

வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள லக்கமநாயக்கன்பட்டி என்ற இடத்தில் நேற்று முன்தினம் 1ந்தேதி தேதி அன்று திங்கட்கிழமை காலை லக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (77) என்பவர் மொபெட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த முத்தூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி வேன் ஒன்று பழனிச்சாமி ஓட்டி வந்த மோட்டர் சைக்கிள் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்று முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.