கோவையில் 140 கிலோ குட்கா பறிமுதல்

வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு குட்காவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
கோவையில் 140 கிலோ குட்கா பறிமுதல்
Published on

கோவை,

கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் சோதனை செய்து குட்காவை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவினாசி சாலை எல்.ஐ.சி சந்திப்பு அருகே சிலர் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு குட்காவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் குட்காவை விற்பனைக்கு வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரவீன் குமார் (வயது 22) மற்றும் நிலீஸ்குமார்(28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 140 கிலோ குட்கா மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கடை உரிமையாளர் ரமேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com