கொட்டாரம் அருகே வலையில் சிக்கிய 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பு

வலையில் சிக்கிக் கொண்டிருந்த ராட்சதமலைப் பாம்பை லாவகமாக பிடித்த வனத்துறையினர் பாதுகாப்பான காட்டுப் பகுதியில் கொண்டு பத்திரமாக விட்டனர்.
கொட்டாரம் அருகே வலையில் சிக்கிய 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பு
Published on

கன்னியாகுமரி:

கொட்டாரம் அருகே உள்ள மகாராஜபுரத்தில் இலவணிகர் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் ஏராளமான வீடுகள் உள்ளன.

இந்த வீடுகள் குளத்தின் கரையில் அமைந்து உள்ளதால் பாம்புகள் மற்றும் விஷ சந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்காக மீன்பிடி வலைகளை தடுப்பு வேலிகள் போன்று வீட்டை சுற்றி அமைத்துஉள்ளனர். இருப்பினும் இந்த மீன் பிடி வலையில் நேற்று ராட்சதமலைப்பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டது. அந்த பாம்பு வலையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

உடனே இதுபற்றி வனத் துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன் பேரில் மருந்துவாழ் மலை வேட்டை தடுப்பு காவலர் பிரவீன் தலைமையில் வனத் துறையினர் சம்பவ இடத் துக்கு வரைந்து வந்தனர். அவர்கள் அந்த வலையில் சிக்கிக் கொண்டிருந்த ராட்சதமலைப் பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்தப் பாம்பு சுமார் 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது.

அந்த ராட்சத மலைப் பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பான காட்டுப் பகுதியில் கொண்டு பத்திர மாக விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com