search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட  20 கடைகளுக்கு சீல் வைக்கப்படும்   அதிகாரிகள் தகவல்
    X

    சேலத்தில் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட 20 கடைகளுக்கு சீல் வைக்கப்படும் அதிகாரிகள் தகவல்

    • தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
    • 2011 -ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது.

    ேசலம்:

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல், பதுக்கல் போன்றவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. புகைப்பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள் என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 2011 -ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் படி, போதைப்பொருட்களை, உற்பத்தி செய்வதோ, சேமித்து வைப்பதோ, எடுத்து செல்வதோ, விற்பனை செய்வதோ, பதுக்கி வைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

    5 கடைகளுக்கு சீல் வைப்பு

    சேலம் மாநகர பகுதியில் குட்கா, போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கைதாகும் நபர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியை , உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் சூரமங்கலத்திற்கு உட்பட்ட சேலத்தாம்பட்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாக 5 கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து நேற்று அந்த 5 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பட்டியல் தயார்

    இது குறித்து அதிகாரி கள் கூறுகையில், சேலத்தில் இதுவரை தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 90-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

    Next Story
    ×