search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா வேட்டை"

    ைகதான நபர்களிடம் இருந்து கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    தமிழகத்தில் கஞ்சா, குட்கா, போன்ற தடை செய்யப்பட்டபோதைப் பொருள்நடமாட்டத்தை ஒழிக்க தமிழ்நாடுகாவல்துறை ஆபரேஷன் கஞ்சா வேட்டை3.0 நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ைகதான நபர்களிடம் இருந்து கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    பண்ருட்டி, புதுப்பேட்டை பகுதியில் இன்று போலீசார்நடத்திய கஞ்சா வேட்டையில் ரெட்டிக்குப்பம்பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது 22)என்பவரை புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • குட்கா கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 769 மோட்டார்சைக்கிள்களும், 679 கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட போலீசாரும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன்படி கடந்த 1 ஆண்டில் ரூ.71 கோடியே 58 லட்சத்து 97 ஆயிரத்து 800 மதிப்பிலான குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே 1-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரையில் 17 மாதங்களில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 53,235 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடமிருந்து 7 லட்சத்து 95 ஆயிரத்து 442 கிலோ மதிப்பிலான குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது.

    குட்கா கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 769 மோட்டார்சைக்கிள்களும், 679 கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 52 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குட்கா விற்பனை தொடர்பாக 13,534 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

    இதே போன்று 1½ ஆண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 18,569 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.40 கோடியே 47 லட்சத்து 18 ஆயிரத்து 253 மதிப்பிலான 35 ஆயிரத்து 496 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் 4023 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    1648 இரு சக்கர வாகனங்களும், 239 நான்கு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 564 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து உள்ளது.

    இதற்கிடையே கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 12-ந்தேதி தொடங்கிய இந்த வேட்டையில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இப்படி போலீஸ் நடவடிக்கை தீவிரமாக இருந்த போதிலும் கஞ்சா, குட்கா கடத்தல் ஆசாமிகள், கடல் வழியாகவும், பஸ், ரெயில் வழியாகவும் கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    ×