search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா பறிமுதல்"

    • குட்கா பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி அங்குள்ள லோடு வேனில் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
    • போலீசார் குடோனில் மேற்கொண்ட சோதனையில் 85 மூட்டையில் 1500 கிலோ குட்கா இருந்ததது.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபாடு கொண்டிருந்தனர். அப்போது அந்தியூர்-பவானி ரோடு, செம்புளிச்சாம்பாளையம் பகுதி, கற்பகம் நகர், 3-வது குறுக்கு வீதியில் உள்ள ஒரு குடோனில் தமிழ அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பெயர் போலீசார் குடோனுக்குள் சென்று அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த சிலர் குட்கா பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி அங்குள்ள லோடு வேனில் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

    போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சேலம் மாவட்டம் மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அஜித் (23), ஓமலூர் திமிரிகோட்டை ராமன் பட்டியைச் சேர்ந்த மணி (30), சீலநாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம்(42), கார்த்தி (20) என தெரிய வந்தது.

    போலீசார் குடோனில் மேற்கொண்ட சோதனையில் 85 மூட்டையில் 1500 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும்.

    இந்த குடோனின் உரிமையாளர் பவானியை சேர்ந்த ரவி என தெரிய வந்தது. ரவி தலைமறைவு ஆகிவிட்டார்.

    வெளியிடங்களில் இருந்து குட்கா கொண்டு வரப்பட்டு இங்கிருந்து பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித் ,மணி, செல்வம், கார்த்தி ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் குடோன் உரிமையாளர் ரவியை தேடி வருகின்றனர்.

    ரவி சிக்கினால் தான் குட்கா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது எங்கு விற்பனை செய்யப்படுகிறது இதில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என முழு விவரம் தெரிய வரும்.

    கடத்தலுக்கு பயன்படு த்தப்பட்ட லோடு வேன் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 1500 கிலோ குட்கா பொருட்க ளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • கடையில் சோதனை செய்து போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரிய வந்தது.
    • ஆளவந்தான், அனவரதன், வேத நாராயணன், சேட்டு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரின் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருவதோடு வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் ராமாபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு மளிகை கடையில் சோதனை செய்து போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பார்த்த போது ஹான்ஸ், பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் சுமார் 183 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமாபுரம் சேர்ந்த ஆளவந்தான், அனவரதன், வேத நாராயணன், சேட்டு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆள வந்தார், அனவரதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதே போல் பண்ருட்டி, விருதாச்சலம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பாதிரிப்புலியூர், மங்கலம்பேட்டை, பெண்ணாடம், முத்தாண்டிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் 8 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    • காரில் 15 மூட்டைகளாக கட்டி வைத்து கடத்தல்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா போலீசார் சென்னை - பெங்களூரு சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . சென்னை நோக்கி வந்த காரை போலீசார் சோதனையிட்டனர்.

    அதில் 15 மூட்டைகளில் 150 கிலோ ஹான்ஸ் புகையிலை, குட்கா இருந்தன.இவை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்திச்செல்லப்படுவது தெரிய வந்தது . இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் பாலிமார் மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவரான கோபால்சிங் மகன் மகாவீர் சிங் ( வயது 24 ) , ராஜஸ்தான் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த ராம்சோடா மகன் சந்திரராம் ( 23 ) ஆகியோரை கைது செய்து காருடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.கைப்பற்றப்பட்ட புகையிலை , குட்கா பொருட்களின் மதிப்பு ரூ .1.50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    • 7 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று இரவு சாய் பன்சாகொள்ளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் ஒரு அட்டை பெட்டி எடுத்து வந்தார் அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரிடம் இருந்து 7 கிலோ அளவு உள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அங்கு குட்காவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

    கோவை,

    கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் சோதனை செய்து குட்காவை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவினாசி சாலை எல்.ஐ.சி சந்திப்பு அருகே சிலர் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு குட்காவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் குட்காவை விற்பனைக்கு வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரவீன் குமார் (வயது 22) மற்றும் நிலீஸ்குமார்(28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 140 கிலோ குட்கா மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கடை உரிமையாளர் ரமேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • 43 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான 76 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிங்காநல்லூர் போலீசாருக்கு நீலிகோணாம்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் குட்காவை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக 43 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான 76 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அதனை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அப்துல்ரகுமான் (வயது 42), திருப்பூர் பல்லடத்தை சேர்ந்த அர்ஜுனன் (39) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் சோதனை சிக்கியது
    • 17 கிலோ பறிமுதல்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பகுதியில் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடுத்தெரு பகுதியில் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது முகமது இப்ராஹிம் (வயது 46), அதே பகுதியை சேர்ந்த முகமது ரபீக் (34). ஆகியோர் வீட்டில் குட்கா போன்ற போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    2 மூட்டைகளில் இருந்த 17 கிலோ எடை கொண்ட குட்கா ேபான்ற போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 25ஆயிரம் இருக்கும் எனகூறப்படுகிறது.

    • 9 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.
    • ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை

    கோவை ரெயில் நிலையம் பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீசார் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 1-வது பிளாட்பாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் ரெயில் கோவை வந்தது. உடனே போலீசார் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறி சோதனை செய்தனர். ரெயில் பெட்டியில் கழிவறை அருகே ஒரு வெள்ளை மூட்டை இருந்தது. போலீசார் அந்த மூட்டை குறித்து விசாரணை நடத்தினர்.

    ஆனால் ரெயிலில் இருந்த பயணிகள் அது யாருடையது என தெரியவில்லை என்றனர். சந்தேகம் அடைந்த போலீசார் அதனை சோதனை செய்தனர். அதில் 9 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் எடுத்துச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குட்காவை கடத்தி வந்தது யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • மூட்டைகளை திறந்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா மற்றும் புகையிலை போன்றவற்றை இருந்தது.

    கடலூர்:

    நெய்வேலி அருகே பொன்னாரி அகரம் சுங்கச்சாவடி அருகே ஊமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது பல மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா மற்றும் புகையிலை போன்றவற்றை இருந்தது.

    இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கார் மற்றும் இரண்டு நபர்களை பிடித்து வந்து ஊமங்கலம் போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சங்கர் ராம் (வயது 34), லக்குமா ராம் (27) என்பது தெரிய வந்தது. இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 16 மூட்டைகள் ஹான்ஸ், 12 மூட்டைகள் பான் மசாலா, 12 மூட்டைகள் புகையிலை போன்றவற்றை கொண்டு வந்தது தெரிய வந்தது . மேலும் இதன் எடை சுமார் 350 கிலோ 6 லட்சம் மதிப்பாகும். 

    இது குறித்து ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர் ராம், லக்குமா ராம் ஆகியோரை கைது செய்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • குட்கா கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 769 மோட்டார்சைக்கிள்களும், 679 கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட போலீசாரும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன்படி கடந்த 1 ஆண்டில் ரூ.71 கோடியே 58 லட்சத்து 97 ஆயிரத்து 800 மதிப்பிலான குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே 1-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரையில் 17 மாதங்களில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 53,235 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடமிருந்து 7 லட்சத்து 95 ஆயிரத்து 442 கிலோ மதிப்பிலான குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது.

    குட்கா கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 769 மோட்டார்சைக்கிள்களும், 679 கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 52 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குட்கா விற்பனை தொடர்பாக 13,534 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

    இதே போன்று 1½ ஆண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 18,569 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.40 கோடியே 47 லட்சத்து 18 ஆயிரத்து 253 மதிப்பிலான 35 ஆயிரத்து 496 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் 4023 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    1648 இரு சக்கர வாகனங்களும், 239 நான்கு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 564 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து உள்ளது.

    இதற்கிடையே கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 12-ந்தேதி தொடங்கிய இந்த வேட்டையில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இப்படி போலீஸ் நடவடிக்கை தீவிரமாக இருந்த போதிலும் கஞ்சா, குட்கா கடத்தல் ஆசாமிகள், கடல் வழியாகவும், பஸ், ரெயில் வழியாகவும் கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    • 8 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கடத்திய 8 கிலோ போதை குட்கா பொருட்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து கடத்திய நபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் ரெயில்வே போலீசார் நேற்று மாலை பிளாட்பாரத்திலும் ரெயில்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்தில் உள்ள 4-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

    அப்போது அந்த ரெயிலில் உள்ள பின்பக்க பொது பெட்டியில் சோதனை செய்தபோது கழிவறையின் அருகே கேட்பாரற்று கிடந்த சோல்டர் பேக் பையில் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட பான் மசாலா ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் குட்கா பொருள் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போதைப் பொருள் கடத்தி வந்த நபர் குறித்து ரெயில் பெட்டியில் விசாரணை மேற்கொண்டதில் கடத்தி வந்தவர் குறித்த விவரம் தெரியாததால் சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள 8 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடும் ரெயிலில் போதைப் கடத்திய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீ சார் பறிமுதல் செய்து வழக்கு பதிவுசெய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, தீவிர சோதனை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், முதுநகர், காடாம் புலியூர் ஆகிய பகுதிகளில் 240 கிராம் கஞ்சாவும், மங்க லம்பேட்டை, கருவேப்பி லங்குறிச்சி, புதுப்பே ட்டை, ஸ்ரீமுஷ்ணம், நெல்லிக்கு ப்பம், ஆலடி ஆகிய பகுதி களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீ சார் பறிமுதல் செய்து வழக்கு பதிவுசெய்தனர். இதில் கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் சூர்யா (26), சிதம்பரம் நடராஜன் (41), கடலூர் புதுப்பாளையம் சீனிவாசன் (22), பணிக்கன் குப்பம் நவீன் (21), கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் ராகுல் (21), ஆகியோரை கஞ்சா வழக்கிலும், மங்கலம் பேட்டையை சேர்ந்த அக்பர் அலி (51), சிவகலை (34) என்ற பெண், கருவேப்பி லங்குறிச்சி காசிநாதன் (55), பண்ருட்டி ஏழுமலை (61), ஸ்ரீமுஷ்ணம் ராஜதுரை (61), நெல்லிக்குப்பம் கணபதி (50), விருத்தாச்சலம் வீரா ரெட்டி குப்பம் பீட்டர்நாயகம் (64) ஆகியோரை தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×