகில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

    உடனே அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் செந்திலின் வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது ஞான பாக்கியபாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

    உடனே இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • கன்னியாகுமரி போலீசில் புகார்
    • கன்னியாகுமரி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர்கிருஷ்ணன் (வயது 48) இவர்தனக்கு சொல்லுமாறு மோட்டார் சைக்கிள் வாகனத்தை தனது வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு 11 மணியளவில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். 

    அதன்பிறகு அவர் இன்று அதிகாலை வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமி அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    • கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் பக்தர்கள் பொதுமக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வடக்கு வாசலில் மயான சுடலை மாட சுவாமி கோவில் அமைந்து உள்ளது.

    இந்தக் கோவிலில் ஜீர னோத்தாரண சாஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா 14-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. நாளை இரவு 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும் புண்யாக வாஜனமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 8 மணிக்கு பரிகார பூஜைகள் நடக்கிறது. நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) காலை7 மணிக்கு மங்கள இசையும் 7.30 மணிக்கு பிராயசித்த பூஜைகள் ஆரம்ப நிகழ்ச்சி யும் நடக்கிறது. 8 மணிக்கு கலச பூஜை மற்றும் ஹோ மங்கள் நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து கணியான் கூத்து மகுட கச்சேரி நடக்கிறது. 9 மணிக்கு பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடக்கிறது. 10 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் களபம்சார்த்துதல் நடக்கிறது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு ஊட்டுப்படையல் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு வாஸ்து சாந்தி, வாஸ்து பூஜை, பிரவேச பலி போன்றவை நடக்கிறது. 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் புண்யாக வாஜனம்நடக்கிறது.6-30 மணிக்கு எஜமான சங்கல்பம் ஆச்சார்ய வர்ணம், கும்ப அலங்காரம் கலாஹர்ஷனம் போன்றவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி யாக சாலை பூஜை எழுந்தருளல் நிகழ்ச்சியும் 7.30 மணிக்கு முதலாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம் 8.30 மணிக்கு திரவியாகுதியும் தீபாராதனையும் நடக்கிறது. 9 மணிக்குஅருட்பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

    13-ந்தேதி காலை 6.30 மணிக்கு மங்கள இசையும் 7.30 மணிக்குவிக்னேஸ் வரபூஜை மற்றும் புண்யாக வாஜனம் நடக்கிறது. 8 மணிக்கு வேத பாராயணமும் 9 மணிக்கு இரண்டாம்காலயாகசாலை பூஜைகள் ஆரம்பமும் நடக்கிறது. 10.30 மணிக்கு திரவியாகுதி, வஸ்திராகுதி, பூர்ணாகுதி, போன்ற பூஜை களும் பகல் 11 மணிக்கு தீபா ராதனை மற்றும் அருட்பிர சாதம் வழங்குதலும் நடக் கிறது. மாலை5 மணிக்கு மங்கள இசையும் 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் புண்யாக வாஜனமும் நடக்கிறது. 6.30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை ஆரம்பமும் இரவு 8 மணிக்கு திரவியாகுதி, வஸ்திராகுதி, பூர்ணாகுதி போன்ற பூஜைகளும் நடக்கிறது. 9.30 மணிக்கு தீபாராதனையும் 10 மணிக்கு அருட்பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.

    14-ந்தேதி காலை 6 மணிக்கு மங்கள இசையும் 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் புண்யாக வாஜ னம் நடக்கிறது. 7 மணிக்கு நான்காம் கால யாகசால பூஜைகள் ஆரம்பமாகிறது. 7.30 மணிக்கு ஸபர்சாகுதி, நயனோன்விலனம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை போன்ற வை நடக்கிறது.பின்னர் 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மயான சுடலை மாடசுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகமும் அதைத்தொடர்ந்து அபிஷே கமும் நடக்கிறது.

    பகல் 11 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது. 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கொட்டாரம் மேலத்தெரு ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தான நிர்வாகிகள், கீழத் தெரு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் நிர்வா கிகள் வடக்கு தெரு ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் பக்தர்கள் பொதுமக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • வலையில் சிக்கிக் கொண்டிருந்த ராட்சதமலைப் பாம்பை லாவகமாக பிடித்த வனத்துறையினர்
    • பாதுகாப்பான காட்டுப் பகுதியில் கொண்டு பத்திரமாக விட்டனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள மகாராஜபுரத்தில் இலவணிகர் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் ஏராளமான வீடுகள் உள்ளன.

    இந்த வீடுகள் குளத்தின் கரையில் அமைந்து உள்ளதால் பாம்புகள் மற்றும் விஷ சந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்காக மீன்பிடி வலைகளை தடுப்பு வேலிகள் போன்று வீட்டை சுற்றி அமைத்துஉள்ளனர். இருப்பினும் இந்த மீன் பிடி வலையில் நேற்று ராட்சதமலைப்பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டது. அந்த பாம்பு வலையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    உடனே இதுபற்றி வனத் துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன் பேரில் மருந்துவாழ் மலை வேட்டை தடுப்பு காவலர் பிரவீன் தலைமையில் வனத் துறையினர் சம்பவ இடத் துக்கு வரைந்து வந்தனர். அவர்கள் அந்த வலையில் சிக்கிக் கொண்டிருந்த ராட்சதமலைப் பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்தப் பாம்பு சுமார் 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது.

    அந்த ராட்சத மலைப் பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பான காட்டுப் பகுதியில் கொண்டு பத்திர மாக விட்டனர்.

    • பிரதமர் மோடி, அண்ணா, கருணாநிதி உருவங்களை வரைந்து அசத்தல்
    • நல்லாசிரியர் விருது பெற்றவர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் வை. கோபால கிருஷ்ணன் என்ற கோபால் (வயது 67), ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்.

    இவர் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றும் போது மாணவர்களை வைத்து ஆண்டுதோறும் ஓவிய கண்காட்சிகளை நடத்தி வந்து உள்ளார்.

    நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ள வை. கோபாலகிருஷ்ணன் ஓய்வுக்கு பிறகு வீட்டில் முடங்கி கிடக்க கூடாது என்று ஓவியக்கலையில் சிறப்பு படைப்புகளை படைக்க தொடங்கினார்.

    சாதாரணமாக வரையும் ஓவிய படைப்புகளில் இருந்து மாறுபட்டு வண்ண மணலைக் கொண்டு மணல் ஓவியம் வரையும் கலையில் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் உருவப்படங்களை மணல் ஓவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார்.

    தான் வரையும் மணல் ஓவிய படைப்புகளை கண்காட்சிபடுத்தியும் வருகிறார். இந்த மணல் ஓவியங்களை உருவாக்குவ தற்காக கன்னியாகுமரி கடற்கரையில் கிடைக்கும் கருப்பு, சிவப்பு, ரோஸ், வெள்ளை போன்ற பல வண்ண கலர் மணல்களை சேகரித்து வைத்துள்ளார்.

    இந்த பல வண்ண மணல்களைக் கொண்டு மகாத்மாகாந்தி, பாரதியார், பிரதமர் நரேந்திர மோடி, முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் முகதோற்ற உருவங்களை மணல் ஒட்டோவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அரசியல் தலைவர்களின் மணல் ஓவியங்களை வரை வதற்கு முன்பு பென்சில் மூலம் அட்டையில் "ஸ்கெட்ச்" போட்டு முன் வரைவு செய்து அதன் மேல் பலவண்ண மணல் களை ஒட்டி இந்த மணல் ஓவியத்தை வரைந்து உள்ளேன்.

    நான் படைத்த மணல் ஓவியங்கள் மற்றும் செய்தித்தாள் காகித ஒட்டோ வியங்களை காமராஜர் பிறந்த தினமான வருகிற 15-ந்தேதிஅன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சிய கத்தில் நடைபெறும் கல்வி வளர்ச்சி நாள் கண்காட்சி யில் இடம் பெற உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் கன்னியாகுமரியில் நடந்தசினிமா படப்பிடிப்புக்கு வந்த நடிகர் சூர்யாவிடம் அவரது தந்தை நடிகர் சிவகுமாரின் உருவத்தை இவர் மணல் ஓவியமாக வரைந்து அவரிடம் நேரில் சென்று கொடுத்து பாராட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×