search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Confiscation of gutka"

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பள்ளிபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் மளிகை கடை, டீ கடை, பெட்டி கடைகளில் ஆய்வு செய்தனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஒரு சில மளிகை கடைகள், பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பள்ளிபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன், பள்ளிபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் மளிகை கடை, டீ கடை, பெட்டி கடைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒட்டமெத்தை பகுதியில் உள்ள டீ கடை, மற்றும் ஆர்.எஸ். சாலையில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவில் அருகே செயல்பட்டு வந்த பெட்டி கடையில் குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து 5½ கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    • 100 கிலோ சிக்கியது
    • வேலூர் டிரைவர் கைது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் வாலாஜா போலீசார் நேற்று வாலாஜா- பாலாறு அணைக்கட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினிவேன் ஒன்று போலீசாரை பார்த்ததும் நிற்காமல் சென்றது. இதை பார்த்த போலீசார் வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பிடித்து நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 6 அட்டை பெட்டிகளில் சுமார் 100 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது. வேலூரில் இருந்து எடுத்து வந்து கிராமப்புறங்களில் உள்ள பங்கடைகளில் விநியோகம் செய்ய வந்ததும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் மினிவேனுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். வேன் டிரைவர் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஜெய்கணேஷ் (வயது 45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 42 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு
    • வேலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா, குட்கா கடத்து பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களை தடுக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு

    வேலூர், காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய உட்கோட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் சட்டவி ரோதமாக கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொ ருட்கள் விற்கப்படு கின்றனவா என திடீர் சோதனை நடத்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

    42 வழக்குகள் பதிவு

    இதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.40,686 மதிப்புடைய சுமார் 7.056 கிலோ கிராம் குட்கா, ரூ.7,744 மதிப்புடைய 646 பீடிக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.வியாபாரிகள் மீது 42 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • காரில் 15 மூட்டைகளாக கட்டி வைத்து கடத்தல்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா போலீசார் சென்னை - பெங்களூரு சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . சென்னை நோக்கி வந்த காரை போலீசார் சோதனையிட்டனர்.

    அதில் 15 மூட்டைகளில் 150 கிலோ ஹான்ஸ் புகையிலை, குட்கா இருந்தன.இவை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்திச்செல்லப்படுவது தெரிய வந்தது . இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் பாலிமார் மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவரான கோபால்சிங் மகன் மகாவீர் சிங் ( வயது 24 ) , ராஜஸ்தான் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த ராம்சோடா மகன் சந்திரராம் ( 23 ) ஆகியோரை கைது செய்து காருடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.கைப்பற்றப்பட்ட புகையிலை , குட்கா பொருட்களின் மதிப்பு ரூ .1.50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    • 7 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று இரவு சாய் பன்சாகொள்ளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் ஒரு அட்டை பெட்டி எடுத்து வந்தார் அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரிடம் இருந்து 7 கிலோ அளவு உள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சோதனை சிக்கியது
    • 17 கிலோ பறிமுதல்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பகுதியில் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடுத்தெரு பகுதியில் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது முகமது இப்ராஹிம் (வயது 46), அதே பகுதியை சேர்ந்த முகமது ரபீக் (34). ஆகியோர் வீட்டில் குட்கா போன்ற போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    2 மூட்டைகளில் இருந்த 17 கிலோ எடை கொண்ட குட்கா ேபான்ற போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 25ஆயிரம் இருக்கும் எனகூறப்படுகிறது.

    • 8 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கடத்திய 8 கிலோ போதை குட்கா பொருட்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து கடத்திய நபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் ரெயில்வே போலீசார் நேற்று மாலை பிளாட்பாரத்திலும் ரெயில்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்தில் உள்ள 4-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

    அப்போது அந்த ரெயிலில் உள்ள பின்பக்க பொது பெட்டியில் சோதனை செய்தபோது கழிவறையின் அருகே கேட்பாரற்று கிடந்த சோல்டர் பேக் பையில் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட பான் மசாலா ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் குட்கா பொருள் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போதைப் பொருள் கடத்தி வந்த நபர் குறித்து ரெயில் பெட்டியில் விசாரணை மேற்கொண்டதில் கடத்தி வந்தவர் குறித்த விவரம் தெரியாததால் சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள 8 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடும் ரெயிலில் போதைப் கடத்திய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 140 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் அரசால் தடை செய்யபட்ட குட்கா பான்மசாலா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யபட்டு வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    மேலும் இது சம்மந்தமாக ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து அரசால் தடைசெய்யபட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என போலீசார் கடைகளில் சோதனை நடத்தினர்.

    மேலும் ஆரணி அருகே முள்ளண்டிரம் கிராமத்தை சேர்ந்த மரகதம்மாள் என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7லட்சம் மதிப்பிலான 16 மூட்டையில் 140 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மரக தம்மாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சோதனையில் சிக்கியது
    • 5 பேர் கைது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    நேற்று ஆம்பூர் டவுன் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனின் தனிப்படை போலீசார் கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர். அப்போது ஆம்பூர் கே எம் நகர் பகுதியில் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த 5 கடைகளில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
    • 2011 -ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது.

    ேசலம்:

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல், பதுக்கல் போன்றவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. புகைப்பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள் என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 2011 -ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் படி, போதைப்பொருட்களை, உற்பத்தி செய்வதோ, சேமித்து வைப்பதோ, எடுத்து செல்வதோ, விற்பனை செய்வதோ, பதுக்கி வைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

    5 கடைகளுக்கு சீல் வைப்பு

    சேலம் மாநகர பகுதியில் குட்கா, போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கைதாகும் நபர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியை , உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் சூரமங்கலத்திற்கு உட்பட்ட சேலத்தாம்பட்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாக 5 கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து நேற்று அந்த 5 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பட்டியல் தயார்

    இது குறித்து அதிகாரி கள் கூறுகையில், சேலத்தில் இதுவரை தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 90-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

    • 50 போதை பாக்கெட்டுகள் சிக்கியது
    • வியாபாரி மீது வழக்கு பதிவு

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அதே பகுதியில் பங்க் கடை நடத்தி வருகிறார். ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய கூடாது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அவலூர் போலீசார் ஏழுமலை மற்றும் சவுந்தர்ராஜன் அங்குள்ள கடைகளில் சோதனை ஈடுபட்ட போது அங்குள்ள ஒருவர் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 50 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து தடை செய்யப்பட்ட போதை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்று அறிவித்தம் சில பேர் பணம் சம்பாதிக்கும் லாப நோக்கில் மறைமுகமாக விற்பனை செய்கின்றனர். அவர் மீது நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • விழுப்புரத்தில் குடானில் பதுக்கிய 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் குட்கா, பான்பராக், கஞ்சா உள்ளிட்ட போதை பொரு ட்கள் விற்பனையை தடை செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் ேபாலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் உள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் அருகே ராகவ ன்பேட்டை பகுதியில் ஒரு குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக போலீஸ் டி.எஸ்.பி. பார்த்தீபனுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அப்போது அங்குள்ள குடோனில் மூட்டை, மூட்டையாக குட்கா பதுக்கி இருப்பது கண்டு பிடி க்கப்பட்டது. அதன் எடை 200 கிேலா ஆகும். இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் என கணக்கிடபபட்டுள்ளது. இதனை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த குட்காவை அப்பாஸ் என்பவர் பதுக்கி வைத்துள்ளார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள். விழுப்புரம் மேற்கு போலீஸ் சரகம் விராட்டி க்குப்பம பகுதியில் அப்துல்மாலிக் என்ப வரது காலி மனையில் அமைக்கப்பட்டுள்ள குளியல் அறையில் குட்கா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை போலீசார் பறி முதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். தொடர்ந்து அதிரடி வேட்டை நடந்து வருகிறது.

    ×