search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி கடற்கரையில் சேகரித்த பல வண்ண மணல்களால் ஓவியம் வரையும் கொட்டாரம் ஆசிரியர்
    X

    கன்னியாகுமரி கடற்கரையில் சேகரித்த பல வண்ண மணல்களால் ஓவியம் வரையும் கொட்டாரம் ஆசிரியர்

    • பிரதமர் மோடி, அண்ணா, கருணாநிதி உருவங்களை வரைந்து அசத்தல்
    • நல்லாசிரியர் விருது பெற்றவர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் வை. கோபால கிருஷ்ணன் என்ற கோபால் (வயது 67), ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்.

    இவர் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றும் போது மாணவர்களை வைத்து ஆண்டுதோறும் ஓவிய கண்காட்சிகளை நடத்தி வந்து உள்ளார்.

    நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ள வை. கோபாலகிருஷ்ணன் ஓய்வுக்கு பிறகு வீட்டில் முடங்கி கிடக்க கூடாது என்று ஓவியக்கலையில் சிறப்பு படைப்புகளை படைக்க தொடங்கினார்.

    சாதாரணமாக வரையும் ஓவிய படைப்புகளில் இருந்து மாறுபட்டு வண்ண மணலைக் கொண்டு மணல் ஓவியம் வரையும் கலையில் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் உருவப்படங்களை மணல் ஓவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார்.

    தான் வரையும் மணல் ஓவிய படைப்புகளை கண்காட்சிபடுத்தியும் வருகிறார். இந்த மணல் ஓவியங்களை உருவாக்குவ தற்காக கன்னியாகுமரி கடற்கரையில் கிடைக்கும் கருப்பு, சிவப்பு, ரோஸ், வெள்ளை போன்ற பல வண்ண கலர் மணல்களை சேகரித்து வைத்துள்ளார்.

    இந்த பல வண்ண மணல்களைக் கொண்டு மகாத்மாகாந்தி, பாரதியார், பிரதமர் நரேந்திர மோடி, முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் முகதோற்ற உருவங்களை மணல் ஒட்டோவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அரசியல் தலைவர்களின் மணல் ஓவியங்களை வரை வதற்கு முன்பு பென்சில் மூலம் அட்டையில் "ஸ்கெட்ச்" போட்டு முன் வரைவு செய்து அதன் மேல் பலவண்ண மணல் களை ஒட்டி இந்த மணல் ஓவியத்தை வரைந்து உள்ளேன்.

    நான் படைத்த மணல் ஓவியங்கள் மற்றும் செய்தித்தாள் காகித ஒட்டோ வியங்களை காமராஜர் பிறந்த தினமான வருகிற 15-ந்தேதிஅன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சிய கத்தில் நடைபெறும் கல்வி வளர்ச்சி நாள் கண்காட்சி யில் இடம் பெற உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் கன்னியாகுமரியில் நடந்தசினிமா படப்பிடிப்புக்கு வந்த நடிகர் சூர்யாவிடம் அவரது தந்தை நடிகர் சிவகுமாரின் உருவத்தை இவர் மணல் ஓவியமாக வரைந்து அவரிடம் நேரில் சென்று கொடுத்து பாராட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×