என் மலர்
உள்ளூர் செய்திகள்

சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்- 2 பேர் கைது
- வெள்ளிசந்தை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வதாக பாலக் கோடு போலீஸ் டி.எஸ்.பி மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், கொலசனஅள்ளி நெடுஞ்சாலையில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வெள்ளிசந்தை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான 156 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைதொடர்ந்து டிரைவரை பிடித்து விசாரித்ததில் அவர் கிருஷ்ணகிரி கொத்தப்பள்ளியை சேர்ந்த சிராஜ் (25) என்பதும், உடன் வந்தவர் கர்நாடகா மாநிலம் சிக்ககொல்லர அட்டி கிராமத்தை சேர்ந்த திலக்குமார் (24) என்பதும் தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் 2 பேரும் பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்க்கு குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து குட்காவுடன் ரூ.5 லட்சம் மதிப்பிலான சொகுசு காரையும் பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.






