search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டர் சைக்கிள்"

    • 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பூட்டை உடைத்து அந்த வாலிபரே திருடி சென்று இருப்பது சி.சி.டி.வி. கேமராவில் தெரிய வந்தது

    நாகர்கோவில்,ஜூன்.7-

    நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டுள்ளார்.

    இதையடுத்து போக்குவரத்து பிரிவு போலீசார் கலெக்டர் அலுவலக வாசலில் தினமும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வடசேரி, கோட்டார், செட்டிகுளம் பகுதிகளிலும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. ஹெல்மெட் அணியாமல் வருப வர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வசாமி தலைமை யிலான போலீசார் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை யில் வாகன சோத னையில் ஈடுபட்டபோது வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்தார்.

    போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது மோட்டார் சைக்கிளில் பதிவு எண்ணும் இல்லாதது தெரிய வந்தது. இதனால் போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததுடன் அந்த வாலி பருக்கு அபராதம் விதித்த னர். மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் வீல் பூட்டு போட்டுவிட்டு சென்றனர்.

    பின்னர் வந்து பார்த்த போது அந்த மோட்டார் சைக்கிளில் போடப்பட்டு இருந்த பூட்டை உடைத்து அந்த வாலிபரே திருடி சென்று இருப்பது சி.சி.டி.வி. கேமராவில் தெரிய வந்தது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்ல சாமி வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் அம் மாண்டி விளையைச் சேர்ந்த விஷ்வா (வயது 23) மீது வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.அவர் மீது இந்திய தண்ட னைச் சட்டம் 427, 379 ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போலீசார் விஷ்வாவை பிடித்துள்ளனர். பிடிபட்ட விஷ்வாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தூக்கி வீசப்பட்ட முருகன் படுகாயம் அடைந்தார்.
    • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நாகர்கோவில் :

    வடசேரி ஆசாரிமார் மேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 59) தச்சு தொழிலாளி.இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஒழுகினசேரி பகுதியில் ரோட்டை கடந்து சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கீழே விழுந்த பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி பழனிசாமி உயிரிழந்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள லக்கமநாயக்கன்பட்டி என்ற இடத்தில் நேற்று முன்தினம் 1ந்தேதி தேதி அன்று திங்கட்கிழமை காலை லக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (77) என்பவர் மொபெட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த முத்தூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி வேன் ஒன்று பழனிச்சாமி ஓட்டி வந்த மோட்டர் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கீழே விழுந்த பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்று முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கன்னியாகுமரி போலீசில் புகார்
    • கன்னியாகுமரி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர்கிருஷ்ணன் (வயது 48) இவர்தனக்கு சொல்லுமாறு மோட்டார் சைக்கிள் வாகனத்தை தனது வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு 11 மணியளவில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். 

    அதன்பிறகு அவர் இன்று அதிகாலை வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமி அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    ×