என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொட்டாரம் அருகே மோட்டர் சைக்கிள் திருட்டு
- கன்னியாகுமரி போலீசில் புகார்
- கன்னியாகுமரி போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
கொட்டாரம் அருகே உள்ள பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர்கிருஷ்ணன் (வயது 48) இவர்தனக்கு சொல்லுமாறு மோட்டார் சைக்கிள் வாகனத்தை தனது வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு 11 மணியளவில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
அதன்பிறகு அவர் இன்று அதிகாலை வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமி அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story






