search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் தீவிர சோதனை: கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - 9 பெண்கள் உட்பட 40 பேர் கைது
    X

    கடலூர் மாவட்டத்தில் தீவிர சோதனை: கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - 9 பெண்கள் உட்பட 40 பேர் கைது

    • கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கையாக தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது கடைகள் மற்றும் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்தில் போலீசார் திடீரென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நெல்லிக்குப்பம், கடலூர் புதுநகர், முதுநகர், விருத்தாச்சலம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் மாவட்ட முழுவதும் விற்பனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஒரே நாளில் மாவட்ட முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக 9 பெண்கள் உட்பட 40 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 30 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் இது போன்ற நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×