search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா பறிமுதல்"

    • லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
    • வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகே சூளகிரி காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது, அதில் இரும்பு தகரம் மூலம் தடுப்பு ஏற்படுத்தி தனியறை அமைத்து மறைத்து வைத்திருந்த 150 மூட்டைகளில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    அதனை கைப்பற்றிய போலீசார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3 டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
    • சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக அதிவேகமாக வந்த 3 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் கார்களுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அதனை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரத்குமார் (வயது22), கல்யாணராம் (26), சுரேஷ் (25), கணபத்ராம் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 3 கார்களின் மதிப்பு ரூ.15 லட்சம் எனவும், 3 டன் குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பள்ளிபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் மளிகை கடை, டீ கடை, பெட்டி கடைகளில் ஆய்வு செய்தனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஒரு சில மளிகை கடைகள், பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பள்ளிபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன், பள்ளிபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் மளிகை கடை, டீ கடை, பெட்டி கடைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒட்டமெத்தை பகுதியில் உள்ள டீ கடை, மற்றும் ஆர்.எஸ். சாலையில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவில் அருகே செயல்பட்டு வந்த பெட்டி கடையில் குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து 5½ கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    • பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்து வருவதாக சென்னை ஜெ.ஜெ. நகர் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கத்துக்கு ரகசிய தகவல் வந்தது.
    • முகப்பேர் சீனிவாச குமார தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு குட்கா விற்பனை செய்வதற்காக வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அம்பத்தூர்:

    முகப்பேர் பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்து வருவதாக சென்னை ஜெ.ஜெ. நகர் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கத்துக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் முகப்பேர் பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது முகப்பேர் சீனிவாச குமார தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு குட்கா விற்பனை செய்வதற்காக வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 30 கிலோ குட்கா இருப்பது தெரிய வந்தது.

    குட்கா விற்பனை செய்ய வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த கண்ணன்(39) என்றும் முகப்பேர் பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 30 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    • தாராட்சி கிராமத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • வியாபாரி மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார், இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி கிராமத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடையில் குட்கா, புகையிலை விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து வியாபாரி மணிகண்டனுக்கு சொந்தமான குடோனில் ஆய்வு செய்தபோது 50 மூட்டைகளில் குட்கா, புகையிலை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். இது தொடர்பாக வியாபாரி மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 100 கிலோ சிக்கியது
    • வேலூர் டிரைவர் கைது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் வாலாஜா போலீசார் நேற்று வாலாஜா- பாலாறு அணைக்கட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினிவேன் ஒன்று போலீசாரை பார்த்ததும் நிற்காமல் சென்றது. இதை பார்த்த போலீசார் வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பிடித்து நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 6 அட்டை பெட்டிகளில் சுமார் 100 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது. வேலூரில் இருந்து எடுத்து வந்து கிராமப்புறங்களில் உள்ள பங்கடைகளில் விநியோகம் செய்ய வந்ததும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் மினிவேனுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். வேன் டிரைவர் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஜெய்கணேஷ் (வயது 45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 42 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு
    • வேலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா, குட்கா கடத்து பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களை தடுக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு

    வேலூர், காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய உட்கோட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் சட்டவி ரோதமாக கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொ ருட்கள் விற்கப்படு கின்றனவா என திடீர் சோதனை நடத்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

    42 வழக்குகள் பதிவு

    இதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.40,686 மதிப்புடைய சுமார் 7.056 கிலோ கிராம் குட்கா, ரூ.7,744 மதிப்புடைய 646 பீடிக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.வியாபாரிகள் மீது 42 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக பாப்பாக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இடைகால், பள்ளக்கால் பொதுக்குடி உள்பட சுற்று வட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக பாப்பாக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனால் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில், அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில் பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம், தலைமை காவலர் முத்துராஜ் ஆகியோர் ஒரு வாரத்திற்கு மேலாக பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த மினி சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது லாரியில் சுமார் 28 மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து நடத்திய விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்த காமராஜ் (வயது 45) மற்றும் மினி லாரி டிரைவர் குருவன்கோட்டை அம்பலத்தார் தெருவை சேர்ந்த சிவன் பெருமாள்(38) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்து, குட்கா மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    கடந்த சில மாதங்களாக லோடு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் பள்ளக்கால் பொதுக்குடி, இடைகால், அம்பை என சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் இவர்கள் 2 பேரும் குட்கா விநியோகம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது
    • மேலும் ஒரு இடத்தில் 2 கிலோ குட்கா புகையிலை, மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா புகையிலை விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    கன்னியாகுமரி, நாகர்கோ வில், தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை அமைக் கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் முப்பந்தல் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த 187 கிலோ குட்கா புகையிலையையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட 2 பேரையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தபோது ராஜஸ்தான் ஜோலார் பகுதியை சேர்ந்த லஷ்மன் குமார் (வயது 27), மகேந்திர குமார் (27) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்த னர். மேலும் இந்த வழக்கில் பெங்களூரை சேர்ந்த தீபா ராம் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    குலசேகரம் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையிலான போலீசார் கல்லடிமா மூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். போலீசார் அவரிடம் சோதனை செய்த போது 2 கிலோ குட்கா புகையிலை, மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.

    இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்த னர். பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது செருப்பாலூர், கல்லடி மாமுடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (40) என்பது தெரியவந்தது. போலீ சார் அவரை கைது செய்தனர்.

    • தர்மபுரி எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 100 மூட்டைகளில் ரூ.3.23 லட்சம் மதிப்புடைய போதை பொருட்களை கடத்தி சென்றனர்.

    காரிமங்கலம்,

    கர்நாடகா மாநிலம் பெங்களுருவிலிருந்து, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்கு குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்துவதாக தர்மபுரி எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து அகரம் பிரிவு சாலை, மொரப்பூர் பிரிவு சாலை, கும்பாரஅள்ளி சோதனை சாவடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    சந்தேகத்தின் பேரில் பெங்களூரில் இருந்து வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி செல்வது தெரியவநதது.

    இதில் 100 மூட்டைகளில் ரூ.3.23 லட்சம் மதிப்புடைய போதை பொருட்களையும், சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  

    • போலீசார் காரில் குட்கா கடத்தி வந்த 3 பேரை கைது செய்தனர்.
    • 500 கிலோ குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

    நத்தம்:

    தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டபோதும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கடத்தப்பட்டு ரகசியமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பெங்களூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வழியாக அதிக அளவில் குட்கா கடத்தப்படுகிறது.

    போலீசார் அதிரடி நடவடிக்கையால் பல்வேறு பகுதிகளில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி காரில் குட்கா கடத்திவரப்படுவதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீஸ் - இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப் -இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் மற்றும் போலீசார் நத்தம் - அய்யாபட்டி சாலையில் உள்ள தேங்காய் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு இருந்த சொகுசுகாரில் விற்பனைக்காக 500 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் காரில் குட்கா கடத்தி வந்த ஊராளிபட்டியை சேர்ந்த சுதாகர்(வயது35), நத்தத்தை சேர்ந்த முகமது ஈசாக் (34), ஜஹாங்கீர் (37) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து 500 கிலோ குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தப்பியோடிய கார் டிரைவர் ராகுல், நாகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • இரவு 12 மணியளவில் சந்தேகப்படும் விதமாக வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 50 மூட்டை குட்காவையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

      தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கீழ்க்கொல்லப்பட்டி கிராமத்தில் இரவு 12 மணியளவில் சந்தேகப்படும் விதமாக வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் 50 மூட்டை குட்கா இருப்பது தெரியவந்தது.

    இதை அறிந்த பகுதி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாது மற்றும் ஊர் பொதுமக்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 50 மூட்டை குட்காவையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×